Thursday, July 17, 2008

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் கடும் வீழ்ச்சி

கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் பெட்ரோலிய எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு 10 டாலர் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

யூக வர்த்தகத்தால் உலக அளவில் மிகக் கடுமையான அளவுக்கு பெட்ரோலிய எண்ணெய்யின் விலை உயர்ந்து வந்தது. டிமாண்ட்-சப்ளை இடைவெளியால் உயரும் விலையை உற்பத்தியை அதிகரித்தால் குறைக்க முடியும். ஆனால், அமெரிக்க சந்தையில் நடந்த யூக வியாபாரத்தில் உயர்ந்த விலையை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளால் (OPEC) கூட தடுக்க முடியாமல் போனது.

இப்படியே விலை உயர்ந்தால் விரைவிலேயே வாங்கும் சக்தி குறைந்து போய், டிமாண்டும் குறைந்து, பெட்ரோலிய விலையில் பெரும் சரிவு ஏற்படலாம் என opec நாடுகள் கூறி வந்தன. அந்த அச்சம் இப்போது உண்மையாகிவிட்டது.

ஏற்கனவே தேக்கத்தில் உள்ள அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும் தேக்கம் ஏற்படலாம் என்ற அச்சம் பரவியுள்ளதால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறையலாம் என்ற பயமும் கூடவே பரவி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலையில் 10 டாலர் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவுக்கு விலை சரிந்தது கடந்த 17 ஆண்டுகளில் நடந்திராத அதிசயமாகும்.

ஆனாலும் பின்னர் நடந்த வர்த்தகத்தில் விலையில் ஏற்றம் ஏற்பட்டு சரிவு 4.5 டாலராக குறைந்தது. இதே போல தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலையை உயர்த்திய அதே யூக வர்த்தகம் தான் விலையை சரித்துள்ளது.

ஆனாலும், கடந்த சில ஆண்டுகளில் பல மடங்காகிவிட்ட கச்சா எண்ணெயின் விலையோடு ஒப்பிடுகையில் இப்போது ஏற்பட்டுள்ள சரிவு மிகக் குறைவானதே.

இப்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 138.69 டாலராக உள்ளது. இது 4 ஆண்டுகள் முன் 35 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றுகாலை 134 டாலருக்கு வந்துள்ளது
நமது இந்தியாவில் விலைகுறைப்பு?

7 comments:

Anonymous said...

nenjil paalai vaarthai enkalamaa

தியாகு said...

ஆனாலும் பின்னர் நடந்த வர்த்தகத்தில் விலையில் ஏற்றம் ஏற்பட்டு சரிவு 4.5 டாலராக குறைந்தது. இதே போல தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

innum koranja nalla irukum

Unknown said...

in India???? no chance... we cant expect like this…

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி தியாகு

சரிந்தால் நல்லதே

கூடுதுறை said...

மஸ்தான் அவர்களே! நமது நாட்டில் விலை ஏறிய அளவுக்கு விலை அதிகரிக்கவேயில்லையே... பின் எப்படி ?

Anonymous said...

நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்த அளவிற்கு இருப்பற்குக் காரணம் அதன் மேல் விதிக்கப்படும் அதிகப்படியான் வரியே.

கூடுதுறை said...

நம்நாட்டில் வரி அதிகம்தான். அத்ற்க்காக உலக மார்க்கெட்டில் விலை ஏறினால்கொடுத்துதான் ஆக வேண்டும்

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts