Thursday, July 31, 2008

ஸ்டாலின் வெப்சைட் சூப்பர் ஹிட்
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ள இணையதளத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோர் இந்த இணையதளத்தை பார்வையிட்டு குறைகளையும், புகார்களையும் பதிவு செய்கின்றனராம்.

தனது பெயரில் புதிய இணையதளம் ஒன்றை சமீபத்தில் உருவாக்கினார் ஸ்டாலின். www.mkstalin.net என்ற அந்த இணையதளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக இளைஞர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகள், குறைகள், புகார்களை பதிவு செய்து வருகிறார்களாம்.

முதல்வர் கருணாநிதி அதிகாலையில் எழுந்து தனது வேலைகளை ஆரம்பிப்பவர். ஆரம்ப காலம் முதல் 80 வயதைத் தாண்டிய இக்காலகட்டத்திலும் அந்தப் பழக்கத்தை ஒருபோதும் அவர் விட்டதில்லை. அதேபோல ஸ்டாலினும் அதிகாலையிலேயே எழுந்து வாக்கிங்குடன் தனது வேலைகளைத் தொடங்கி விடுகிறார்.

வாக்கிங்கின்போது வெறுமனே நடப்பதோடு நின்று விடாமல் சென்னை மாநகரில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை திடீர் விசிட் அடித்து ஆய்வு செய்வதும் அவரது ஸ்டைல். டீக்கான டீ சர்ட்டுடன் சம்பந்தப்பட்ட ஸ்பாட்டுக்கு அவர் விசிட் அடிப்பார்.

அதுபோன்ற நேரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். பொதுமக்களும், திமுகவினரும்தான் ஸ்டாலினைப் பார்த்து வரவேற்று திட்டப் பணிகள் குறித்து அவரிடம் கூறுவார்கள். அவரும் மக்களிடம் குறைகளை கேட்டபடியே வளர்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்து விடுவார்.

இப்படி சுறுசுறுப்புடன் செயல்படும் ஸ்டாலின் தனது செயல்பாடுகளுக்கு வசதியாகவும், தனது துறை என்ன செய்கிறது, தான் எப்படி செயல்படுகிறோம் என்பதை அனைவரும் அறியும் வகையில்தான் தனது பெயரில் இணையதளத்தை உருவாக்கினார். மேலும் தன்னை அணுக விரும்புவோர் இ-மெயில் மூலம் புகார்களையும், குறைபாடுகளையும் தெரிவிக்கவும் இந்த இணையதளம் உதவும் என்ற எண்ணத்திலும் உருவானதுதான் இந்த வெப்சைட்.

தினசரி நூற்றுக்கணக்கானோர் இந்த தளம் மூலமாக தங்களது புகார்களையும், கோரிக்கைகளையும் குவிக்கின்றனராம்.

இதுதவிர சென்னை மாநகர வளர்ச்சிக்கும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஏகப்பட்ட ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனராம்.

தனக்கு வரும் ஒவ்வொரு மெயிலையும் தவறாமல் படிக்கும் ஸ்டாலின் அதில் கூறப்படும் ஆலோசனைகளை கூர்ந்து கவனித்து நியாயமாக இருக்கும் பட்சத்தில் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து ஆவண செய்யுமாறு அறிவுரை கூறுகிறாராம்.

விலைவாசி உயர்வு, அடிப்படை வசதிகள், பழனி கோவில் பராமரிப்பு, போக்குவரத்து நெரிசல், வேலைவாய்ப்பு, பறக்கும் ரெயில், பஸ், ஆட்டோ, மின்சார தட்டுப்பாடு போன்றவை தொடர்பாக புகார்களும் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

நன்றி: தட்ஸ் தமிழ்

Wednesday, July 30, 2008

கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில்

கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில்
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவஸ்தலம் பெயர் திருநணா (பவானி)
இறைவன் பெயர் சங்கமேஸ்வரர் இறைவி பெயர் வேதநாயகி, வேதாம்பிகை

பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர் – 1
எப்படிப் போவது?

சேலத்தில் இருந்து கோயமுத்தூர் வழியாக கேரளத்தைக் கடந்து கன்யாகுமரி வரைச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை (NH 47) (2008 இறுதியில் 4 வழிப்பாதையாக இருக்கும்) பவானி அருகே உள்ள கொமாரபாளையம் மற்றும் லட்சுமி நகரை தொட்டுச்செல்கிறது.

பவானி சேலத்தில் இருந்து 56 Km தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 Km தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் சேலம், மேட்டூர், ஈரோட்டில் இருந்து பவானிக்கு உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலயம் ஈரோடு.

அருகில் உள்ள விமான நிலையம் கோயமுத்தூர் 90 கிமீ (சூலூர்) மற்றும் ஒரு இயங்காத விமான நிலையம் சேலம் கமலாபுரம் விமான நிலையம் 60 கிமீ.

தங்கும் வசதி: குறைந்த அளவே தங்கும் விடுதிகள் உள்ளது அருகில் உள்ள ஈரோட்டில் தேவையான அளவு விடுதிகள் உள்ளன

கோவில் அமைப்பு:
பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.
வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து சென்றால் இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம். சுப்பிரமணியக் கடவுளாம் முருகனுக்கு அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிக்கு நடுவில் சந்நிதி அமந்திருப்பது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம். இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் பெயர் பெற்றது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர்.
மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் எனபது மக்களின் நம்பிக்கையாகும்.

அம்பிகையின் பெருமை:
அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார்.
இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன.
ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது.

தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.

வாருங்கள் அனைவரும் கூடுதுறையில் குளித்து வேதநாயகி சமேத சங்கேமேஸ்வரரை தரிசித்தி அவரின் அருள் பெருவோம்

நன்றி

கொங்குவாசல் பதிவர்

கலைப்பயணி பதிவர்

மற்றும் தமிழ் விக்கிப்பிடியா

Saturday, July 26, 2008

கூடுதுறையின் பெருமையை (எனது அல்ல) படியுங்கள்

கூடுதுறையின் பெருமையை (எனது அல்ல) படியுங்கள்.

கூடுதுறையின் பெருமையை விளக்கிக்கூறும் பதிவை எழுதவேண்டும் என வேகு நாட்களாக எனது எண்ணம். அதற்கு தற்போது வர இருக்கும் ஆடி 18ல் ஆடி பெருக்கு திருவிழா நடக்க இருப்பதால் தற்போது எழுதினால் சிறப்பாக இருக்கும் என இதைப் பதிவிடுகிறேன்.

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத என் காவேரி பெருமையை விவரிக்கிறது துலா புராணம்.

பவானி கூடுதுறையின் காட்சி

mukkoodal
பொதுவாக இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் எனக் கூறுவதுண்டு. தமிழ்நாட்டில் பவானி, உத்திரபிரதேசத்தில் அலகாபாத், கர்நாடகவில் திருமுக்கூடல் ஆகியவை சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும்.

ஆடி மாதம் முழுவதும் காவிரியில் புத்தம் புதிய புனலுடன் பொங்கும் நுரையுடன் துள்ளி குதித்து காவேரித்தாய் ஓடிவருவாள் (இது அந்தக்காலத்தில்). இப்போது தமிழக அரசின் தயவில் குறிப்பிட்ட காலத்தில் மேட்டுர் அணையை திறந்துவிட்டால் அதுவும் அளவோடு ஓடி வருகிறாள்.

தமிழகத்தில் காவிரி பாயும் அனைத்து இடங்களிலும் இவ் ஆடிப்பெருக்கை ஆடிமாதம் 18 தேதியன்று ஆடிபதினெட்டு பண்டிகை என சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

இவ்வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் தொடக்கமே காவிரியின் ஆடிப்பெருக்குதான்.

தமிழகத்தில் காவிரி நுழையும் இடமான ஹோகேனக்கல்லில் (தற்போது எடியூரப்பவின் போரட்ட பிரசித்தி பெற்ற இடம்) ஆரம்பித்து மேட்டுர், பவானி கூடுதுறை, கொடுமுடி, முக்கொம்பு, திருவரங்கம், திருச்சி, தஞ்சை மாவட்டம் முழுவதும் மற்றும் காவிரிபூம்பட்டினம் வரை அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் நமது பவானி கூடுதுறையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இங்கு ஆடி 17ம் தேதி இரவில் இருந்து அக்கம் பக்கம் கிராம்ம் மற்றும் நகரங்களிலிருந்து மக்கள் குவியத்தொடங்கி ஆடி 18 இரவு வரை கூடுதுறையில் குளித்து கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்து தங்களது பாவச்சுமையை போக்கிக்கொள்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் கூடுதுறையில் இந்நாளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுகின்றனர்.

கூடுதுறை சங்கமம் கரையில் இருந்து திருவேணி சங்கமம் ஒரு பார்வை


250px-BavaniKuuduthurai

வாருங்கள் அனைவரும் கூடுதுறையில் குளித்து வேதநாயகி சமேத சங்கமேஸ்வரரை தரிசித்தி அவரின் அருள் பெருவோம்

சங்கமேஸ்வரர் கோயில் பற்றிய பதிவு அடுத்த பதிவில்

Monday, July 21, 2008

நம்பிக்கை தீர்மானம்-வாக்கெடுப்பு நடப்பது எப்படி?

நம்பிக்கை தீர்மானம்-வாக்கெடுப்பு நடப்பது எப்படி?
    

டெல்லி: லோக்சபாவில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு கொண்டு வரும் நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மின்னணு முறையில் நடைபெறவுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் இன்று லோக்சபாவில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்கிறார். இதன் மீது விவாதம் நடந்து நாளை மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

வாக்கெடுப்பு மின்னணு முறையில் நடைபெறும். ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கைக்கு முன்பும் இரு நிறத்திலான பொத்தான்கள் வைக்கப்பட்டிருக்கும். அவை பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க விரும்பினால் பச்சை நிற பொத்தானை அழுத்த வேண்டும். எதிர்ப்பு ெதரிவிப்பதாக இருந்தால் சிவப்பு பொத்தானை அழுத்த வேண்டும்.

ஒருவேளை மறதியாகவோ அல்லது தெரியாமலோ வேறு பொத்தானை அழுத்தி விட்டால், சபாநாயகரிடமிருந்து துண்டுச் சீட்டை வாங்கி, அதிலும் தங்களது வாக்கைப் பதிவு செய்யலாம்.

பொத்தானை அழுத்தி அனைவரும் வாக்களித்த பின்னர் பதிவான வாக்குகள் விவரத்தை டிஜிட்டல் போர்டு காட்டும். அதை வைத்து தீர்மானம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை சபாநாயகர் அறிவிப்பார்.

வாக்கு வித்தியாசம் பெரிதாக இருந்தால் துண்டுச் சீட்டுக்கள் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. மாறாக குறைவாக இருந்தால் துண்டுச் சீட்டுகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.

வாக்கெடுப்பு நடைபெறும் போது  லோக்சபாவுக்குள் எம்.பிக்கள் மட்டுமே இருப்பார்கள். பார்வையாளர்கள் யாரும் லோக்சபாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாடாளுமன்ற லாபியிலும் கூட யாரும் இருக்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks..

oneindia

Friday, July 18, 2008

தமிழகத்தில் மீண்டும் மின் தடை - அணு மின்சாரம் ஒப்பந்தந்தை எதிர்ப்பவர்கள் கவனத்திற்கு

சென்னை: தமிழகத்தில் நிலவும் பெரும் மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தமிழகத்தை பல மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நாள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளித்து மின் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த மின்சார விடுமுறைத் திட்டத்ைத தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று சென்னையில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொழிலதிபர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இதை அறிவித்தார்.

1000 மெகாவாட் பற்றாக்குறை:

இதுகுறித்து ஆற்காடு வீராசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை பொய்த்து விட்டதாலும், காற்றாலை மூலம் குறைந்தஅளவிலான மின்சாரமே உற்பத்தி செய்யப்படுவதாலும், 1000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாகியுள்ளது.

இந்த நெருக்கடியை சமாளிக்க தமிழகத்தை ஆறு மண்டலமாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் வாரம் ஒருமுறை ஒரு மணி நேரத்திற்கு மின்தடையை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த மின் விடுமுறையிலிருந்து, விவசாயிகள், குடிநீர் விநியோகம், பால் பண்ணைகள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்படும்.

இரவில் மின் தடை கிடையாது:

மாணவர்களின் நலன்கருதி இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்பட மாட்டாது. அதேபோல கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்.

காற்றாலை மூலம் 2700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என அரசு நினைத்திருந்தது. ஆனால் 1800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.அதேபோல,நீர் மின் நிலையங்களிலும், பருவ மழை பொய்த்ததால் எதிர்பார்த்த மின் உற்பத்தி இல்லை.

மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 60 சதவீத மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 1000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இதே நிலைதான் அண்டை மாநிலங்களிலும் நிலவுகிறது,.

மின்சார விடுமுறை காரணமாக, 375 முதல் 400 மெகாவாட் மின்சாரத்ைத சேமிக்க முடியும். மேலும், தொகுப்பு மின்உற்பத்தி மூலம் 500 மெகாவாட் மின்சாரம் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சிகளில் 1 மணி நேரம் - நகராட்சிகளில் 2 மணி நேரம்:

சென்னை, மதுரை, திருச்சி, கோவை மாநகராட்சிகளில் ஒரு மணி நேர மின்சாரத் தடை அமல்படுத்தப்படும். நகராட்சிகளில் 2 மணி நேர மின் தடை அமல்படுத்தப்படும். இதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சி எட்டு மண்டலமாக பிரிக்கப்படும். இதில்தினசரி ஒரு மண்டலத்திற்கு ஒருமணி நேரம் மின்தடை அமல்படுத்தப்படும்.

ஆந்திராவுக்கு தமிழகம் பரவாயில்லை:

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நிலைமை பரவாயில்லை. ஆந்திராவில், பகல் நேரங்களில் விளக்குகள், மின் விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த மாநில அரசு சமீபத்தில் கோரிக்ைக விடுத்தது. ஆனால் தமிழகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லை.

2009-10ம் ஆண்டு வாக்கில், 5000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது.

பர்னஸ் ஆயில் மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு வாட் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்ற சலுகையை டீசலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் அளிக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கோரியுள்ளனர். இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

வரி விலக்கு மூலம் ஏற்படும் இழப்பீட்டை சமாளிக்க இரு தரப்பும் நஷ்டத்ைதப் பகிர்ந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு 60 சதவீத இழப்பையும், தொழிற்சாலைகள் 40 சதவீத இழப்பையும் பகிர்ந்து கொள்ளும். இதுதொடர்பான இறுதி முடிவு முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோருடன் கலந்து பேசி எடுக்கப்படும் என்றார் வீராசாமி.

Thursday, July 17, 2008

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் கடும் வீழ்ச்சி

கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் பெட்ரோலிய எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு 10 டாலர் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

யூக வர்த்தகத்தால் உலக அளவில் மிகக் கடுமையான அளவுக்கு பெட்ரோலிய எண்ணெய்யின் விலை உயர்ந்து வந்தது. டிமாண்ட்-சப்ளை இடைவெளியால் உயரும் விலையை உற்பத்தியை அதிகரித்தால் குறைக்க முடியும். ஆனால், அமெரிக்க சந்தையில் நடந்த யூக வியாபாரத்தில் உயர்ந்த விலையை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளால் (OPEC) கூட தடுக்க முடியாமல் போனது.

இப்படியே விலை உயர்ந்தால் விரைவிலேயே வாங்கும் சக்தி குறைந்து போய், டிமாண்டும் குறைந்து, பெட்ரோலிய விலையில் பெரும் சரிவு ஏற்படலாம் என opec நாடுகள் கூறி வந்தன. அந்த அச்சம் இப்போது உண்மையாகிவிட்டது.

ஏற்கனவே தேக்கத்தில் உள்ள அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும் தேக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் பரவியுள்ளதால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறையலாம் என்ற பயமும் கூடவே பரவி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலையில் 10 டாலர் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவுக்கு விலை சரிந்தது கடந்த 17 ஆண்டுகளில் நடந்திராத அதிசயமாகும்.

ஆனாலும் பின்னர் நடந்த வர்த்தகத்தில் விலையில் ஏற்றம் ஏற்பட்டு சரிவு 4.5 டாலராக குறைந்தது. இதே போல தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலையை உயர்த்திய அதே யூக வர்த்தகம் தான் விலையை சரித்துள்ளது.

ஆனாலும், கடந்த சில ஆண்டுகளில் பல மடங்காகிவிட்ட கச்சா எண்ணெயின் விலையோடு ஒப்பிடுகையில் இப்போது ஏற்பட்டுள்ள சரிவு மிகக் குறைவானதே.

இப்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 138.69 டாலராக உள்ளது. இது 4 ஆண்டுகள் முன் 35 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றுகாலை 134 டாலருக்கு வந்துள்ளது
நமது இந்தியாவில் விலைகுறைப்பு?

ஏன் ஆக்கக்கூடாது பெண்களின் திருமண வயதை 21 ஆக? - பாகம் 2

ஏன் ஆக்கக்கூடாது பெண்களின் திருமண வயதை 21 ஆக? - பாகம் 2

இது சம்பந்தமான முதல்பதிவிற்க்கான லிங்க் இதில் உள்ளது. இதனை படித்துவிட்டு கீழே இருப்பதை படிக்கவும்.

தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் குறைந்த பட்சம் டிகிரி முடித்த பிறகு திருமணம் செய்தால்தான் அவர்களின் பிற்கால தேவைகளை சுயமாக பூர்த்தி செய்துகொள்ள இயலும்.

தற்போதை நிலைமையில் வால்பையன் பின்னுட்டத்தில் கூறியதைப்போல் பெற்றோர்கள் (ஒரு சிலரைத்தவிர) காதலுக்கு பயந்து 18 அல்லது 19 வயதுக்குள் திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.

அல்லது பெண்கள் தங்களின் தவறான சுயமுடிவாலும் ஆண்களின் கவர்ச்சியாலும் ஈர்க்கப்பட்டு காதலில் தள்ளப்பட்டு பெற்றொர் உற்றோரை பிரிந்து சென்று அவதிப்படுகின்றனர். இதில் மிகச்சிறிய அளவில் உள்ளவர்களே வளமையான வாழ்க்கை பெறுகின்றனர்.

நான் காதலை தவறு எனக்கூற வரவில்லை...காதல் ஏற்படும் வயது மிகத்தவறான வயதாகும், அப்போது வெறும் இனக்கவர்ச்சி இருக்குமே ஒழிய அதன் பின் இருக்கும் இருண்டகாலம் காதலர்களுக்கு தெரிவதில்லை...

ஒரு சிலர் கேட்கலாம் ஏன் பெற்றோர்கள் நன்றாக வளர்க்கலாம் என... ஆனால் இப்போது 12 அ 13 வயதுக்கு மேல் குழந்தைகள் பெற்றோர்கள் கைமீறி போய்விடுகின்றனர்... அதுவும் வசதியுள்ள வீட்டுச்சிறுவ, சிறுமிகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.

அப்படியே பெற்றோர்கள் அடங்கி நடக்கும் டீன் ஏஜ்களை நமது சினிமாக்களும் டீவி சீர்யல்களும் சும்மா விடுவதில்லை....

சினிமாக்களில் மாணவர்கள் படிப்பதே இல்லை... பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவதே காதலிக்கத்தான் என்பதைப்போலவே காட்டுகின்றனர். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் வசூலை குறிவைத்துத்தான் சில இயக்குனர்கள் படமே எடுக்கின்றனர்.

போதாக்குறைக்கு தொலைக்காட்சி.... சினிமாவது செலவு செய்து நாமாக சென்று பார்க்கவேண்டும்... தொ.கா அப்படியல்ல நம் வீட்டு ஹாலுக்கே வந்து தொலைக்கிறது...அதில் சீரியல்கள் அடிக்கும் கொட்டம் உள்ளதே... அதை நாம் எல்லோரும் அனுபவத்துக்கொண்டுதான் உள்ளோம்...

பொதுவாக வாழ்க்கை முறையில் இல்லாத உறவேல்லாம் அதில் வருகிறது. இதைப்பற்றி நமது பதிவர்கள் எற்கனெவே அலசி ஆராய்ந்து காயபோட்டு விட்டனர்...சிரியல்கள் தவிர நமது தொலைக்காட்சிகளில் சினிமா கிளிப்பிங்கள் அனைத்திலும் சில சுவராஸ்யகாட்சிகள் எனக்கூறி எனப்பாதி படத்தை காண்பித்துவிடுகின்றனர். முழுப்படம் பார்த்தாலவது தவறு செய்பவர்கள் கடைசியிலாவது திருந்துவதை காண்பிப்பார்கள்.

டீன் ஏஜ் குழந்தைகள் மனம் அலைபாய்வதற்கு வேறு தேவையேயில்லை...

ஆனால் விதி... அந்த வேறு என்பது நிறையவே இருக்கிறது இக்காலத்தில்....

செல்போன் மற்றும் கணினி, பள்ளியிலும் கல்லூரியிலும் ஏட்டளவில் வேண்டுமானல் செல்போன் கொண்டுவரக்கூடாது என இருக்கலாம். அவை இல்லாமல் எத்தனை பேர் உள்ளனர்? பேசக்கூட வேண்டியதில்லை... sms என்று ஒன்று உள்ளதே அதே போதுமான அளவு கெடுத்துக்கொண்டுள்ளது....

கால்முதல் தலை வரை போர்வை போத்திக்கொண்டு sms மூலம் சாட் செய்துகொண்டுருக்கும் வளரும் தலைமுறையே மிக அதிகம்...

கணினி நம்மைப்போன்ற பதிவர்களுக்கு கூட தெரியாத பல வெப்சைட் முகவரிகள் அவர்களிடம்தான் உள்ளன.

ஆகவே, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்காலத்திய ஊடகங்கள் இளைஞர், இளைஞிகளை தவறான பாதைகளுக்கு மிக வேகமாக இழுத்து செல்கின்றன....

இதில் எல்லாம் தப்பிப்பிழைத்து நன்றாக படித்து நல்ல வேலையோ சுயதொழிலையோ மிக நன்றாக செய்துவரும் இளைஞ, இளைஞிகளும் உள்ளனர்.

ஆனால் நம் கவலைகள் எல்லாம் 18 வயதில் வழிதவறிபோகும் இளைஞர்கள், இளைஞிகள் பற்றித்தான்.............இந்த விவாதம் மேலும் தொடர்கிறது இது சம்பந்தமாக ஆலோசனை சொல்பவர்கள் தயவுசெய்து பின்னுடமிடவும்.

பின்னுட்டமிட நேரம் இல்லாதவர்கள் சைடுபாரில் உள்ள வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்கவும்...

இது ஒரு மீள்பதிவே

Wednesday, July 16, 2008

பெண்களின் திருமண வயதை 21 ஆக்கவேண்டும் - பாகம் 2

இது சம்பந்தமான முதல்பதிவிற்க்கான லிங்க் இதில் உள்ளது. இதனை படித்துவிட்டு கீழே இருப்பதை படிக்கவும்.

தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் குறைந்த பட்சம் டிகிரி முடித்த பிறகு திருமணம் செய்தால்தான் அவர்களின் பிற்கால தேவைகளை சுயமாக பூர்த்தி செய்துகொள்ள இயலும்.

தற்போதை நிலைமையில் வால்பையன் பின்னுட்டத்தில் கூறியதைப்போல் பெற்றோர்கள் (ஒரு சிலரைத்தவிர) காதலுக்கு பயந்து 18 அல்லது 19 வயதுக்குள் திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.

அல்லது பெண்கள் தங்களின் தவறான சுயமுடிவாலும் ஆண்களின் கவர்ச்சியாலும் ஈர்க்கப்பட்டு காதலில் தள்ளப்பட்டு பெற்றொர் உற்றோரை பிரிந்து சென்று அவதிப்படுகின்றனர். இதில் மிகச்சிறிய அளவில் உள்ளவர்களே வளமையான வாழ்க்கை பெறுகின்றனர்.

நான் காதலை தவறு எனக்கூற வரவில்லை...காதல் ஏற்படும் வயது மிகத்தவறான வயதாகும், அப்போது வெறும் இனக்கவர்ச்சி இருக்குமே ஒழிய அதன் பின் இருக்கும் இருண்டகாலம் காதலர்களுக்கு தெரிவதில்லை...

ஒரு சிலர் கேட்கலாம் ஏன் பெற்றோர்கள் நன்றாக வளர்க்கலாம் என... ஆனால் இப்போது 12 அ 13 வயதுக்கு மேல் குழந்தைகள் பெற்றோர்கள் கைமீறி போய்விடுகின்றனர்... அதுவும் வசதியுள்ள வீட்டுச்சிறுவ, சிறுமிகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.

அப்படியே பெற்றோர்கள் அடங்கி நடக்கும் டீன் ஏஜ்களை நமது சினிமாக்களும் டீவி சீர்யல்களும் சும்மா விடுவதில்லை....

சினிமாக்களில் மாணவர்கள் படிப்பதே இல்லை... பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவதே காதலிக்கத்தான் என்பதைப்போலவே காட்டுகின்றனர். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் வசூலை குறிவைத்துத்தான் சில இயக்குனர்கள் படமே எடுக்கின்றனர்.

போதாக்குறைக்கு தொலைக்காட்சி.... சினிமாவது செலவு செய்து நாமாக சென்று பார்க்கவேண்டும்... தொ.கா அப்படியல்ல நம் வீட்டு ஹாலுக்கே வந்து தொலைக்கிறது...அதில் சீரியல்கள் அடிக்கும் கொட்டம் உள்ளதே... அதை நாம் எல்லோரும் அனுபவத்துக்கொண்டுதான் உள்ளோம்...

பொதுவாக வாழ்க்கை முறையில் இல்லாத உறவேல்லாம் அதில் வருகிறது. இதைப்பற்றி நமது பதிவர்கள் எற்கனெவே அலசி ஆராய்ந்து காயபோட்டு விட்டனர்...சிரியல்கள் தவிர நமது தொலைக்காட்சிகளில் சினிமா கிளிப்பிங்கள் அனைத்திலும் சில சுவராஸ்யகாட்சிகள் எனக்கூறி எனப்பாதி படத்தை காண்பித்துவிடுகின்றனர். முழுப்படம் பார்த்தாலவது தவறு செய்பவர்கள் கடைசியிலாவது திருந்துவதை காண்பிப்பார்கள்.

டீன் ஏஜ் குழந்தைகள் மனம் அலைபாய்வதற்கு வேறு தேவையேயில்லை...

ஆனால் விதி... அந்த வேறு என்பது நிறையவே இருக்கிறது இக்காலத்தில்....

செல்போன் மற்றும் கணினி, பள்ளியிலும் கல்லூரியிலும் ஏட்டளவில் வேண்டுமானல் செல்போன் கொண்டுவரக்கூடாது என இருக்கலாம். அவை இல்லாமல் எத்தனை பேர் உள்ளனர்? பேசக்கூட வேண்டியதில்லை... sms என்று ஒன்று உள்ளதே அதே போதுமான அளவு கெடுத்துக்கொண்டுள்ளது....

கால்முதல் தலை வரை போர்வை போத்திக்கொண்டு sms மூலம் சாட் செய்துகொண்டுருக்கும் வளரும் தலைமுறையே மிக அதிகம்...

கணினி நம்மைப்போன்ற பதிவர்களுக்கு கூட தெரியாத பல வெப்சைட் முகவரிகள் அவர்களிடம்தான் உள்ளன.

ஆகவே, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்காலத்திய ஊடகங்கள் இளைஞர், இளைஞிகளை தவறான பாதைகளுக்கு மிக வேகமாக இழுத்து செல்கின்றன....

இதில் எல்லாம் தப்பிப்பிழைத்து நன்றாக படித்து நல்ல வேலையோ சுயதொழிலையோ மிக நன்றாக செய்துவரும் இளைஞ, இளைஞிகளும் உள்ளனர்.

ஆனால் நம் கவலைகள் எல்லாம் 18 வயதில் வழிதவறிபோகும் இளைஞர்கள், இளைஞிகள் பற்றித்தான்.............இந்த விவாதம் மேலும் தொடர்கிறது இது சம்பந்தமாக ஆலோசனை சொல்பவர்கள் தயவுசெய்து பின்னுடமிடவும்.

பின்னுட்டமிட நேரம் இல்லாதவர்கள் சைடுபாரில் உள்ள வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்கவும்...


பாகம் 1

Monday, July 14, 2008

வால்பையன் மற்றும் செந்தழல் ரவி அவர்களுக்கான பதில்கள்

வால்பையன் மற்றும் செந்தழல் ரவி அவர்களுக்கான பதில்கள்

இந்த பதிவில் வால்பையன் ஒரு கடி ஜோக்கை கூறியுள்ளார் என்றால் அண்ணன் செந்தழல் ரவி அவர்கள் இந்த பதிவில் காமெடி படம் எடுத்து ரிலிஸ் செய்துள்ளார்.

இருவரின் அடிப்படை வாதமே தவறாக உள்ளது... ஜோதிடமே தவறு என்று வாதிடுகிறார்களே... எந்த விதத்தில் தவறு என கூறுவதில்லை...அவர்கள் சொல்வதெல்லாம்... கிளி ஜோதிடம், மரத்தடி ஜோதிடர், வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், என்பவைகளைத்தான் குறிப்பிடுகிறார்கள்...

இவர்களுக்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தமே இல்லை மரத்தடி ஜோதிடராவது இராசிக்கட்டங்களை வைத்துக்கொண்டு எதோ தனக்கு தெரிந்ததை சொல்லிக்கொண்டுள்ளார்.... மற்றவர்களுக்கும் ஜோதிடத்திற்க்கும் சிறிதளவும் சம்பந்தமில்லை.

அப்படியிருக்க அவர்களை இங்கே இழுத்துவர வேண்டிய அவசியமேயில்லை.

மேலும் செந்தழல் ரவி அண்ணாவின் கேள்விக்களுக்கு வாத்தியார் ஐயா விளக்கமான பதிலே கொடுத்துவிட்டார்... மேலும் அதற்கான ஆதாரங்களையும் இந்த பதிவில் கொடுத்துள்ளார்.

ஜோதிடர்கள் கூறிடும் விதத்தில் எதேனும் தவறு ஏற்படக்கூடுமே ஒழிய ஜோதிடம் தவறே அல்ல...நான் ஏற்கனவே கூறியதான் ஒரு சில மருத்துவர்கள் மருந்தினால் நோய் குணமாக வில்லையெனில் ஒன்று மருந்து தவறாக இருக்கலாம் அல்லது கொடுத்த மருந்துவர் தவறாக இருக்கலாம்... மருத்துவம் தவறாகிவிடுமா??

யூக வணிகத்தால்தால் தான் தனது விவசாய விளைபொருள்கள் விலையேற்றம் ஏற்படுகிறது என்று கூறினால் அது தவறு என்று வால்பையன் வாதிடுகிறார் எப்படி?

அவர் அவ்வணிகத்திலேயே உள்ளார். அதில் நடக்கும் அனைத்தும் அ முதல் அக்கு (ஆய்த எழுத்துக்கு என்ன key ?) வரை அவருக்கு தெரியும் ஆனால் மற்றவர்களுக்கு 3 மாதங்கள் கழித்து வரும் விளையாத விளைபொருளை இன்றே விலை பேசி அதிகவிலைக்கு விற்றுவிடுகின்றனர் அதனால்தான் விலை ஏறிவிட்டது என்று பேசுகின்றனர்.

இதற்கு பேசுபவர்கள் எல்லாம் யூகவணிகத்தை கற்றுக்கொண்டால் தான் அவர்களுக்கு புரியும். ஆனால் எல்லாரும் கற்றுக்கொள்ள முடியுமா? அது முடியாது

அதற்கு பதிலாக வால்பையன் போன்ற வல்லுனர்களிடம் ஆலோசித்து தெரிந்து கொள்ளலாம்... அதைச்செய்யாமல் யூகவணிகமே தவறு என்று கூறுவதைப் போலத்தான் உள்ளது நீங்கள் கூறிடும் ஜோதிடம் தவறு என்பதும்...

யூகவணிகம் சரி என எப்படி வல்லுனர் வால்பையன் கூறுகிறாரோ அதைப்போலத்தான் ஜோதிடத்தில் வல்லுனராக உள்ள வாத்தியார் ஐயா பதிவிடுகிறார். அதை நானும் உண்மைதமிழன் அண்ணாவும் ஆமோதிக்கிறோம்

அதற்காக நானும் உ.த அவர்களும் ஜோதிட வல்லுனர்கள் என சொல்லவரவில்லை... நாமிருவரும் எமது அனுபவத்தால் அதனை நன்கு உணர்ந்தவர்கள்.

பின்னுட்டத்தில் உள்ள ஆறுதல் வார்த்தைகளை வைத்து கிண்டலடிக்கவேண்டியது இல்லை. உலகில் கஷ்டம் இல்லாதவர்கள் ஒருவரைச் சொல்லுங்கள் பார்போம்? யாருமே கிடையாது அனைவருக்கும் கஷ்டம் உண்டுதான். ஒவ்வோருவருக்குமே அவரவர் கஷ்டம் பெரியதுதான். அதை எப்படி தன்னம்பிக்கையோடு சமாளிக்கிறோம் என்பது அவரவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஜோதிடத்தில் ஜோதிட நாத்திகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அதற்கு வாத்தியார் ஐயா ஒவ்வொன்றுக்கு பதில் அளித்துள்ளார் மேலும் அளித்துவருகிறார். அதை படித்துபாருங்கள் அல்லது அதை தைரியமாக கேளுங்கள் நான் அவரின் பதிவிலிருந்த்து எடுத்து தர தயாராக் இருக்கிறேன்.

ஆனால் ஜோதிடம் சம்பந்தபட்டதாக இருக்கவேண்டும். பொதுக்கேள்விகளை தவிருங்கள்.

வாத்தியார் ஐயா மௌனமே ஆயுதம் என அறிவுருத்தி இருந்தாலும் பதில் அளிக்கவேண்டிய இடத்தில் மௌனமாக இருந்தல் சரியல்ல என்பதால்தான் இப்பதிவு

பெண்களின் திருமண வயதை 21 ஆக்கவேண்டும்

தற்போது நமது சமுதாயத்திற்கு மிகத்தேவையான ஒரு விவாதத்தை தொடங்குகிறேன் நமது சமுதாயத்தில் முற்காலத்தில் பெண்களுக்கு 10 முதல் 12 வயதிலேயே பால்ய விவாகம் (7வயதில் கூட) நடைபெற்றுக்கொண்டு இருந்தது...

அவ்வயதில் திருமணம் செய்யும் பெண்கள் உடல் அளவிலும் மற்றும் மன அளவிலும் வளரவேண்டி இருப்பதால் பல பெரியோர்களின் முயற்சியால் பெண்களின் திருமண வயது 18 என சட்டபூர்வமாக ஆக்கப்பட்டது.

அதனால் 18 வயது முன்னால் பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது மீறி செய்தால் அத்திருமணம் செல்லாது. பெண்கள் அவ்வயது வரை பெற்றோரின் பாதுகாப்பில்தான் இருக்கவேண்டும். இச்சட்டம் ஒரு சில சம்பவங்களை தவிர்த்து (ஏன் சில பெற்றோர்களால் நன்றாகவே மீறப்படுகிறது) செவ்வனே நிறைவேற்றப்படுகிறது.

மேலும், தற்போது திருமணங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும் சட்டம் இயற்றப்பட்டு ஒவ்வோரு மாவட்டமாக ஏற்கனவே நடைபேற்றத்திருமணங்கள் வீடுவீடாக சென்று பதிவு செய்யும் வேலை நடைபெற்றுவருகிறது.

விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் திருமணமானவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு நடக்கும் ஒவ்வோரு திருமணமும் அதாவது பெற்றோரால் பார்த்து நிச்சயமாக்கப்பட்டு கல்யாண மண்டபத்தில் நடைபெறும்

திருமணம், கோயில் நடக்கும் திருமணம், சர்ச்சில் நடக்கும் திருமணம், போலீஸ் ஸ்டேசனில் நடக்கும் திருமணம் அனைத்தும். (இதில் காதலர்கள் அதிகபட்சம் பதிவு அலுவலகத்தில் தான் செய்து கொள்கின்றனர்)

இதனால் இச்சட்டம் இண்டு இடுக்கில்லாமல் அமல் ஆக்கப்பட்டு விடும், இதனால் பெண்களுக்கும் சட்டபூர்வமான பாதுகாப்பும் முழு அளவில் கிடைத்துவிடும்.

இப்போது நான் விசயத்திற்கு வருகிறேன்.

பெண்கள் 18 வயதில் உடல் அளவில் திருமணத்திற்கு வளர்ந்துவிட்டாலும் மன அளவில் வளர்ந்து விடுகிறார்களா? என்பதே என் கேள்வி.

ஒரு சிலரினை தவிர மிகப்பெரும்பான்மையான பெண்கள் அவ்வயதில் மனதளவில் வளர்ச்சி பெருவதில்லை. மேலும் அவ்வயதில் போதுமான கல்வி அறிவும் பெருவதில்லை. அச்சூழ்நிலையில் அவர்களால் எந்தவோரு சுயமான முடிவும் சரியாக எடுக்க இயலாது.

கல்வியும் முற்காலத்தில் அந்தக்கால SSLC இருந்தாலே வாழ்க்கைக்கு மற்றும் குறைந்த பட்ச வாழ்க்கை சம்பாத்தியத்திற்கு போதுமானதாக இருந்தது. அது 18 வயதில் சாத்தியம் தான்...

ஆனால் தற்போது அப்படியா? இக்கால SSLC என்பது ஒன்றுமே இல்லை.

அதிகபட்சம் 18 வயதில் +2 முடிக்க முடியும்... அதை வைத்துக்கொண்டு பெண்கள் என்ன செய்ய இயலும். இக்காலத்தில் குறைந்தது ஒரு டிகிரி இருந்தால்தான் வாழ்க்கையை ஒட்ட இயலும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும்.

மிகப்பெரிய பதிவாக வருவதால் மீதிப்பதிவை அடுத்த பதிவில் இடுகிறேன்

இது சம்பந்தமாக ஆலோசனை சொல்பவர்கள் தயவுசெய்து பின்னுடமிடவும்

பாகம் 2

Saturday, July 12, 2008

உண்மைத் தமிழன்: ஜோதிடம் - உண்மையா? பொய்யா? - செந்தழல் ரவிக்கு எனது பதில்!

உண்மைத்தமிழன் அவர்களின் இப்பதிவை மீள்பதிவிடுவதில் பெருமை கொள்கிறேன்

உண்மைத் தமிழன்: ஜோதிடம் - உண்மையா? பொய்யா? - செந்தழல் ரவிக்கு எனது பதில்!

நம்பிக்கைக்கு ஆப்பு மட்டுமல்ல கடப்பாறையை கூட வைக்கமுடியாது

இது முழுக்க முழுக்க நம்பிக்கை சம்பந்தமான விசயம்....

இதில் நாத்திக சிகாமணிகள் தலையிடமால் இருப்பதே நலம்...
அமேரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்பி கல் எடுத்து வந்ததையே நம்பாத
கூட்டம் இன்னும் அமெரிக்காவிலேயே உள்ளது... சும்மா டூம் லைட் போட்டு
டீவியில் காட்டி ஏமாற்றி உள்ளனர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்...

ஆகவே நம்புபவர்கள் நம்பட்டும், நம்பதாவர்கள் தள்ளியே இருங்கள். அதில் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமல்ல...

ஜோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால் உண்மைதான்...நீ எனப்பா ஏமாற்றும் ஜோதிடரிடம் போகிறாய்? நல்ல ஜோதிடர் அறிந்து அவரிடம் செல்...

இதற்கு பதில் சொல்லுங்கள்.... நமது நாட்டில் (ஏன் நமது நாடு) உலக அளவில் என்றே எடுத்துக்கொள்ளூங்கள்.

எந்த தொழிலாவது ஏமாற்றுக்காரர்கள் இல்லாதது என உள்ளது என்று கூறுங்கள்

புனிதமான தொழில் எனப்படும் மருத்துவத்தில் போலி டாக்டர்கள் இல்லையா?
கோயில்,சர்ச்,மசூதியில் போலிவாதிக்ள் இல்லையா?
வியாபாரத்தில் நியாயவாதி என ஒருவன் உண்டா? வியாபாரிக்கு பெயரே பொய்யன்தான்...எவ்வளவு அதிகமாக பொய் சொல்கிறானோ அவ்வளவு லாபம்..
அரசியல் ? சொல்லவே வேண்டாம்...
பள்ளிகூடம்??? கல்லூரி..........
வக்கில்கள்???..................... இவர்கள் பொய்யே சொல்வதில்லை
காவல் துறை???..........
ஏன்.... பங்கு வணிகத்தில் ஒரு ஹர்சத் மேத்தாவைப் போல் பல பேர் இல்லையா?

இதைபோல் பல உதாரணம் சொல்ல்லாம்...

மக்களின் நிலமை எப்போதும் எரியும் கொள்ளீயில் எது நல்ல கொள்ளி என தேடிப்பிடிக்க வேண்டிய நிலமைதான் உள்ளது....

ஆகவே, எதுவும் நாம் தேர்ந்து எடுத்து கொள்வதில்தான் உள்ளது....
சரி, நாத்திகவாதிகள் சொல்லலாம், நாம் மக்களை திருத்துவதற்குதான் சொல்கிறோம்.. ஜோதிடம் பார்க்கவேண்டாம் ஏமாற்றுவார்கள் என்று...

இதில்தான் தவறு செய்கிறீர்கள்... நீங்கள் போலி ஜோதிடரை அடையாளம் காட்டுங்கள்...அது நியாயம்... ஜோதிடமே தவறு எனச் சொல்லுவதில் என்ன நியாயம் உள்ளது...

ஊருக்கு இரண்டு போலி மருந்துவர் பிடிபட்டால் இனி மருத்துவமே தவறு.. இனி யாரும் மருத்துவம் பார்க்கவேண்டாம் எனச் சொல்வீர்களா....

இல்லை மளிகைக்கடைக்காரன் கலப்படம் செய்தால் இனி மளிகைக்கடையிலேயா சாமன்கள் வாங்கவேண்டாம் எனச்சொல்வீர்களா?

ஹர்சத் மேத்தா பங்கு வணிகத்தில் ஊழல் செய்ததால் யாரும் பங்கு வணிகத்தில் ஈடுபடக்கூடாது சொல்வீர்களா?

அடுத்து ஒரு கடினமானது....

ராமர், கிருஷ்ணர்,காந்தி,யேசு, நபிகள்,புத்தர்,ஆதிசங்கரன்,ராமனுஜர் இந்த பூமியில்தான்
ராவணனன்,கம்சன்,கோட்சே,துரியோதனன்,ஹிட்லர்,கோயபல்ஸ்,எனக்கெட்டவர்களும் பிறக்கிறார்கள்

இன்னும் சொல்லப்போனால் கெட்டவர்கள்தான் அதிகம் பிறக்கிறார்கள்... ஆகவே மனிதர்களே உங்களால்தான் கெட்டவர்கள் அதிகம் பிறக்கிறாரகள்...

ஆகவே மனிதர்கள் இனபெருக்கமே செய்யக்கூடாது என நாத்திகர்கள் போராடலாமே?

ஏன் செய்வதில்லை....

உங்களுக்கு விருப்பம் இல்லையா.. விட்டுவிடுங்கள்....மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்

Thursday, July 10, 2008

கச்சா விலை உயர்விற்கு மேற்கு நாடுகளே காரணம்

கச்சா விலை உயர்விற்கு மேற்கு நாடுகளே காரணம்கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர்களைக் கடந்துள்ளதற்கு மேற்கு நாடுகளே காரணம் என்று மலேசியா சென்றுள்ள ஈரான் அதிபர் அஹமதி‌நிஜாத் குற்றம்சாட்டியுள்ளார்.

மலேசியாவில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ஈரான் மீது போர் தொடுப்பது பற்றிய செய்திகளை நகைச்சுவையான கருத்து என்று கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு குறித்து அவர் கூறுகையில், கச்சா உற்பத்தி அதன் தேவையை விட அதிகமாகவே உள்ளது, எனவே விலை உயர்விற்கு சந்தை நிலவரங்கள் காரணமல்ல என்றார்.

"ஒரு சிலர் தங்கள் லாபத்திற்காக கச்சா விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். அவர்க‌ள் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள்.

டாலர் மதிப்பு சரிவினாலும், எரிபொருள் மூலம் கிடைக்கும் அதிக வரி லாபங்களை அடையும் நோக்கத்துடன் அமெரிக்காவும், சில ஐரோப்பிய நாடுகளும் செய்து வரும் நடவடிக்கைகளால் கச்சா விலை அதிகரித்துள்ளது. சில ஐரோப்பிய நாடுகளில் 70 விழுக்காடு எரிபொருள் லாபம் அரசிற்கு வரியாகச் செல்கிறது.

இதன் அர்த்தம் என்னவெனில், கச்சா உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் வருவாயைக் காட்டிலும் அந்த நாடுகளின் வருவாய் அதிகமாக உள்ளது என்பதே.

"செயற்கையாக அதிகரிக்கப்பட்ட கச்சா விலை" காரணத்தை சாக்காக வைத்துக் கொண்டு வட துருவத்தில் கச்சா எண்ணெய் இரைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அமெரிக்கா நியாயப்படுத்தலாம்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tuesday, July 8, 2008

கணிமை: தேன்கூடு மறுமொழி நிரல் இணைத்த பதிவர்கள் கவனத்துக்கு

கணிமை: தேன்கூடு மறுமொழி நிரல் இணைத்த பதிவர்கள் கவனத்துக்கு

நன்றி கணிமை அவர்களே !

இன்று நாள் முழுவதும் இதற்காக மண்டையை பீய்த்துக்கொண்டுள்ளேன்.


தயவுசெய்து எந்தநிரல்களை எடுக்கவேண்டும் என தாங்களாவது அல்லது மற்ற பதிவர்களாவது தயவுசெய்து ஒரு பதிவிடுங்களேன்

கணிமை பதிவில் பின்னுட்டம் வேலை செய்யவில்லை

நன்றி

Monday, July 7, 2008

தமிழ்மணம் நிர்வாகிக்கு ஒரு அவசர கோரிக்கை

தமிழ்மணம் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை

நான் கூடுதுறை, புத்துணர்ச்சி என இருபதிவுகளை சுமார் 10 மாதங்களாக பதிவிட்டு வருகிறேன். ஆனால் எனது பின்னுட்டங்கள் ம திரட்டியில் திரட்டப்படுவதில்லை.

எனது பின்னுட்டங்களை மட்டுறுத்தல் செய்துதான் வெளியிடுகிறேன். இது சம்பந்தமாக பல ஈமெயில்களையும் நிர்வாகிக்கு அனுப்பிவைத்துள்ளேன்.

அவைகளுக்கு எந்த பதிலும் இல்லை.

ஆனால் என்ன காரணத்தால் எனது பின்னுட்டங்கள் தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில்லை என்று தெரியவில்லை.

ஒரு வரி இரண்டு வரிகளில் வரும் மொக்கை பதிவுகளில் எல்லாம் பின்னுட்டம் திரட்டப்படும் போது ஏன் எனது பதிவுகளின் பின்னுடங்களை திரட்ட மறுத்துவருகிறிர்கள்?

தயவு செய்து எனது இரு பதிவுகளின் பின்னுட்டங்கள் திரட்ட ஏற்பாடு செய்யுங்கள். இல்லை இதற்காக நான் என்ன செய்யவேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள்.

மூத்த பதிவிர்களின் கவனத்திற்கு: இது சம்பந்தமாக தங்களின் உதவியையும் ஆலோசனைகளையும் எனக்கு பின்னுட்டமாக அளிக்க வேண்டுகிறேன்

Sunday, July 6, 2008

அடுத்த காமெடி - யாருடன் கூட்டு? கார்த்திக் தகவல் -

இதில் அடைப்புக்குறிக்குள் இருப்பது மட்டும்தான் நான் எழுதியது...

கவுரமான எண்ணிக்கையில் இடம் தரும் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைக்க நாடாளும் மக்கள் கட்சி தயாராக இருப்பதாக, அதன் தலைவரான நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

(கவுரமான எண்ணிக்கை இடம் = நெஞ்சத்தில் இடம் )

இதுதொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழ்நிலையில்தான் உள்ளன என்றார்.

(அதாவது எனது கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால்தான் 3 லக்க ஓட்டாவது பெறமுடியும்)

தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு நடந்து வருவதாகக் குறிப்பிட்ட கார்த்திக், மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரம் தனது அதிக இடங்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

( பார்வர்டு பிளாக் கட்சியுடன் பேச்சு வார்த்தை இல்லையா?)

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை வரவேற்ற கார்த்திக், தற்போதைய சூழ்நிலையில் அணு சக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு தேவையானது என்றார்.

(ஒகே சொல்லிவிட்டார் இடதுசாரிகள் இனி மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்)

Friday, July 4, 2008

செல்பேசி உபயோகிப்பார்களே ஜாக்கிரதை !

செல்பேசி பயனர்களை அச்சுறுத்தும் ஹேக்கர்கள்

இதுவரை ஈ-மெயிலில் வந்து நமது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கடன் அட்டை விவரங்களை திருட்டுத்தனமாக பெற்று பணத்தினை அள்ளிச்சென்றவர்கள் இப்போது தங்களது வேலை செல்பேசி காட்டத்தொடங்கியுள்ளனர்

நம் நாட்டில் மாதம் தோறும் பல லட்சம் செல்போன் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன. இதில் மற்றவர்களுடன் பேசலாம் என்றாலும், பெரும்பாலானவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது எஸ்.எம்.எஸ் சேவை தான்.

தற்போது இந்த எஸ்.எம்.எஸ் பயன்படுத்தி ஹேக்கர்கள் (Hackers), செல்போன் பயனாளர்களை சொந்த நிதி விவரங்களை திரட்டுவது உள்ளிட்ட மோசடி வேலைகளில் கவனம் செலுத்தக் கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளது.

சமீபத்தில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒரு செல்பேசி பயனாளருக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ல் பிரபல நிறுவனத்தின் மொபைல் பரிசுப் போட்டியில் தங்களுக்கு சுமார் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தொகையைப் பெற ஒரு சர்வதேச தொலைபேசி எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு அந்த எஸ்.எம்.எஸ். தெரிவித்தது. முதலில் உற்சாகமடைந்த அந்த நபர், பிறகு யோசித்துப் பார்த்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் எந்தப் பொருளையும் தாம் பயன்படுத்தாத போது எதற்கு இதுபோன்று எஸ்.எம்.எஸ். வருகிறது என்று சந்தேகம் கொண்டார்.

இச்சம்பவம் தற்போது செல்போன் பயனாளர்களை எச்சரிக்க உதவி புரிந்துள்ளது. அதாவது இதுபோன்ற நம்பிக்கையூட்டி செல்போன் வாடிக்கையாளர்களை ஏதாவது எண்ணை தொடர்பு கொள்ளச் செய்து தகவல்களைப் பெற்று கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு மோசடிகளில் ஈடுபடலாம் என்று செக்யூரிட்டி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

கார்ட்னர் வெளியிட்டுள்ள தகவலின் படி இதுபோன்ற மோசடிகளால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்ட ஒரு தனி நபர் 1,244 டாலர்கள் வரை நஷ்டமடைகிறார் என்று தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியா செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகபட்ச எல்லைகளை தொடவுள்ள நிலையில் இந்த மோசடிகள் கணினித் துறையிலிருந்து செல்போன்களுக்கு மாறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட வடஇந்தியருக்கு வந்த அந்த ஏமாற்று எஸ்.எம்.எஸ். இதற்கு முன்னோடி என்று ஏஷியன் ஸ்கூல் ஆஃப் சைபர் லா தலைவர் ரோஹாஸ் நாக்பால் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு எண்ணின் தரவுகளை மற்றொரு நபருக்கு தெரிவிப்பது பற்றிய விதிமுறைகள் இந்தியாவில் மிக பலவீனமாக இருக்கிறது என்றும் இந்த துறையை சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.

வரும் காலங்களில் புதுவகை செல்பேசிகள் ஒரு முழு அளவிலான கணினிப் பயன்பாடுகளாகவே மாறும் சூழ்நிலையில் இது போன்ற அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சேவை வழங்குவோரின் உதவியுடன், புதிய விதிமுறைகளையும், கண்டுபிடிப்புத் தொழில் நுட்பங்களையும் மேம்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews