Monday, April 28, 2008

10 சாட்டிலைட்கள் இன்று ஏவியது பி.எஸ்.எல்.வி - இஸ்ரோ சாதனை

சென்னை: உலகிலேயே முதல் முறையாக 10 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) இன்று சாதனை படைத்தது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில், 10 செயற்கைக் கோள்களை ஏவத் திட்டமிட்டது.அதன்படி கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என்று 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையது. இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது। 8 நானோ செயற்கை கோள்களின் மொத்த எடை 50 கிலோ।இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது।


இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது।இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது. இதில் மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா மற்றும் ஹைபர்ஸ்பெக்டரல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.செயற்கைக் கோள்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு கடந்த 18ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.சனிக்கிழமை கவுன்ட்டவுன் தொடங்கியது. இன்று காலை ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும்.உலக அளவில் ஒரே சமயத்தில் அதிக அளவிலான செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டின் மூலம் செலுத்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ரஷ்யா அதிகபட்சமாக 8 செயற்கைக் கோள்களை செலுத்தியுள்ளது. ஏரியான் 7 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றுள்ளது. அமெரிக்கா ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 4 செயற்கைக் கோள்களை மட்டுமே அனுப்புவது வழக்கம் - ஆனால் அடிக்கடி அனுப்புவது குறிப்பிடத்தக்கது.இந்த வகையில் இஸ்ரோ உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைத்தது.ராக்கெட் செலுத்தப்பட்டதும் முதலில் கார்ட்டோஸாட்-2ஏ விண்ணில் நிலைநிறுத்தப்படும்.அதன் பின்னர் ஒவ்வொரு செயற்கைக் கோளாக நிலை நிறுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 100 விநாடிகள் பிடிக்குமாம். அதாவது 1000 விநாடிகளுக்குள் 10 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

பி.எஸ்.எல்.வி -சி9 சிறப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். சனிக்கிழமை இரவு அவர் திருப்பதிக்கு வந்தார். அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகளை மாதவன் நாயர் மேற்கொண்டார். நேற்று காலை சுப்ரபாத நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.Tuesday, April 22, 2008

எம்பி தொகுதி நிதியை ஒழிக்க சோம்நாத் விருப்பம்

எம்பி தொகுதி நிதியை ஒழிக்க சோம்நாத் விருப்பம்நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்போதுள்ள 2 கோடி ரூபாய் என்பதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்படும் நிலையில், அதுபோன்ற மேம்பாட்டு நிதி திட்டத்தையை ஒழிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக மக்களவையில் இன்று கேள்விநேரத்தின் போது பேசிய சமாஜ்வாடிக் கட்சி உறுப்பினர் ரியோட்டி ராமன் சிங், எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரினார்.

இதன்மூலம் மக்களுக்கு அதிக அளவில் உறுப்பினர்கள் உதவ முடியும் என்றும் அவர் கூறினார்.

இதற்குப் பதிலளித்த மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, இந்த விஷயத்தில் தமது கருத்து உறுப்பினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்காது என்றும், தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.

ராமன் சிங் விடுத்த கோரிக்கைக்கு ஒட்டுமொத்த சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்।

source: msn


// இந்த நிதி மூலமாக நமது மக்களுக்கு சில நல்லவைகள் நடைபெற்றுவருகின்றது। அதை ஒழித்துவிட விரும்புகின்றனர்//
மர்பி விதிகள்: 11 - 15 வரை
11. எந்த ஒரு விசயத்தையும் முட்டாள்தனமே இல்லாமல் படைக்க இயலாது. எனேன்றால் முட்டாள்கள் அவ்வளவு அறிவு ஜீவிகள்.


12. எந்த ஒரு விசயமும் நீங்கள் உணர்வது போல் அவ்வளவு எளிதில்லை.


13. ஒவ்வொரு தீர்வுமே ஒரு பிரச்சினைக்கு வழிகாட்டி.


14. ஒரு தாளில் உள்ள தகவல் எவ்வளவு தூரம் உங்களால் படிக்க இயலாமல் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது முக்கியத்துவம் வாய்ந்தது!


15. வெண்ணை தடவிய பிறகு கீழே விழும் ரொட்டி எந்த பக்கம் தரையில் விழும் என்பது உங்கள் கார்பெட்டின் விலையைப் பொருத்தது.


மதுரை தேவர் சிலை அவமதிப்பு-மன நோயாளி கைது

மதுரை: மதுரையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நேற்று அவமதிக்கப்பட்டிருந்தது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நூற்றுக்கணக்கான தேவரினத்தவர் கூடி அவமதித்தவரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர்.பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.


இந்த நிலையில் இன்று அதிகாலை, தேவர் சிலை உள்ள பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவரது பெயர் திருவழகன் என்றும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.


அவர்தான் தேவர் சிலையை அவமதித்தது என்றும் தெரிய வந்தது. அவர் மன நோயாளி போல தென்படுகிறார்.இருப்பினும் அவரைக் கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Source: Oneindia/இதற்கு தனி விமர்சனம் தேவையில்லை/


மர்பி விதிகள் முதல்பகுதிக்கு கிளிக் செய்யுங்கள்

மர்பியின் விதிகள்: 6 - 10


6. எல்லாமே சரியாக நடப்பது போல் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.


7. இயற்கை எப்போதுமே தனக்குள் தவறை ஒளித்து வைத்துள்ளது. ஆனால் அது எப்போதுமே அதை அதிக நேரத்திற்கு மறைத்து வைப்பதில்லை.


8. புன்னகை புரியுங்கள். நாளை இதைவிட மோசமாகத்தான் இருக்கும்.


9. எல்லா விசயங்களும் ஒரே நேரத்தில் தான் தவறாக நடக்க ஆரம்பிக்கும்.


10. உடைபொடும் பொருளும் அதன் மதிப்பும் எப்போதுமே நேர் விகிதித்திலேயே இருக்கும்.

Sunday, April 13, 2008

மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்று மட்டுமே…..

பொதுவாக வழக்கில் பழமொழிகள் பல உள்ளன. ஆனால் அவற்றில்  வாழ்வில் பொருந்தி வருபவைகள் ஒரு சிலதான்.

சில நாட்களுக்கு முன்பு pkp அவர்களின் பதிவில் இணைப்பு கொடுத்து இருந்த மர்பியின் விதிகள் 1000 இன்று படித்தேன்.

அவை மனித வாழ்வில் எப்படியும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பொருந்தியே தீரும்.

எதிர்மறை கொண்டுள்ளதாக நினைக்கவேண்டாம். பொறுமையாக படித்து வாருங்கள் நீங்களே அறிவீர்கள

அவற்றை நம் தமிழ்கூறும் நல்லுலகதிதில் அனைவரு ம் படித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே அனைவரும் அறிந்துகொள்ள வேண்டி,

அவற்றை அப்படியே கொடுத்தால் ஒரு தடவை படித்துவிட்டு மறந்து விடுவோம். ஆகவே இந்த பதிவு முதல் ஒவ்வோரு பதிவிலும் 5 விதிகளை பதிவிடுகிறேன்.

படித்து ரசியுங்கள் மேலும் பின்னுடமிடுங்கள்

முதல் பதிவு இன்றைய 5 பதிவுகள


1. ஒரு விசயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமானல் அது தவறாகவே நடக்கும்

2. நிறைய விசயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே தவறாக நடக்கும்

3. ஒரு விசயம் தவறாக நடக்கவே வாய்ப்பு இல்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்!

4. நாம் ஒரு விசயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தோமேயானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் எதிர்பாராத வகையில் எதிர்பாராத நேரத்தில் ஐந்தாவது தவறு வரும்.

5. எந்த விசயமும் மாறாத பட்சத்தில் நிகழ்வுகள் எப்போதுமே மோசமான கட்டத்திலிருந்து மிக மோசமான் கட்டங்களுக்கே செல்லும்

தமிழ் ஆத்திகர்கள் அனைவரும் ஆரியர்கள் அல்ல

தமிழ் ஆத்திகர்கள் அனைவரும் ஆரியர்கள் அல்ல

தமிழ்நாட்டில் வாழும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆத்திக அன்பர்கள் அனைவரும் பிராமணர்கள் தான் என்றும் ஆரிய வழி வந்தவர்கள் எனும் குருட்டாம் போக்கில்தான் அனைத்து நாத்திக யோக்கிய சிகாமணிகளின் பதிவுகளும் உள்ளன.

தமிழ்நாட்டில் ஆன்மிக பக்தர்கள் என்று எடுத்து கொண்டால் அதில் பிராமணர்கள் சதவீதம் மிகக்குறைவு. மிதம் அனைவரும் பிற்படுத்த பட்டவர்கள்தான்.

பெரியார் காலத்தில் இருந்தே நாத்திகம் பேசிவரும் அனைவரும் அறிவார்கள் தமிழகத்தில் ஆன்மிகத்தை ஒழிக்கமுடியாது என்று.

ஆர்யர்களின் புராணத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரை தனது பதிவிற்கு வைத்துக்கொண்டு நமது தமிழகத்தில் கடவுள் எதிர்ப்பாளர்களுக்கு பதில் கூறிவரும் ஒரே ஒர் பெரிய மனிதரை கண்டபடி ஏசி வருகிறார்.

தமிழகத்தில் நிறைய பேர் ஆன்மிகவாதிகளாக இருந்தும் கடவுள்களை கிண்டல் அடித்தும், கேலி பேசி வருபவர்களை கண்டனம் தெரிவிப்பவர்கள் விரல் விட்டு எண்ணுபவர்கள் தவிர எவரும் இல்லை.

அதற்கு ஆட்சியாளர்கள் என்ன நினைப்பார்களோ என்ற காரணமோ எனத்தெரியவில்லை மேலும் யாரும் சாக்கடை மீது கல்லெடுத்து எறிய விரும்புவதில்லை.

அப்படியே ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் ஆரிய, பிராமிணர்கள், இந்து வெறியன் எனத் திட்டுக்கள் கேட்கவேண்டியுள்ளது.

நான் பின்னுட்டமிட்டதுற்கு முழு பக்கத்துற்க்கு பதில்எழுதி வைத்துள்ளார்கள்.

நான் ஆரியனும் அல்ல. பிராமிணனும் அல்ல. கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுகத்தை சார்ந்த தமிழன் தான்


ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவன் அவ்வளவே.

எப்படி ஒரு கிருத்தவர் தனது கடவுளை பழித்தால் எதிர்க்கிறாரோ, ஒரு முஸ்லீம் கடவுளை எதாவது கூறினால் போராடுகிறாரோ

அப்படித்தான் நானும் இந்துக்கடவுளை பழிப்பவர்களை எதிர்ப்பேன்.

Saturday, April 12, 2008

எனது பதிவில் வால்பையன் புகைப்படம்

+எனது இந்த பதிவில் வால்பையன் புகைப்படம் கீழே வெளியிட்டுள்ளேன்.


பார்த்து ரசியுங்கள்.


ஆனால் அவர் சிறப்புவாய்ந்த வால் மட்டும் படத்தில் தெரியவில்லை.இல்லை வால் இல்லாத ரகமா எனத்தெரியவில்லை.மேலும் படங்களுக்கு இதை கிளீக் செய்யுங்கள்


பி.கு: நீங்களாகவே பதிவர் வால்பையன் என்று நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.


மேலும் எனக்கு அவர் ஒரு நல்ல நண்பரும் கூட

புதிய பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

ஏற்கனெவே பதிவில் இருப்பவர்களுக்கு இந்த விசயம் தெரிந்து இருக்கலாம்
நான் கடந்தவாரம் புதியதாய் படப்பதிவு ஒன்று ஆரம்பித்தேன்.


அதன் முகவரி http://putthunarchi.blogspot.com/


இந்தப்பதிவு இன்னும் எந்த திரட்டியுலும் பட்டியலப்படவில்லை.
ஆனால் எனது feedjit வருகைப் பதிவேட்டில் வெளிநாட்டினர் வருகை அதிகம் காணப்பட்டது.

மேலும் ஓர் அதிர்ச்சியாக எனது மெயில்பெட்டியில் பின்னுட்ட வருகைகள் நிறைய் இருந்தன. ஆனால் அதிகபட்சம் கீழே கண்டபடி இருந்தன.

Galmaran has left a new comment on your post "வண்ணமயமான வீட்டுச்சூழ்நிலைகள்":


See Please Here

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

இதில் உள்ள here கிளிக் செய்தவுடன் வைரஸ் அட்டாக் ஏற்படுகிறது. நல்லவேளையாக எனது கணிணியில் windows defender இருந்ததால் உடனே என்னால் இனம் கண்டு அதை தவிர்க்க முடிந்தது.


புதிய பதிவர்கள் இந்த விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்

மிகப்பெரிய சந்தேகம்

இன்று விடியற்காலையில் விழித்து எழுந்தபோது மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எனது மனதில் ஏற்பட்டது.

அதை டோண்டு ராகவன் அவர்களின் கேள்வி பதில் பதிவிற்கு அனுப்பலாமா என்று யோசித்தேன். ஆனால் அவர் வார இறுதியில் பதிலிடுவார் ஆகவே தமிழ்பதிவிடும் நல்லுலகத்தினடமே கேட்டுவிடலாம் என இப்பதிவினை இடுகிறேன்.

பதில் தெரிந்தவர்கள் பின்னுட்டமிட்டு என் சந்தேகத்தை தீர்த்து வைக்கலாம் மற்றும் அறியாதவர்களும் அவற்றை படித்து அறிந்து கொள்ளட்டும் தமிழர்களின் மிக முக்கிய உணவு பொருளான இட்லி அதற்கு இப்பெயர் எப்படி ஏற்பட்டது?

இது ஒரு காரணப்பெயரகவும் தெரியவில்லை வேறு பெயரில் இருந்து மறுவியதாகவும் தெரியவில்லை. தயவுசெய்து விளக்குவீர்களாக.

பி.கு: இதற்கு இட்லிவடை பதிவரிடமிருந்து பதில் வருமா?

எனது புதிய முயற்சி

எனது பழைய பதிவு தமிழ் மணத்தில் இணையவில்லை. எதோ செய்தியோடை தகறாரு.

ஆகவே எனது பதிவு முகவரியை மாற்றிவிட்டேன்.

ஆனால் எனது இந்த முகவரி தமிழ்மணத்தில் பதிவில் இருப்பதால் இதிலும் எனது பதிவுகள் தொடரும்.

எனது முந்தைய பதிவுகள்

http://koodudhurai.blogspot.com


படப்பதிவு

http://putthunarchi.blogspot.com

பயோடெக்னாலஜி பற்றிய ஆங்கில பதிவு

http://atoncedata.blogspot.com


தங்களின் நல் அதரவை தொடர்ந்து நல்குவீர்களாக.

Wednesday, April 2, 2008

மிகப்பெரிய சந்தேகம்

இன்று விடியற்காலையில் விழித்து எழுந்தபோது மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எனது மனதில் ஏற்பட்டது. அதை டோண்டு ராகவன் அவர்களின் கேள்வி பதில் பதிவிற்கு அனுப்பலாமா என்று யோசித்தேன்.

ஆனால் அவர் வார இறுதியில் பதிலிடுவார் ஆகவே தமிழ்பதிவிடும் நல்லுலகத்தினடமே கேட்டுவிடலாம் என இப்பதிவினை இடுகிறேன்.

பதில் தெரிந்தவர்கள் பின்னுட்டமிட்டு என் சந்தேகத்தை தீர்த்து வைக்கலாம் மற்றும் அறியாதவர்களும் அவற்றை படித்து அறிந்து கொள்ளட்டும்

தமிழர்களின் மிக முக்கிய உணவு பொருளான இட்லி

அதற்கு இப்பெயர் எப்படி ஏற்பட்டது?

இது ஒரு காரணப்பெயரகவும் தெரியவில்லை

வேறு பெயரில் இருந்து மறுவியதாகவும் தெரியவில்லை.

தயவுசெய்து விளக்குவீர்களாக.

பி.கு: இதற்கு இட்லிவடை பதிவரிடமிருந்து பதில் வருமா?

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews