Monday, July 21, 2008

நம்பிக்கை தீர்மானம்-வாக்கெடுப்பு நடப்பது எப்படி?

நம்பிக்கை தீர்மானம்-வாக்கெடுப்பு நடப்பது எப்படி?
    

டெல்லி: லோக்சபாவில் பிரதமர் மன்மோகன் சிங் அரசு கொண்டு வரும் நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மின்னணு முறையில் நடைபெறவுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் இன்று லோக்சபாவில் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்கிறார். இதன் மீது விவாதம் நடந்து நாளை மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

வாக்கெடுப்பு மின்னணு முறையில் நடைபெறும். ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கைக்கு முன்பும் இரு நிறத்திலான பொத்தான்கள் வைக்கப்பட்டிருக்கும். அவை பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க விரும்பினால் பச்சை நிற பொத்தானை அழுத்த வேண்டும். எதிர்ப்பு ெதரிவிப்பதாக இருந்தால் சிவப்பு பொத்தானை அழுத்த வேண்டும்.

ஒருவேளை மறதியாகவோ அல்லது தெரியாமலோ வேறு பொத்தானை அழுத்தி விட்டால், சபாநாயகரிடமிருந்து துண்டுச் சீட்டை வாங்கி, அதிலும் தங்களது வாக்கைப் பதிவு செய்யலாம்.

பொத்தானை அழுத்தி அனைவரும் வாக்களித்த பின்னர் பதிவான வாக்குகள் விவரத்தை டிஜிட்டல் போர்டு காட்டும். அதை வைத்து தீர்மானம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை சபாநாயகர் அறிவிப்பார்.

வாக்கு வித்தியாசம் பெரிதாக இருந்தால் துண்டுச் சீட்டுக்கள் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. மாறாக குறைவாக இருந்தால் துண்டுச் சீட்டுகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.

வாக்கெடுப்பு நடைபெறும் போது  லோக்சபாவுக்குள் எம்.பிக்கள் மட்டுமே இருப்பார்கள். பார்வையாளர்கள் யாரும் லோக்சபாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாடாளுமன்ற லாபியிலும் கூட யாரும் இருக்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks..

oneindia

No comments:

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts