Sunday, April 13, 2008

மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்று மட்டுமே…..

பொதுவாக வழக்கில் பழமொழிகள் பல உள்ளன. ஆனால் அவற்றில்  வாழ்வில் பொருந்தி வருபவைகள் ஒரு சிலதான்.

சில நாட்களுக்கு முன்பு pkp அவர்களின் பதிவில் இணைப்பு கொடுத்து இருந்த மர்பியின் விதிகள் 1000 இன்று படித்தேன்.

அவை மனித வாழ்வில் எப்படியும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பொருந்தியே தீரும்.

எதிர்மறை கொண்டுள்ளதாக நினைக்கவேண்டாம். பொறுமையாக படித்து வாருங்கள் நீங்களே அறிவீர்கள

அவற்றை நம் தமிழ்கூறும் நல்லுலகதிதில் அனைவரு ம் படித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே அனைவரும் அறிந்துகொள்ள வேண்டி,

அவற்றை அப்படியே கொடுத்தால் ஒரு தடவை படித்துவிட்டு மறந்து விடுவோம். ஆகவே இந்த பதிவு முதல் ஒவ்வோரு பதிவிலும் 5 விதிகளை பதிவிடுகிறேன்.

படித்து ரசியுங்கள் மேலும் பின்னுடமிடுங்கள்

முதல் பதிவு இன்றைய 5 பதிவுகள


1. ஒரு விசயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமானல் அது தவறாகவே நடக்கும்

2. நிறைய விசயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே தவறாக நடக்கும்

3. ஒரு விசயம் தவறாக நடக்கவே வாய்ப்பு இல்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்!

4. நாம் ஒரு விசயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தோமேயானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் எதிர்பாராத வகையில் எதிர்பாராத நேரத்தில் ஐந்தாவது தவறு வரும்.

5. எந்த விசயமும் மாறாத பட்சத்தில் நிகழ்வுகள் எப்போதுமே மோசமான கட்டத்திலிருந்து மிக மோசமான் கட்டங்களுக்கே செல்லும்

1 comment:

Anonymous said...

என்ன ஒரே எதிர்மறை சிந்தனைகளாக இருக்கிறது இந்த விதி.
நீ எதை பண்ணாலும் தப்பு தாண்டா! என்பதுய் போல் இருக்கிறது விதிகள்,
இந்த ஐந்து தான் இப்படியா, அல்லது எல்லாமே இப்படி தானா

வால்பையன்

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts