Thursday, July 17, 2008

ஏன் ஆக்கக்கூடாது பெண்களின் திருமண வயதை 21 ஆக? - பாகம் 2

ஏன் ஆக்கக்கூடாது பெண்களின் திருமண வயதை 21 ஆக? - பாகம் 2

இது சம்பந்தமான முதல்பதிவிற்க்கான லிங்க் இதில் உள்ளது. இதனை படித்துவிட்டு கீழே இருப்பதை படிக்கவும்.

தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் குறைந்த பட்சம் டிகிரி முடித்த பிறகு திருமணம் செய்தால்தான் அவர்களின் பிற்கால தேவைகளை சுயமாக பூர்த்தி செய்துகொள்ள இயலும்.

தற்போதை நிலைமையில் வால்பையன் பின்னுட்டத்தில் கூறியதைப்போல் பெற்றோர்கள் (ஒரு சிலரைத்தவிர) காதலுக்கு பயந்து 18 அல்லது 19 வயதுக்குள் திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.

அல்லது பெண்கள் தங்களின் தவறான சுயமுடிவாலும் ஆண்களின் கவர்ச்சியாலும் ஈர்க்கப்பட்டு காதலில் தள்ளப்பட்டு பெற்றொர் உற்றோரை பிரிந்து சென்று அவதிப்படுகின்றனர். இதில் மிகச்சிறிய அளவில் உள்ளவர்களே வளமையான வாழ்க்கை பெறுகின்றனர்.

நான் காதலை தவறு எனக்கூற வரவில்லை...காதல் ஏற்படும் வயது மிகத்தவறான வயதாகும், அப்போது வெறும் இனக்கவர்ச்சி இருக்குமே ஒழிய அதன் பின் இருக்கும் இருண்டகாலம் காதலர்களுக்கு தெரிவதில்லை...

ஒரு சிலர் கேட்கலாம் ஏன் பெற்றோர்கள் நன்றாக வளர்க்கலாம் என... ஆனால் இப்போது 12 அ 13 வயதுக்கு மேல் குழந்தைகள் பெற்றோர்கள் கைமீறி போய்விடுகின்றனர்... அதுவும் வசதியுள்ள வீட்டுச்சிறுவ, சிறுமிகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.

அப்படியே பெற்றோர்கள் அடங்கி நடக்கும் டீன் ஏஜ்களை நமது சினிமாக்களும் டீவி சீர்யல்களும் சும்மா விடுவதில்லை....

சினிமாக்களில் மாணவர்கள் படிப்பதே இல்லை... பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவதே காதலிக்கத்தான் என்பதைப்போலவே காட்டுகின்றனர். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் வசூலை குறிவைத்துத்தான் சில இயக்குனர்கள் படமே எடுக்கின்றனர்.

போதாக்குறைக்கு தொலைக்காட்சி.... சினிமாவது செலவு செய்து நாமாக சென்று பார்க்கவேண்டும்... தொ.கா அப்படியல்ல நம் வீட்டு ஹாலுக்கே வந்து தொலைக்கிறது...அதில் சீரியல்கள் அடிக்கும் கொட்டம் உள்ளதே... அதை நாம் எல்லோரும் அனுபவத்துக்கொண்டுதான் உள்ளோம்...

பொதுவாக வாழ்க்கை முறையில் இல்லாத உறவேல்லாம் அதில் வருகிறது. இதைப்பற்றி நமது பதிவர்கள் எற்கனெவே அலசி ஆராய்ந்து காயபோட்டு விட்டனர்...சிரியல்கள் தவிர நமது தொலைக்காட்சிகளில் சினிமா கிளிப்பிங்கள் அனைத்திலும் சில சுவராஸ்யகாட்சிகள் எனக்கூறி எனப்பாதி படத்தை காண்பித்துவிடுகின்றனர். முழுப்படம் பார்த்தாலவது தவறு செய்பவர்கள் கடைசியிலாவது திருந்துவதை காண்பிப்பார்கள்.

டீன் ஏஜ் குழந்தைகள் மனம் அலைபாய்வதற்கு வேறு தேவையேயில்லை...

ஆனால் விதி... அந்த வேறு என்பது நிறையவே இருக்கிறது இக்காலத்தில்....

செல்போன் மற்றும் கணினி, பள்ளியிலும் கல்லூரியிலும் ஏட்டளவில் வேண்டுமானல் செல்போன் கொண்டுவரக்கூடாது என இருக்கலாம். அவை இல்லாமல் எத்தனை பேர் உள்ளனர்? பேசக்கூட வேண்டியதில்லை... sms என்று ஒன்று உள்ளதே அதே போதுமான அளவு கெடுத்துக்கொண்டுள்ளது....

கால்முதல் தலை வரை போர்வை போத்திக்கொண்டு sms மூலம் சாட் செய்துகொண்டுருக்கும் வளரும் தலைமுறையே மிக அதிகம்...

கணினி நம்மைப்போன்ற பதிவர்களுக்கு கூட தெரியாத பல வெப்சைட் முகவரிகள் அவர்களிடம்தான் உள்ளன.

ஆகவே, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்காலத்திய ஊடகங்கள் இளைஞர், இளைஞிகளை தவறான பாதைகளுக்கு மிக வேகமாக இழுத்து செல்கின்றன....

இதில் எல்லாம் தப்பிப்பிழைத்து நன்றாக படித்து நல்ல வேலையோ சுயதொழிலையோ மிக நன்றாக செய்துவரும் இளைஞ, இளைஞிகளும் உள்ளனர்.

ஆனால் நம் கவலைகள் எல்லாம் 18 வயதில் வழிதவறிபோகும் இளைஞர்கள், இளைஞிகள் பற்றித்தான்.............இந்த விவாதம் மேலும் தொடர்கிறது இது சம்பந்தமாக ஆலோசனை சொல்பவர்கள் தயவுசெய்து பின்னுடமிடவும்.

பின்னுட்டமிட நேரம் இல்லாதவர்கள் சைடுபாரில் உள்ள வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்கவும்...

இது ஒரு மீள்பதிவே

1 comment:

Robin said...

பெண்களின் திருமண வயது குடும்ப சூழ்நிலை, சொந்த காரணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. எல்லாப் பெண்களும் பதினெட்டு வயதில் திருமணம் செய்வதில்லை. சிலர் முப்பது வயதிற்கு மேலும் செய்வதுண்டு. எனவே இருபத்தியொரு வயதிற்கு மேல் தான் திருமணம் என்று சட்டம் கொண்டு வருவது தவறு. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பெண்ணின் திருமண வயது பதினாறு மட்டுமே.

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews