Sunday, April 13, 2008

தமிழ் ஆத்திகர்கள் அனைவரும் ஆரியர்கள் அல்ல

தமிழ் ஆத்திகர்கள் அனைவரும் ஆரியர்கள் அல்ல

தமிழ்நாட்டில் வாழும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆத்திக அன்பர்கள் அனைவரும் பிராமணர்கள் தான் என்றும் ஆரிய வழி வந்தவர்கள் எனும் குருட்டாம் போக்கில்தான் அனைத்து நாத்திக யோக்கிய சிகாமணிகளின் பதிவுகளும் உள்ளன.

தமிழ்நாட்டில் ஆன்மிக பக்தர்கள் என்று எடுத்து கொண்டால் அதில் பிராமணர்கள் சதவீதம் மிகக்குறைவு. மிதம் அனைவரும் பிற்படுத்த பட்டவர்கள்தான்.

பெரியார் காலத்தில் இருந்தே நாத்திகம் பேசிவரும் அனைவரும் அறிவார்கள் தமிழகத்தில் ஆன்மிகத்தை ஒழிக்கமுடியாது என்று.

ஆர்யர்களின் புராணத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரை தனது பதிவிற்கு வைத்துக்கொண்டு நமது தமிழகத்தில் கடவுள் எதிர்ப்பாளர்களுக்கு பதில் கூறிவரும் ஒரே ஒர் பெரிய மனிதரை கண்டபடி ஏசி வருகிறார்.

தமிழகத்தில் நிறைய பேர் ஆன்மிகவாதிகளாக இருந்தும் கடவுள்களை கிண்டல் அடித்தும், கேலி பேசி வருபவர்களை கண்டனம் தெரிவிப்பவர்கள் விரல் விட்டு எண்ணுபவர்கள் தவிர எவரும் இல்லை.

அதற்கு ஆட்சியாளர்கள் என்ன நினைப்பார்களோ என்ற காரணமோ எனத்தெரியவில்லை மேலும் யாரும் சாக்கடை மீது கல்லெடுத்து எறிய விரும்புவதில்லை.

அப்படியே ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் ஆரிய, பிராமிணர்கள், இந்து வெறியன் எனத் திட்டுக்கள் கேட்கவேண்டியுள்ளது.

நான் பின்னுட்டமிட்டதுற்கு முழு பக்கத்துற்க்கு பதில்எழுதி வைத்துள்ளார்கள்.

நான் ஆரியனும் அல்ல. பிராமிணனும் அல்ல. கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுகத்தை சார்ந்த தமிழன் தான்


ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவன் அவ்வளவே.

எப்படி ஒரு கிருத்தவர் தனது கடவுளை பழித்தால் எதிர்க்கிறாரோ, ஒரு முஸ்லீம் கடவுளை எதாவது கூறினால் போராடுகிறாரோ

அப்படித்தான் நானும் இந்துக்கடவுளை பழிப்பவர்களை எதிர்ப்பேன்.

8 comments:

Anonymous said...

///யாரும் சாக்கடை மீது கல்லெடுத்து எறிய விரும்புவதில்லை.///

இப்படி எழுதும் நீங்கள் ஏன் அந்த மாதிரி பதிவுகளில் பின்னூட்டம் போடுகிறீர்கள் :)

"சபையரிந்து பேசு" என்று கேள்விப்பட்டதில்லையா ?

Anonymous said...

நான் மற்றவர்கள் தான் பயப்படுவதாக கூறினேன். நான் கண்டிப்பாக எதிர்ப்பேன் பின்னுட்டம் மூலமாகவோ பதிவின் மூலமாகவோ…

நீங்களே பயந்துதானே அனானி பின்னுட்டம் இட்டிள்ளீர்கள்

Anonymous said...

இந்து = பார்ப்பனிய அதிகாரம் என்ற அடிப்படையில் தான் எதிர்க்கப்படுகிறது என நினைக்கிறேன். அதில் தமிழ் ஆத்திகர்கள் வருத்தமடைகிறார்கள். உண்மையில் நாத்திகர்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறார்கள், அது அவசியப்படுவதால். தமிழ் ஆத்திகர்களை அல்ல.

நீங்கள் கவலையைவிடுங்கள்.

Anonymous said...

//அனைத்து நாத்திக யோக்கிய சிகாமணிகளின் பதிவுகளும் உள்ளன.//

அனைத்தும் அல்ல, என் பதிவுகளில் நான் குறிப்பிட்டு அப்படி சொன்னது கிடையாது.

//பெரியார் காலத்தில் இருந்தே நாத்திகம் பேசிவரும் அனைவரும் அறிவார்கள் தமிழகத்தில் ஆன்மிகத்தை ஒழிக்கமுடியாது என்று.//

பெரியார் ஆசை பட்டதே ஆன்மீகத்தை ஒழிக்க அல்ல. மூட நம்பிக்கைகளை ஒழிக்க.

//நான் ஆரியனும் அல்ல. பிராமிணனும் அல்ல. கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுகத்தை சார்ந்த தமிழன் தான்//

இந்த எண்ணத்தை முதலில் மாற்றுங்கள். தமிழன் பிற்படுத்த பட்டவன் அல்ல,
அனைவரும் சமம் என்ற போது நாம் எப்படி பிற்படுத்த பட்டவன்

//அப்படித்தான் நானும் இந்துக்கடவுளை பழிப்பவர்களை எதிர்ப்பேன்.//

ஆரோக்கியமான வாதத்தில் என்று சேர்த்து கொள்ளுங்கள்.

வால்பையன்

Anonymous said...

//அனைத்தும் அல்ல, என் பதிவுகளில் நான் குறிப்பிட்டு அப்படி சொன்னது கிடையாது.//

தங்களை நான் நாத்திகனாக எடுத்துக்கொள்ளவில்லை.

//பெரியார் காலத்தில் இருந்தே நாத்திகம் பேசிவரும் அனைவரும் அறிவார்கள் தமிழகத்தில் ஆன்மிகத்தை ஒழிக்கமுடியாது என்று.//

நான் பெரியாரை குறிக்கவில்லை. பெரியார் ஆன்மீகவாதிகளை மதிப்பவர், ஆன்மிகத்தின் பெயரால் ஏற்படும் அராஜாகத்தைதான் எதிர்த்தார். ஆனால் அப்போது இருந்து அவர் பெயரைக்கூறிக்கொண்டு நாத்திகம் பேசிவருபவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

//இந்த எண்ணத்தை முதலில் மாற்றுங்கள். தமிழன் பிற்படுத்த பட்டவன் அல்ல,
அனைவரும் சமம் என்ற போது நாம் எப்படி பிற்படுத்த பட்டவன்//


தமிழகத்தில் அப்படிக்கூறவில்லையென்றால் தான் தவறு.

//ஆரோக்கியமான வாதத்தில் என்று சேர்த்து கொள்ளுங்கள்.//

ஆரோக்கியமான் வாதம்தான் சண்டை இல்லை

Anonymous said...

//தங்களை நான் நாத்திகனாக எடுத்துக்கொள்ளவில்லை.//

உங்கள் விருப்பம்.

//பெரியார் ஆன்மீகவாதிகளை மதிப்பவர்,//

சரியாக சொன்னீர்கள். பெரியார் ஒரு கோவிலுக்கு தர்மகர்த்தாவாக இருந்திருக்கிறார்.
ராஜாஜிக்கு நல்ல நண்பராக இருந்திருக்கிறார்

//தமிழகத்தில் அப்படிக்கூறவில்லையென்றால் தான் தவறு.//

அந்த கூற்றை உடைப்போம்

வால்பையன்

Anonymous said...

நானும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒருவனான தமிழன் என்கிறீர்கள். எல்லாம் சரிதான், எப்படி வந்தது இந்து என்ற வார்த்தை? பார்ப்பனர்கள் அதை ஏன் ஏற்றுக்கொண்டார்கள்?

சைவம், வைனவம், சாக்தம், காளாமுகம் (காபாலிகம்) இவ்வாறாக இருந்ததுதான் தமிழனின் வழிபாட்டு முறை. இவை அனைத்தையும் ஒன்றினைத்து இந்து மதம் ஆக்கிவிட்டான் வெள்ளையன். எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினரான பிராமணர்கள் தங்கள் பக்கமும் தலைக்கட்டு அதிகம் இருக்கிறது என்று காட்டத்தான் இந்து மதம் என்ற மோசடியை ஒப்புக்கொண்டார்கள். இதை எதிர்த்த பார்ப்பனர்களும் உள்ளனர். சென்னையில் அவர்களெல்லாம் சேர்ந்து ஒரு மாநாடு கூட நடத்தினர், ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன். அதிலே பாஷ்யம் ஐயங்கார் என்பவர் “நாம எல்லாம் பிராமணன் ஓய். இந்து இல்லை,” என்று பிரகடனமே செய்தார்.

அறியாமையில் இருக்கிற நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

இன்று தாழ்த்தப் பட்ட மக்களின் மீது நடைபெறும் வன்கொடுமைக்கும் பிராமணனுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பாய். மனு ஸ்மிருதியை நீ கொண்டாடுகிற பிராமணன் தானே தூக்கிப் பிடித்தான். அதை மற்ற உயர் சாதிகளுக்கும் பரப்பியவன் அவன் தானே. இன்று பரப்பிவிட்ட அவன் நல்ல பிள்ளை வேஷம் போடுகிறான், அவன்கிட்ட கத்துகிட்டவன் மேல பழிய தூக்கிப் போடுறான்.

நாம ஆத்திகனாய் இருப்பது நம்ம சொந்த விருப்பம். அதைக் குறை கூற எவனுக்கும் உரிமை கிடையாது. ஆனா, ஆத்திகனாய் இருக்கிறேன் என்று பிராமண வேஷம் போட்டால், பகுத்தறிவுள்ள எவனும் கேள்வி கேட்கத்தான் செய்வான்.

பிராமணன் வருவதற்கு முன்பு நமக்கென்று சொந்தமாக எந்த வழிபாட்டு முறையும் இல்லையா?

தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லுகிற ஆதினங்கள் அனைத்தும் இன்று பிராமண வேஷம்தான் போடுகிறார்கள் அல்லது அவர்களது மேலாதிக்கத்தை மவுனமாக ஏற்றுக்கொள்கிறார்கள். சிவனடியார் ஆறுமுகசாமி சிதம்பரத்தில் தேவாரம் பாடியபோது குன்றக்குடி அடிகளாரிடமிருந்து வெறும் வாழ்த்து தானே வந்தது, நானும் வந்து உங்களோடு கலந்துகொள்ளுகிறேன் என்கிற வார்த்தை ஏன் வரவில்லை? அவராவது பரவாயில்லை வாழ்த்துத் தந்தியாவது அனுப்பினார், மதுரை, திருவாவடுதுறை ஆதினங்கள் எல்லாம் அதைக்கூட அனுப்பவில்லை.

கடவுளே இல்லை என்று சொல்லுகிற கம்யூனிஸ்டுகாரன் ஆறுமுகசாமியை யானை மேல் வைத்து சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாட அழைத்துச் செல்லுகிறான். இறை மறுப்புக் கொள்கை உடைய பெரியார்தாசன் ஆறுமுகசாமிக்காக வரிஞ்சு கட்டிக்கிட்டு பிரசாரம் பண்றார். இந்த ஆதினங்கள் என்ன செய்தார்கள்? இதனால தானய்யா நமக்கு வழிகாட்டுற இடத்தில இருக்கிற இந்த போலிகள் மேல கோவம் வருது.

உண்மைய புரிஞ்சுக்கோ ராசா.

Anonymous said...

அன்பார்ந்த அனானி அவர்களே!

இவ்வளவு எழுதுபவர் பெயர் வெளியிடலாமே!

அதனால் ஆட்டோ வரும் எனப் பயப்பட வேண்டும்.

தாங்களும் எனது கருத்துடன் ஒத்துத்தான் வருகிறிர்கள்.

பிராமணர்களை சாக்கு வைத்துக்கொண்டு கடவுள்களை வையவேண்டாம் எனத்தான் நானும் கூறுகிறேன்.

சிதம்பரத்தில் தேவாரம் பாடக்கூடாது என்பதும் மிகத்தவறுதான்


நான் ஒன்றும் பிராமணர்களுக்கு ஜால்ர அடிக்கவில்லை

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts