Thursday, May 8, 2008

ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை!

எனது சேவை இங்கிலாந்திற்கு தேவை இல்லை

இனி நான் அங்கு செல்ல இயலாது.


(வால்பையனும் செல்ல முடியாது ஹைய்யா !!!)


லண்டன்: போதிய ஆங்கில அறிவு இல்லாமல் யாரும் இனிமேல் இங்கிலாந்துக்குச் செல்ல முடியாது. குறிப்பாக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் இங்கிலாந்துக்குள் வர முடியாது என அந்த நாட்டு அரசு தடாலடியாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்குள் வர விரும்புவோருக்கு புதிய சட்ட திட்டங்களை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி போதிய ஆங்கில அறிவு இல்லாவிட்டால் இனிமேல் இங்கிலாந்துக்குள் நுழைய முடியாதாம். இந்தப் புதிய உத்தரவின் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் வெளிநாட்டினரை தடுக்க முடியும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.இந்த புதிய விதிமுறைக்கு சர்வதேச விளையாட்டு வீரர்களும் விதி விலக்கல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் பெரும் பாதிப்படைவார்கள் என்று கருதப்படுகிறது.குறிப்பாக பிரேசில் நாட்டு கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ, அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. எனவே இவர்களால் இங்கிலாந்துக்குள் நுழைவது இயலாத காரியமாகியுள்ளது.

இந்த விதிமுறையை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் இங்கிலாந்து தெளிவுபடுத்தியுள்ளது.சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்தால்தான் இங்கிலாந்துக்குள் இனி நுழைய முடியும் என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளதால், பல நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், பல நட்சத்திர வீரர்கள் தங்களது நாட்டு அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்படலாம் என கருதப்படுகிறது.இந்தப் புதிய விதிமுறையை இங்கிலாந்து நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் லியாம் பைர்ன் நேற்று அறிமுகப்படுத்தினார்.Source: Oneindia

4 comments:

Anonymous said...

//ரொனால்டினோ, அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது.//

அப்போ அவங்களுக்கு ஆங்கிலம் அழுக்க தெரியுதா ?
எனக்கும் அப்படித்தான்

Anonymous said...

//இனி நான் அங்கு செல்ல இயலாது.
(வால்பையனும் செல்ல முடியாது ஹைய்யா !!!)//

நீங்க கவலை படாதிங்க கூடுதுறை!
இங்கிலாந்து நடிகைகளுக்கு தமிழ் கத்து கொடுக்க நீங்களும் நானும் போறோம்

வால்பையன்

Anonymous said...

இல்லை வால்பையன் அவர்களே நான் வரமாட்டேன்.

அங்கு இருக்கும் நடிகைகளுக்கு வயது அதிகம்

Anonymous said...

ஹையா,,


அப்போ நாமும் நம் தமிழ்நாட்டின் அரசிடம் சொல்லி , நல்லா தமிழ் பேசினால் மட்டுமே தமிழ்நாட்டில் இடம் னு சொல்லனும்.. ...

ஆனால் .....

ஆனால்.....

ஆனால்......


நெறிய சேச்சி figures ' ம் மார்வாடி figures ' ம் மிஸ் ஆகும்........



வேண்டாம் .... வேண்டாம் ..... எள்ளர்த்தையும் allow பண்ணுவோம் ........

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts