Monday, July 14, 2008

வால்பையன் மற்றும் செந்தழல் ரவி அவர்களுக்கான பதில்கள்

வால்பையன் மற்றும் செந்தழல் ரவி அவர்களுக்கான பதில்கள்

இந்த பதிவில் வால்பையன் ஒரு கடி ஜோக்கை கூறியுள்ளார் என்றால் அண்ணன் செந்தழல் ரவி அவர்கள் இந்த பதிவில் காமெடி படம் எடுத்து ரிலிஸ் செய்துள்ளார்.

இருவரின் அடிப்படை வாதமே தவறாக உள்ளது... ஜோதிடமே தவறு என்று வாதிடுகிறார்களே... எந்த விதத்தில் தவறு என கூறுவதில்லை...அவர்கள் சொல்வதெல்லாம்... கிளி ஜோதிடம், மரத்தடி ஜோதிடர், வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், என்பவைகளைத்தான் குறிப்பிடுகிறார்கள்...

இவர்களுக்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தமே இல்லை மரத்தடி ஜோதிடராவது இராசிக்கட்டங்களை வைத்துக்கொண்டு எதோ தனக்கு தெரிந்ததை சொல்லிக்கொண்டுள்ளார்.... மற்றவர்களுக்கும் ஜோதிடத்திற்க்கும் சிறிதளவும் சம்பந்தமில்லை.

அப்படியிருக்க அவர்களை இங்கே இழுத்துவர வேண்டிய அவசியமேயில்லை.

மேலும் செந்தழல் ரவி அண்ணாவின் கேள்விக்களுக்கு வாத்தியார் ஐயா விளக்கமான பதிலே கொடுத்துவிட்டார்... மேலும் அதற்கான ஆதாரங்களையும் இந்த பதிவில் கொடுத்துள்ளார்.

ஜோதிடர்கள் கூறிடும் விதத்தில் எதேனும் தவறு ஏற்படக்கூடுமே ஒழிய ஜோதிடம் தவறே அல்ல...நான் ஏற்கனவே கூறியதான் ஒரு சில மருத்துவர்கள் மருந்தினால் நோய் குணமாக வில்லையெனில் ஒன்று மருந்து தவறாக இருக்கலாம் அல்லது கொடுத்த மருந்துவர் தவறாக இருக்கலாம்... மருத்துவம் தவறாகிவிடுமா??

யூக வணிகத்தால்தால் தான் தனது விவசாய விளைபொருள்கள் விலையேற்றம் ஏற்படுகிறது என்று கூறினால் அது தவறு என்று வால்பையன் வாதிடுகிறார் எப்படி?

அவர் அவ்வணிகத்திலேயே உள்ளார். அதில் நடக்கும் அனைத்தும் அ முதல் அக்கு (ஆய்த எழுத்துக்கு என்ன key ?) வரை அவருக்கு தெரியும் ஆனால் மற்றவர்களுக்கு 3 மாதங்கள் கழித்து வரும் விளையாத விளைபொருளை இன்றே விலை பேசி அதிகவிலைக்கு விற்றுவிடுகின்றனர் அதனால்தான் விலை ஏறிவிட்டது என்று பேசுகின்றனர்.

இதற்கு பேசுபவர்கள் எல்லாம் யூகவணிகத்தை கற்றுக்கொண்டால் தான் அவர்களுக்கு புரியும். ஆனால் எல்லாரும் கற்றுக்கொள்ள முடியுமா? அது முடியாது

அதற்கு பதிலாக வால்பையன் போன்ற வல்லுனர்களிடம் ஆலோசித்து தெரிந்து கொள்ளலாம்... அதைச்செய்யாமல் யூகவணிகமே தவறு என்று கூறுவதைப் போலத்தான் உள்ளது நீங்கள் கூறிடும் ஜோதிடம் தவறு என்பதும்...

யூகவணிகம் சரி என எப்படி வல்லுனர் வால்பையன் கூறுகிறாரோ அதைப்போலத்தான் ஜோதிடத்தில் வல்லுனராக உள்ள வாத்தியார் ஐயா பதிவிடுகிறார். அதை நானும் உண்மைதமிழன் அண்ணாவும் ஆமோதிக்கிறோம்

அதற்காக நானும் உ.த அவர்களும் ஜோதிட வல்லுனர்கள் என சொல்லவரவில்லை... நாமிருவரும் எமது அனுபவத்தால் அதனை நன்கு உணர்ந்தவர்கள்.

பின்னுட்டத்தில் உள்ள ஆறுதல் வார்த்தைகளை வைத்து கிண்டலடிக்கவேண்டியது இல்லை. உலகில் கஷ்டம் இல்லாதவர்கள் ஒருவரைச் சொல்லுங்கள் பார்போம்? யாருமே கிடையாது அனைவருக்கும் கஷ்டம் உண்டுதான். ஒவ்வோருவருக்குமே அவரவர் கஷ்டம் பெரியதுதான். அதை எப்படி தன்னம்பிக்கையோடு சமாளிக்கிறோம் என்பது அவரவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஜோதிடத்தில் ஜோதிட நாத்திகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அதற்கு வாத்தியார் ஐயா ஒவ்வொன்றுக்கு பதில் அளித்துள்ளார் மேலும் அளித்துவருகிறார். அதை படித்துபாருங்கள் அல்லது அதை தைரியமாக கேளுங்கள் நான் அவரின் பதிவிலிருந்த்து எடுத்து தர தயாராக் இருக்கிறேன்.

ஆனால் ஜோதிடம் சம்பந்தபட்டதாக இருக்கவேண்டும். பொதுக்கேள்விகளை தவிருங்கள்.

வாத்தியார் ஐயா மௌனமே ஆயுதம் என அறிவுருத்தி இருந்தாலும் பதில் அளிக்கவேண்டிய இடத்தில் மௌனமாக இருந்தல் சரியல்ல என்பதால்தான் இப்பதிவு

36 comments:

செந்தழல் ரவி said...

வாத்தியார் அய்யா அவர்கள்...

"எப்படி என் வகுப்பை கேள்வி கேக்கப்போச்சு" என்று கம்பை எடுத்து சுற்றினாரே தவிர, சரியான விளக்கத்தை எடுத்து வைக்கவில்லை என்பதே என் கருத்து...

பார்ப்பணீயக்கூறான சோதிடம் இன்னும் உங்களை வாட்டி வதைப்பதில் ஆச்சர்யம்மேதும் இல்லை...

இந்து இஸம் இருக்கும்வரை சோதிட இஸமும் இருக்கும் என்றுதான் தோன்றுக்கிறது....

கண்ணதாசன் பாடலை கேட்டு பழக்கப்பட்டுவிட்ட வாத்தியாரை, கண்ணதாசன்ன் பாடல்கள் சரியில்லை, மொக்கை, இனி கேட்காதீரும் என்றூ சொன்னால் - அவரால் அதனை மாற்றிக்கொள்ளமுடியுமா என்ன ?

ஆனால் கண்ணதாசனை அறியாத ஒரு தலைமுறை இப்போது வந்துவிடவில்லையா என்ன ?

காலச்சக்கரம் உருண்டோடும்போது, அபத்தங்களும் அனர்த்தங்களும், அலையில் அடித்துச்செல்லும் துரும்பைப்போல காணாமல் போய்விடும்...

அப்பாலிக்கா வர்ட்டாங்னா...

வால்பையன் said...

//ஜோதிடமே தவறு என்று வாதிடுகிறார்களே... எந்த விதத்தில் தவறு என கூறுவதில்லை...அவர்கள் சொல்வதெல்லாம்... கிளி ஜோதிடம், மரத்தடி ஜோதிடர், வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், என்பவைகளைத்தான் குறிப்பிடுகிறார்கள்..//

இந்த இடத்தில் ஜோதிடத்தின் கிளைகளை டுபாக்கூர் என்று நீங்களே ஒத்து கொண்டுள்ளீர்கள்

வால்பையன் said...

//ஜோதிடர்கள் கூறிடும் விதத்தில் எதேனும் தவறு ஏற்படக்கூடுமே ஒழிய ஜோதிடம் தவறே அல்ல//

சரியாக சொல்பவர் யார், அவர் எங்கே இருக்கிறார்

வால்பையன் said...

//மருத்துவர்கள் மருந்தினால் நோய் குணமாக வில்லையெனில் ஒன்று மருந்து தவறாக இருக்கலாம் அல்லது கொடுத்த மருந்துவர் தவறாக இருக்கலாம்... மருத்துவம் தவறாகிவிடுமா??//

நல்ல மருத்துவர்கள் தவறான மருந்து கொடுத்தாலும் நோய் குணமாகாது.
மருந்து என்பது பொருள், பொருளின் நம்பகத்தன்மையை விளக்க முடியும்
வார்த்தைகளின் நம்பகத்தன்மைக்கு என்ன விளக்கம்.
உதாரணம் அளிக்க இவை சரியானவையல்ல

வால்பையன் said...

//யூக வணிகத்தால்தால் தான் தனது விவசாய விளைபொருள்கள் விலையேற்றம் ஏற்படுகிறது என்று கூறினால் அது தவறு என்று வால்பையன் வாதிடுகிறார் எப்படி?//

அது மட்டுமே காரணம் அல்ல என்று மற்ற பிரச்சினைகளையும் கோடிட்டு காட்டியுள்ளேன்

வால்பையன் said...

//மாதங்கள் கழித்து வரும் விளையாத விளைபொருளை இன்றே விலை பேசி அதிகவிலைக்கு விற்றுவிடுகின்றனர் அதனால்தான் விலை ஏறிவிட்டது என்று பேசுகின்றனர்.//

அதற்குரிய பலன்களையும் அவர்கள் அறுவடை செய்கிறார்கள்

வால்பையன் said...

//இதற்கு பேசுபவர்கள் எல்லாம் யூகவணிகத்தை கற்றுக்கொண்டால் தான் அவர்களுக்கு புரியும். ஆனால் எல்லாரும் கற்றுக்கொள்ள முடியுமா? அது முடியாது//

சாவை பற்றி எழுத ஒருவன் ஏற்கனவே செத்திருக்க வேண்டும் என அவசியமில்லை
அடிப்படை அறிவே போதும். ஜோதிடத்தை பொறுத்தவரை அது எனக்கு இருக்கிறது

வால்பையன் said...

//அதற்கு பதிலாக வால்பையன் போன்ற வல்லுனர்களிடம் ஆலோசித்து தெரிந்து கொள்ளலாம்... அதைச்செய்யாமல் யூகவணிகமே தவறு என்று கூறுவதைப் போலத்தான் உள்ளது நீங்கள் கூறிடும் ஜோதிடம் தவறு என்பதும்... //

இந்த ஐஸ் எல்லாம் வேண்டாம். நான் ஒன்றும் பெரிய வல்லுனன் கிடையாது

வால்பையன் said...

//யூகவணிகம் சரி என எப்படி வல்லுனர் வால்பையன் கூறுகிறாரோ அதைப்போலத்தான் ஜோதிடத்தில் வல்லுனராக உள்ள வாத்தியார் ஐயா பதிவிடுகிறார். அதை நானும் உண்மைதமிழன் அண்ணாவும் ஆமோதிக்கிறோம்//

அதில் நாங்கள் சந்தேகம் கேட்கிறோம்

வால்பையன் said...

//அதற்காக நானும் உ.த அவர்களும் ஜோதிட வல்லுனர்கள் என சொல்லவரவில்லை... நாமிருவரும் எமது அனுபவத்தால் அதனை நன்கு உணர்ந்தவர்கள்.//

சில அனுபவங்கள் நேர்மறையாக உங்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கலாம்.
ஒவ்வொரு நாளும் நடக்குமா? காக்க உட்கார பனம்பழம் விழுந்த கதையை சொன்னால் உதாரணம் வேண்டாம் என்று சொல்வீர்கள், (நானே அதான் சொல்லுவேன்)

வால்பையன் said...

//பின்னுட்டத்தில் உள்ள ஆறுதல் வார்த்தைகளை வைத்து கிண்டலடிக்கவேண்டியது இல்லை. உலகில் கஷ்டம் இல்லாதவர்கள் ஒருவரைச் சொல்லுங்கள் பார்போம்? யாருமே கிடையாது அனைவருக்கும் கஷ்டம் உண்டுதான். ஒவ்வோருவருக்குமே அவரவர் கஷ்டம் பெரியதுதான். அதை எப்படி தன்னம்பிக்கையோடு சமாளிக்கிறோம் என்பது அவரவர்களுக்கு மட்டுமே தெரியும்.//.

இந்த பாராவில் நீங்கள் உபயோகித்திருக்கும் தன்னம்பிக்கை என்ற வார்த்தையை தான் நாங்கள் மூச்சு முட்ட கத்தி கொண்டிருக்கிறோம். கஷ்டம் அனைவருக்கும் உண்டு. நம்முடையது தான் பெரிய கஷ்டம் என்று பார்த்தால் அது தன்னம்பிக்கை அற்ற செயல் அதை எதிர்த்து போராடுவதற்கு முதலில் அதை துச்சமாக நினைக்க வேண்டும்

வால்பையன் said...

//ஜோதிடத்தில் ஜோதிட நாத்திகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது. அதற்கு வாத்தியார் ஐயா ஒவ்வொன்றுக்கு பதில் அளித்துள்ளார் மேலும் அளித்துவருகிறார். அதை படித்துபாருங்கள் அல்லது அதை தைரியமாக கேளுங்கள் நான் அவரின் பதிவிலிருந்த்து எடுத்து தர தயாராக் இருக்கிறேன்.//

கண்டிப்பாக படிக்கிறேன், அதே போல் கேட்கிறேன்
அவரை விட்டாலும் உங்களை விடப்போவதில்லை

வால்பையன் said...

//ஆனால் ஜோதிடம் சம்பந்தபட்டதாக இருக்கவேண்டும். பொதுக்கேள்விகளை தவிருங்கள்.//

நாளைக்கு மழை வருமா?
இது பொது கேள்வியா இல்லை ஜோதிடத்தில் பதிலளிக்க முடியுமா

வால்பையன் said...

//வாத்தியார் ஐயா மௌனமே ஆயுதம் என அறிவுருத்தி இருந்தாலும் பதில் அளிக்கவேண்டிய இடத்தில் மௌனமாக இருந்தல் சரியல்ல என்பதால்தான் இப்பதிவு//

தவறு என் பக்கம் கூட இருக்கலாம். புரிய வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது, உங்களின் இடைவிடாத முயற்சிக்கு பாராட்டுகள்

தருமி said...

//நான் அவரின் பதிவிலிருந்த்து எடுத்து தர தயாராக் இருக்கிறேன்.//

நான்கூட சில கேள்விகள் கேட்டிருந்தேனென்று நினைக்கிறேன். என்னை ஒதுக்கி விட்டீர்களே :(

கூடுதுறை said...

வாருங்கள் தருமி அவர்களே உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்..

உங்கள் விலாசத்தினை பதிவு செய்யவில்லை...
உங்களுக்கும் உண்டு...

பதில்தான்

கூடுதுறை said...

//இந்து இஸம் இருக்கும்வரை சோதிட இஸமும் இருக்கும் என்றுதான் தோன்றுக்கிறது....காலச்சக்கரம் உருண்டோடும்போது, அபத்தங்களும் அனர்த்தங்களும், அலையில் அடித்துச்செல்லும் துரும்பைப்போல காணாமல் போய்விடும்...//

நீங்கள் சொல்லும் இரண்டும்தான் சுமார் 2000 முதல் 5000 வரை இருந்துவருவதாக உலகில் சொல்கின்றனர்

//ஆனால் கண்ணதாசனை அறியாத ஒரு தலைமுறை இப்போது வந்துவிடவில்லையா என்ன ?//

கவிஞர்களும் பாடகர்களும் எக்காலத்திலும் அழிவதில்லை

ஆனால் நாத்திகம் பேசி வருபவர்கள் இருந்த இடம் தெரியமால் போய்வருகின்றனர்...

இன்றைய தலைமுறையினரிடம் சென்று அண்ணா யார் என்று கேளுங்கள்? அவர்கள் சொல்வார் என் அண்ணன் பெங்களூரில் வேலை செய்கிறான் என்று அவனது அண்ணாவைக்கூறுவான்... அறிஞர் அண்ணாவை தெரியாது.... பெரியார் தாக்கம் மட்டுமே இன்னும் சிறிது காலத்திற்கு நிற்கும்...

Anonymous said...

//எந்த விதத்தில் தவறு என கூறுவதில்லை...அவர்கள் சொல்வதெல்லாம்... கிளி ஜோதிடம், மரத்தடி ஜோதிடர், வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், என்பவைகளைத்தான் குறிப்பிடுகிறார்கள்...//

அப்படித்தானே கூற முடியும். ஜோதிடத்தை குறை கூற முடியாததால் அவைகளை கூறுகிறார்கள்.

ஒருவரை நேரடியாக தாக்க முடியாமல் அவரின் குடும்பத்தினரை அர்ச்சிக்கும் , அவரது குடும்ப பெண்களை பற்றி எழுதியவர் யார் என்று மறந்து விட்டதா.

Anonymous said...

//ஆனால் கண்ணதாசனை அறியாத ஒரு தலைமுறை இப்போது வந்துவிடவில்லையா என்ன ?//

போலியையும் அவனுக்கு கோஸ்ட் ரைட்டராக இருந்து அடுத்தவரின் குடும்ப பெண்களை திட்டியவர்களை அறியாத ஒரு தலைமுறை இப்போது தமிழ்மணத்தில் இருப்பதால் போலி இல்லை என்று ஆகி விடுமா

கூடுதுறை said...

ஐயோ, அனானியே நீங்கள் கூறுவது யாரை என்று தெரியவில்லை நானும் அவர்களை அறியா தலைமுறைதான்...

இந்த விசயத்தினை இத்தோடு விட்டு விடுங்கள்

கூடுதுறை said...

வால்பையனுக்கு நாளை பதில்

கூடுதுறை said...

//எப்படி என் வகுப்பை கேள்வி கேக்கப்போச்சு" என்று கம்பை எடுத்து சுற்றினாரே தவிர, சரியான விளக்கத்தை எடுத்து வைக்கவில்லை என்பதே என் கருத்து...//

நம் ஊர்பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கல் தூங்குபவர்களை எழுப்பிவிட்டு விடலாம்...

ஆனால் தூங்குபவர்களை போல் நடிப்பவர்களை எக்காலத்திலும் எழுப்ப முடியாது

ILA said...

நம்மூருங்களா நீங்க?

கூடுதுறை said...

//நம்மூருங்களா நீங்க?//

ila நீங்க எந்த ஊர்?

கூடுதுறை said...

//இந்த இடத்தில் ஜோதிடத்தின் கிளைகளை டுபாக்கூர் என்று நீங்களே ஒத்து கொண்டுள்ளீர்கள//

சூதாட்டம், குதிரைரேஸ், லாட்டரி சீட்டு ஆகியவகள் பங்கு வணிகத்தின் கிளைகள் ஆகுமா?

கூடுதுறை said...

//வால்பையன்..சாவை பற்றி எழுத ஒருவன் ஏற்கனவே செத்திருக்க வேண்டும் என அவசியமில்லை
அடிப்படை அறிவே போதும். ஜோதிடத்தை பொறுத்தவரை அது எனக்கு இருக்கிறது//

செத்திருக்க அவசியமில்லை ஆனால் இழவு வீட்டிற்கு போயவது இருக்கவேண்டும் அங்கு கூட செல்லாதவர்களைப் போல் பேசக்கூடாது.

உங்களுக்கு ஜோதிட அடிப்படை தெரியவில்லை என நான் கூறுகிறேன்

கூடுதுறை said...

வால்பையன்... //நாளைக்கு மழை வருமா?
இது பொது கேள்வியா இல்லை ஜோதிடத்தில் பதிலளிக்க முடியுமா//

பொதுக்கேள்விதான்...

இதற்கு பதில் சொல்லுங்கள் நாளை குருட் ஆயில் விலை இறங்குமா? தங்கம் விலை எவ்வளவு ஏறும்?

இதற்கு கம்மாடடிட்டி வணிகத்தில் இருப்பவரால் எவ்வளவு பதில் சொல்ல இயலும்...? அதைப்போலத்தான்

ஜிம்ஷா said...

///வால்பையன்... //நாளைக்கு மழை வருமா?
இது பொது கேள்வியா இல்லை ஜோதிடத்தில் பதிலளிக்க முடியுமா//

பொதுக்கேள்விதான்...///நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ஜாதகம் ஏதுமில்லை. ஜாதகத்தையே நினைத்திருந்தால் துன்பம் என்றுமுண்டு.

கூடுதுறை said...

//நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ஜாதகம் ஏதுமில்லை. ஜாதகத்தையே நினைத்திருந்தால் துன்பம் என்றுமுண்டு.//

அதற்கும் ஜாதக அமைப்பு இருந்தால் நினைத்து அப்படியே நடக்கும்.

அவ் அமைப்பு இல்லையெனில் இலவு காத்தகிளி தான் ஜிம்ஷா.

கயல்விழி அக்காவின் பின்னுட்டத்தை படித்துபாருங்கள்

செந்தழல் ரவி said...

///ila நீங்க எந்த ஊர்?///

அட உங்க ஊருதாங்க அவரு !!!

கூடுதுறை said...

ரவி அண்ணா!

நேற்றைய உங்கள் பதிவிலேயே ஏற்கனவே குழம்பிபோய்த்தான் உள்ளேன்...

//அட உங்க ஊருதாங்க அவரு !!!//

இதுவேறு குழப்புகிறீர்களே? அவர் என்ன பவானி முக்கூடல் சேர்ந்தவரா? இருப்பதுதான் US ஆ?

செந்தழல் ரவி said...

ம்ஹும் இல்லை இல்லை...

அவர் யூ.எஸ்ஸை சேர்ந்தவர்...

இருப்பது பவானி முக்கூடல் மூனாவது சந்து :)))))))))) LOL

கூடுதுறை said...

ஓஹோ! சரி சரி ரவியண்ணா ஒரு முடிவோடுதான் இருக்கிறார் எனத்தெரிகிறது...

PRABHAKARAN said...

SUPER ANNA....

KEEP IT UP

Anonymous said...

RAVI... DOWN DOWN...

ILA said...
This comment has been removed by a blog administrator.

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews