Thursday, August 28, 2008

நடுக்கடலில் 6 கப்பல்கள் கடத்தல்- 10 இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கதி?

ஏமன்: அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த 6 சரக்குக் கப்பல்களை சோமாலியாவைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.

இதில் ஒரு கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 10 ஊழியர்கள் உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்தக் கடத்தல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏமனுக்கும் சோமாலியாவுக்கும் இடையே அரபிக் கடலில் உள்ள ஏமன் வளைகுடாவில் இந்தக் கடத்தல்கள் நடந்தன. இந்தக் கப்பல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களும் மாலுமிகளும் உள்ளனர்.

முதலில் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு சரக்குக் கப்பலைக் கடத்திய கொள்ளையர்கள், அடுத்தடுத்து பனாமா, ஜப்பான், மலேசியா, ஜெர்மன் உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த கப்பல்களைக் கடத்தினர்.

இந்தியப் பெருங்கடலையும் மத்தியத் தரைக் கடலையும் ( Mediterranean sea) இணைக்கும் இந்த வளைகுடா பகுதி வழியாகத் தான் அரேபிய நாடுகள்-ஐரோப்பா இடையே கப்பல்கள் இயங்குகி்ன்றன.

இதில் பெரும்பாலானவை கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல்களே.

சேமாலியாவில் நடந்து வரும் இனப் போரால் அந்தப் பகுதியே பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. இந் நிலையில் தான் இந்தக் கடத்தல்கள் நடந்துள்ளன.

கடத்தப்பட்டுள்ள கப்பல்களில் ஒ ன்றான எம்.சி.விக்டோரியாவில் இந்தியத் தொழிலாளர்கள் 10 பேர் பணியாற்றி வருகின்றனர்.

ராக்கெட் லாஞ்சர்களுடன் அதிவேகப் படகுகளில் வந்து கப்பல்களை கொள்ளையர்கள் கடத்துவதும், பின்னர் பெரும் அளவில் பணம்-பொருட்களை வாங்கிக் கொண்டு விடுவிப்பதும் இந்தப் பகுதியில் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு பயணிகள் கப்பல்களும் தப்புவதில்லை.

ஆனால், ஒரே நேரத்தில் 6 கப்பல்களை இவர்கள் கடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் ஒரு ஜப்பானிய கப்பலை கடத்தும் முயற்சி வெல்லவில்லை. ராக்கெட் லாஞ்சர்களால் தாக்கப்பட்டாலும் கூட அந்தக் கப்பல் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிவிட்டது.

கடத்தப்பட்டுள்ள மலேசிய கப்பல் பாமாயில் ஏற்றிச் சென்றதாகும். ஈரான் கப்பல் கச்சா எண்ணெயும், ஜப்பானிய கப்பல் ரசாயனப் பொருட்களையும் ஜெர்மன் கப்பல் உணவு உள்ளிட்ட சரக்குகளுடனும் சென்று கொண்டிருந்தன. இவை தவிர வேறு இரு கப்பல்களும் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றவை. இந்தக் கப்பல்களில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகளும், ஊழியர்களும் உள்ளனர்.

இதற்கிடையே மலேசிய கப்பலில் கொள்ளையர்கள் ஏறி தாக்கியபோது அதிலிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஊழியர் கொல்லப்பட்டுள்ளார் என மலேசியா கூறியுள்ளார்.

சோமாலியாவில் இப்போது அரசாங்கம் என்று ஏதும் இல்லை. கடற்படையும் இல்லை. இதனால் கடல் கொள்ளையர்களை ஒடுக்க மற்ற நாட்டு கப்பல் படைகள் தாக்குதல் நடத்த, கடந்த மாதம் தான் ஐ.நா. சபை அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி. தட்ஸ்தமிழ்

Saturday, August 23, 2008

எச்சரிக்கை!!! பாடகிகள் ஜாக்கிரதை.... புதுப்பாடகி வருகிறார்.......
பாடகிகள் ஜாக்கிரதை.... புதுப்பாடகி வருகிறார்.......பாட்டு பாடப் போகிறார் திரிஷா....

திரிஷா சினிமாப்பாட்டுகளை பாடப்போகிறார்.. அதுபற்றி வந்த செய்தி கீழே வழக்கம்போல் அடைப்புக்குறிக்குள் இருப்பது மட்டும் நான் எழுதியது

குருவி நொண்டியடித்த பிறகு, சொல்லிக் கொள்கிற மாதிரி வேறு படம் எதுவும் இல்லாததால் ரொம்ப அப்செட்டிலிருக்கிறார் த்ரிஷா.(குருவி எங்கே நொண்டியடித்தது?? துப்பாக்கியால் சுடப்பட்ட குருவி போல் சுருண்டு விழுந்துவிட்டதே?)

முன்பு நடிக்க நேரமில்லாத அளவுக்கு தமிழிலும் தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தன. இவரோ, ஒரு கோடி இரண்டு கோடி என சம்பளம் கேட்டு மிரள வைத்துக் கொண்டிருந்தார். (இப்போ தெருக்கோடிதான் கிடைக்கும் முடிந்தால் அங்கே நட்டநடு ராத்திரியில் டான்ஸ் ஆடலாம்)

குருவிக்குப் பின்னர் நிலைமை அப்படியே மாறிப்போனது. இப்போதைக்கு அபியும் நானும், சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகிய இரு படங்கள்தான் தமிழில். (இந்தப் படங்களும் பல வருடங்களாக எடுக்கப்பட்டுவரும் படங்கள் எப்போது ரிலிஸ் எனக்கடவுளுக்கே தெரியாது?

தெலுங்கில் இரண்டே படங்கள். ஒன்றில் தொலைக்காட்சிப் பாடகியாக வருகிறாராம். இந்த வேடத்தில் அச்சு அசலாகத் தோன்ற வேண்டுமே என்பதற்காக, சரியான உடல் மொழியைக் (தப்பா எடுத்துக்காதீங்க... அதான் பாடி லாங்குவேஜ்!) கற்றுக் கொண்டாராம் த்ரிஷா. (இதுக்கு லாங்குவேஜ் எதுக்கு லூசுப்பெண்ணாக ஆக்ட் கொடுக்க பயிற்சி வேண்டுமா? அப்ப இத்தனை நாள் நடித்ததேல்லாம் என்னவாம்? )

உண்மையில் த்ரிஷாவுக்கு பாடுவதில்தான் அலாதி ஆர்வமாம்.(என்னக் கொடுமை சார் இது) 'நடிப்பை விட பாடுவதில்தான் ஆரம்பத்தில் எனக்கு அதிக ஆர்வமிருந்தது. ஆனால் வாய்ப்பு அமையவில்லை. (அதற்கு மாடலிங் செல்லாமல் இருந்து மார்கழி மாதம் சபாவில் சான்ஸ் வாங்கி பாடி இருக்கவேண்டும்)

தெலுங்கில் 'கிங்' என்ற படத்தில் தொலைக் காட்சிப் பாடகியாக நடித்து வருகிறேன். இதில் அந்த வேடத்தில் சிறப்பாகத் தோன்ற முன் பயிற்சி எடுத்துக் கொண்டேன்..' என்கிறர் த்ரிஷா.(இது என்ன தொலைக்காட்சி பாடகி? தொலைக்காட்சியில் பாடகிகளுக்கு என்ன வேலை? வீடியோ ஜாக்கி என்றாலவது ஒரு அர்த்தம் உண்டு)

விரைவிலேயே ஏ.ஆர். ரஹ்மான இசையில் பாடப்போவதாகவும் கூறியுள்ளார். (பாவம் ரஹ்மான்)

'ரஹ்மான் இசைக்கு தீவிர விசிறி நான். ஒருமுறையாவது அவரது இசையில் பாடிவிடத் துடித்துக் கொண்டிருந்தேன், இப்போது அப்படியொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. விரைவில் இதுபற்றி அறிவிப்பேன், என்கிறார் த்ரிஷா.(விரைவில் வரப்போகிறார் கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் எதிரொலி. எதிரொலிக்கு அர்த்தம் புரிகிறதா?)

சொந்தக்குரலில் பாடுவது இருக்கட்டும், சொந்தமா எப்போ டப்பிங் பேசப் போறீங்க?

(இதுக்கு தனியா துட்டு கொடுக்கமாட்டாங்களே...அதனால்தான்)

Tuesday, August 19, 2008

ராமனுக்கு நிகர் யாருமில்லை

இராமயண நாயகர் ராமரைப்பற்றி நெத்தியடியான கருத்துக்களை திரு பழ. கருப்பையா அளித்துள்ளார். பார்க்கலாம் இதற்கு நாத்திகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று

உலக இலக்கியங்களில் ராமனுக்கு நிகரான கதாபாத்திரம் வேறு ஏதும் கிடையாது என்றார் எழுத்தாளர் பழ. கருப்பையா.

இன்றைய பிரச்னைகளுக்கு தீர்வு காட்டிடும் நடப்பியல் இலக்கியம் கம்பராமாயணம்- என்ற தலைப்பில் எழுத்தாளர் பழ. கருப்பையா வேலூரில் பேசினார். அவர் கூறியதாவது:

மகாபாரதம், கம்பராமாயணம் இரு காப்பியங்களை மிஞ்சிய இலக்கியம் உலகில் கிடையாது. அதிலும் ராமனை மி்ஞ்சும் பாத்திரம் எந்த இலக்கியத்திலுமில்லை.

ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருக்கும் குடும்ப அமைப்பு மாறி, ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பு உருவான காலகட்டத்தில் ராமாயணம் உருவாகிறது.

பெண்ணுக்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கற்பு நெறி, ஆணுக்கும் இருக்க வேண்டும் என்பதை ராமன் மூலம் காட்டுகிறது கம்ப ராமாயணம். அப்படிப்பட்ட சூழலில் கற்புடை மாதரைக் கவர்ந்து செல்பவருக்கு என்ன கதி நேர்ந்திடும் என்ற எச்சரிக்கையையும் எடுத்துரைக்கிறது கம்பராமாயணம்.

இந்தியக் காப்பியங்கள் நமக்குச் சொல்வது யாதெனில், அறத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள் என்பதுதான். மக்களுக்கு அறத்தை போதித்து, நெறியான வாழ்க்கை வாழச்செய்வதுதான் சிறந்த அரசியல்முறையாக இருக்க முடியும்.

ஒரு ஊரில் பல ஆயிரம் பேர் இருந்தாலும் காவலர்கள் நூறுபேர்தான் இருப்பார்கள். ஆனால் சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டப்படும். அதற்குக் காரணம் 99% மக்கள் சட்ட திட்டங்களுக்கும் தர்மத்திற்கும் பயந்து நடப்பவர்கள். அதனால்தான் தர்மத்தை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்கிறேன். அப்போது சட்டம் தானாக பாதுகாக்கப்படும். அதைத்தான் ராமாயணம் போன்ற கதைகள் மூலம் நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.

மன்னராட்சி என்ற போதிலும், கண்ணகி அரசவைக்குள் நுழைந்து அரசனை கேள்வி கேட்க முடிகிறது. ஆனால், மக்களாட்சியில் எந்தவொரு அமைச்சரையும் மக்கள் கேள்வி கேட்க முடியாத நிலைதானே உள்ளது. அமைச்சர்கள் அதிகாரத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்துவர்களாக, அறம் பிழைத்தோராக இருக்கின்றனர்.

ராமனை காட்டுக்குப் போகச்சொன்ன தந்தையையும் காரணமான கைகேயியை மற்றும் பரதனையும் அழிப்பேன் என்று கோபம் கொள்ளும் இலட்சுமணனை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை.... இது விதியின் பிழை... என்று ராமன் அமைதிப்படுத்துவதும், 

ஏர்முனையிலிருந்து விடுபட்ட காளைபோல, பதவியை விருப்புடன் துறக்கும் பண்புநெறியும் அறவாழ்வுக்கு எடுத்துக்காட்டுகள். நம்மை மேல்நிலைக்கு தூக்கும் மாபெரும் இலக்கியம் கம்ப ராமாயணம். அறத்தை போதிக்கும் நூல் கம்ப ராமாயணம்' என்றார் பழ. கருப்பையா.

நன்றி; தட்ஸ்தமிழ்

Monday, August 18, 2008

விற்பனை தொலைபேசி அழைப்புக்கள் தொந்தரவா? இல்லையா?

விற்பனை தொலைபேசி அழைப்புக்கள் தொந்தரவா? இல்லையா?

பொதுவாக தற்போது இது போன்ற மார்கெட்டிங் தொலைபேசி அழைப்புக்கள் நமக்கு வரக்கூடாது என்றால் அதை தவிர்க்க தொலைப்பேசிக் கம்பெனிகளில் தெரிவித்து அதை வராமல் செய்துவிடலாம்.

ஆனால் அதை விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே செய்து இருப்பார்கள். ஏதோ முக்கியமான வேலையாக இருப்போம் அப்போது அழைப்புவரும் அதில் சென்னை எண்ணில் இருந்து யாரோ கூப்பிடுவார்கள். எடுத்து ஹலோ என்றால் ரேடியோ மிர்ச்சி RJ (அவங்க பேரேன்ன சுசியா?) தனது கட்டைக்குரலில் குசேலன் பாட்டு டவுன்லோடு செய்யவேண்டுமா அல்லது ரிங்டோனாக வைக்கவேண்டுமா

எனக்கேட்க ஆரம்பித்துவிடுவார்... அடச்சே இருக்கும் தண்டனை போதாதா இது வேறயா என்றுக்கேட்டுவிட்டு கடுப்போடு கட் செய்வேன்.

சில சமயம் பம்பாய் மற்றும் டெல்லி எண்ணில் இருந்து கூட இப்படி போன் கால் வரும்.

அப்போது மார்க்கெட்டிங் அழைப்புக்கள் ஆரம்பம் ஆகாமல் இருந்த காலம்... ஒரு சமயம் எனக்கு ஒரு வடநாட்டு மொபைல் தொலைபேசி எண்ணிலுருந்து அழைப்பு வந்தது.

நானும் சாதாரணமாக எடுத்து ஹலோ கூறினேன். அதற்கு பதில் வந்த குரலைக்கேட்டவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

காரணம் நல்ல பழக்கமான குரல் ஹிந்தியில் மைம் அடல் பிஹாரி வாஜ்பாயி பாத் கராஹூங் (நான் அடல் பிஹாரி வாஜ்பாயி பேசுகிறேன்) என்று கூறி சற்று இடைவேளி விட்டது.

நான் இங்கே சேரில் இருந்து குதித்து இறங்கி மரியாதைக்காக சேரின் மீதே ஏறி நின்று கொண்டு மிகவும் தாழ்ந்த குரலில் பாத் கிஜியே ஜி ( பேசுங்கள் ஐயா) என்றேன்.

அடுத்த எனது முகத்தில் வழிந்த அசடை கழுவ இரண்டு பக்கேட் தண்ணீர் செலவானது. அப்போதைய பிரதமர் வாஜ்பேயி குரலை டேப் செய்து போட்டு ஓட்டுக் கேட்டுக்கொண்டிருந்தனர் பாஜக கட்சியினர்.

மேலும் நானும் கணினியில் கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை இணையப்பக்கங்களில் இறைந்து கிடக்கும் போரம் (Forum) மற்றும் sign in கேட்கும் அனைத்திலும் சென்று யூசர் நேம் பாஸ்வேர்டு மற்றும் ஈ மெயில் முகவரி மொபைல் எண் கொடுத்துவிடுவேன்.

இதனால் சற்று ஸ்பேம் மெயில் வரும் அதனால் பெரிய தொந்தரவு எதுவுமில்லையென்றாலும் மொபைல் எண் கொடுப்பதால் சில இந்திய வியாபார நிறுவனங்களின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்டில் இருந்து உடனே மொபைலில் கூப்பிட்டுவிடுவார்கள்.

அவர்கள் பேசும் பீட்டர் ஆங்கலத்திற்கு yes yes என்று கூறிவிட்டு please send me all details in e-mail என்று கூறி விட்டு ஈமெயில் முகவரி கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகி விடுவேன்.

ஏன் சிலசமயம் வெளிநாட்டு அழைப்புக்கள் கூட வந்துள்ளன... அதற்கும் மேற்க்கண்ட வழியை உபயோகித்துவிடுவேன்.

சரி இதேல்லாம் இப்போ எதற்கு என்று கேட்கிறீர்களா... இப்போது விசயத்திற்கு வருகிறேன்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் திடிரேன மின்சாரம் தடைபட்டதால் தமிழ்மண  போதை சற்று தெளிந்து படுக்கையில் மல்லாக்க படுத்துக்கொண்டு (வால்பையன் பாணியில்) யோசித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது வழக்கம் போல் ஒரு மொபைல் போனில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

எடுத்தவுடன் நீங்கள் எங்களுடைய டேஸ் டேஸ் வெப்சைட்டில் பதிவு செய்துள்ளீர்கள் ஆகையால் உங்களுக்கு எங்களிடம் வாங்கும் பொருள்களுக்கு 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது என்று ஆங்கிலத்தில் பீட்டர் விட்டார் ஒருவர்.

எனக்கு ஒரு பழக்கம் ஆங்கிலத்தில் யாராவது தமிழ்நாட்டுக்காரர் பீட்டர் விட்டால் அவர்களிடம் நான் ஹிந்தியில் பேசி அவர்களை திக்குமுக்காட வைப்பது வழக்கம். (ஹிந்தியில் நான் ஒன்றும் புலமை பெற்றவனல்ல இருந்தாலும் தமிழ்நாட்டு மார்வாடிகள் பேசும் தமிழுக்கு நான் பேசும் ஹிந்தி எவ்வளவோ மேல்)

அதன்படி நான் இந்தியில் நீங்கள் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள்? மற்றும் என்ன பொருள்கள் மார்க்கேட் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரும் நான் சென்னையில் இருந்து பேசுவதாகவும் தங்களது சைட்டில் இருக்கும் அனைத்துப்பொருட்களும் இருப்பதாகவும் என்று ஹிந்தியில் பதில் கூறினார்.

ஆஹா வந்து விட்டார் வழிக்கு என்று நினைத்துக்கொண்டு எனது வழக்கப்படி உங்களது அனைத்து விவரங்களையிம் ஈ மெயிலில் அனுப்புங்கள் நான் பார்க்கிறேன் என்றுக்கூறா உடனே மெயில் முகவரி கொடுங்கள் எனக்கேட்க நானும் எனது முகவரியை a for apple போல s for sun c for calcutta என்றுக்கூற அங்கும் மிகவும் அக்கறையாக ஒவ்வொன்றாக கேட்டுக்குறித்துகொண்டார்.

அடுத்து வணக்கம் சொல்லி போனை ஆப் செய்ய நினைக்கும் போது வந்து விழுந்தது ஒரு கேள்வி... நீங்கள் சைனா போன் வாங்க விரும்பிகிறீர்களா? என்று நமக்குத்தான் சைனாப்போன் ஆசைக்கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தே...

ஆனால் எனது இந்தப்பதிவில் வந்த பின்னுட்டங்களின்படி எனது காது எரிந்துவிடும் பயம் ஏற்பட்டு இருந்தாலும்... எதற்கும் கூறி வைப்போமே என்று ஆமாம் என்றேன்.

அப்போதுதான் எனக்குள் ஒரு பல்ப் எரிந்தது... இந்த சைனாப்போன் விசயம் எனது பதிவில் வெளியிட்டதைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதே என்று...

உடனே யார் பேசுவது பரிசலாஆஆஆஆஆஆஆ ????  எனக்கேட்டேன். எதிர்ப்பக்கம் உடன் ஒர் வெடிச்சிரிப்ப்ப்ப்பு கிளம்பியது.... ஆகா கிளம்ப்ப்ட்டாங்க்கய்யாஅ கிளம்பிட்டங்க என நினைத்துக்கொண்டேன்.

ஆமாம் நான் ஏற்கனேவே கூறியிருந்தும் எப்படி இப்படி ஏமாந்தீர்கள் எனக்கேட்டார்.
அதற்குத்தான் மேலே கூறியவற்றைக்கூறி இது போல அழைப்பு வருவது எனக்கு வழக்கம்தான் என்று கூறினேன். பிறகு பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு சிறிது கடலைப்போட்டுவிட்டு போனை வைத்தேன்.

இந்தப்பதிவே அடுத்து பரிசல் இந்த  பேச்சினை உருபெருக்கம் செய்து தனது பதிவில் இடுவார் என்பதால் நான் முந்திக்கொண்டேன்

இது ஒரு மீள்பதிவே நேற்று தமிழ்மணம் ஹேங்க் ஆகிவிட்டதால் அனைவரையும் சென்று அடைந்து இருக்காது என்பதால் மறுபதிப்பிடப்படுகிறது

Sunday, August 17, 2008

இந்தப்பதிவே அடுத்து பரிசல் இந்த  பேச்சினை உருபெருக்கம் செய்து தனது பதிவில் இடுவார் என்பதால் நான் முந்திக்கொண்டேன்Friday, August 15, 2008

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன.

அவற்றில் இரண்டு சிம்கார்டுகள் (தமிழில் என்ன வார்த்தை?) போடும் வசதி, மேற்கொண்டு இலவச பேட்டரி ஒன்று, ஆடியோ, வீடியோ, கேமெரா, SD கார்டு மற்றும் பிராண்டடு போன்களில் உள்ள அனைத்துவசதிகளும் உள்ளது

மேலும் புளூடூத்திலிருந்து இணைய வசதி வீடியோ சாட் வரை மேலும் டீவி பார்க்கும் வசதி உள்பட உள்ளது என்றும் விரைவில் பாத்ரூம் மற்றும் டாய்லேட் வசதிகள் கூட சைனா போன்களில் வந்துவிடும் என்கிறார்கள்

ஆனால் ஒரு சாரார் மேற்படி சைனா போன்கள் ஒரு தடவை கீழே போட்டால் சுக்குநூறாக உடைந்துவிடும் என்கிறார்கள். பேட்டரி சீக்கிரம் போய்விடும் அதற்குத்தான் இன்னொரு பேட்டரியும் தருகிறார்கள் எனக்கூறுகின்றனர்.

மேலும் ஒரு சிலர் அந்த போன்களில் கதிரியக்கம் அதிகமாக உள்ளது. அதனால் காதில் உள்ள ஜவ்வு அறையில் உள்ள காது கேட்பதற்கு மிகவும் தேவையான மெல்லிய உணர்வு இழைகளை எரித்துவிடும் என்றும் அதனால் காது கேட்கும் திறன் முற்றிலும் இழந்து விடுவார்கள் என்றும் அதற்கு மருத்துவத்தில் சிகைச்சையே இல்லை என்றும் கூறுகின்றனர்.

இது எந்த அளவு உண்மை என்றும் தெரியவில்லை...
ஒருவேளை சைனாக்காரர்கள் இந்தியா நாடு வல்லரசு ஆக முடியாமல் தடுக்க தனது போன்களை குறைந்தவிலையில் விற்று இந்தியர்களை செவிடர்களாக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஆனால் இதற்காக விற்பனை ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. விற்பனை அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. 

அனைத்துவசதி கொண்ட கம்பெனீ போன் ஒன்று வாங்கும் விலையில் இப்போன்களை இரண்டுக்கும் மேற்பட்ட போன்களை வாங்கலாம் எனக் கூறுகின்றனர். 

இந்த விசயமெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்கிறிர்களா? எனக்கும் ஒரு சைனா போன் வாங்கும் ஆசை வந்து கொழுந்துவிட்டு எரிகிறது.... அதை வாங்கி எனது காதும் கருகிவிடுமோ என அச்சம் ஏற்பட்டுவிட்டது....
ஆகவே மேற்படி சைனா போன்களை வாங்கி உபயோகித்து, பயனடைந்து, அடுத்தவர்களை வயிரு எரிய வைத்துகொண்டு,அல்லது அதனால் அவஸ்தைப்பட்டு கொண்டு இருப்பவர்கள் தங்களது அனுபவங்களை பின்னுட்டமாகவோ அல்லது பதிவாகவோ கூறினால் அதை வைத்து என்னைப்போல் பலரும் பயனும் அடைவார்கள்.
உள்ளதை கூறுங்கள்... யான் பெற்ற அவஸ்தை இவ்வையகம் பெறட்டும் என எண்ணம் வேண்டாம்

Wednesday, August 13, 2008

எதையும் pdf பைலாக உருவாக்க இலவச மென்பொருள்

எதையும் pdf பைல் உருவாக்க இலவச மென்பொருள்

எந்தவொரு பைலயும் pdf பைல் உருவாக்க PDF reDirect என்ற சாப்ட்வேர் உருவாக்கித்தருகிறது.

மேலும் உருவாக்கிய pdf பைல்களை அதிலிருந்தே FTP போல்டருக்கு நேரடியாகவும் மேலும் இணையத்தில் அப்லோடு செய்யவும் உதவுகிறது.

இதில் குறிப்பிடததக்க விசயம் என்னவேன்றால் எந்தவோரு வாட்டர்மார்க்கும் வருவதில்லை. கோயிலுக்கு ட்யுப்லைட்டை இலவசமாக கொடுத்துவிட்டு அதில் வெளிச்சம் வெளியே வராத அளவுக்கு பெயரை எழுதுக்கொள்வதில்லை.

மேலும் இது முழுக்க இலவசம். வணிகபயன்பாட்டுக்கு சிறுதொகையை விலையாக கொடுக்கவேண்டியுருக்கும்.

இதை டவுன்லோடு செய்வதற்கான லின்க் இங்கே கொடுத்துள்ளேன்.

Saturday, August 9, 2008

கர்நாடகத்தால் இதை மட்டும் தடுக்க முடியாது

கர்நாடகம் மற்றும் அதன் அரசியல் வாதிகள் எதை வேண்டுமானல் தடுக்கலாம். அனால்   இதை மட்டும் தடுக்க முடியாது
கேரளாவின் வயநாடு பகுதியில் கன மழை பெய்து வருவதால் கர்நாடகத்தின் கபிணி அணை நிரம்பி விட்டது. இதையடுத்து அணைக்கு வரும் 56 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்படுகிறது.

தென் மேற்கு பருவ மழை சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேகம் பிடித்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரளாவில் பருவ மழை கடந்த 10 நாட்ளாக விளாசிக் கொண்டிருக்கிறது.

கேரளாவின் வயநாடு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் கபிணி அணை நிரம்பி விட்டது. அணைக்கு தற்போது விநாடிக்கு 56 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

இந்த உபரி நீர் அப்படியே தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்படுகிறது. இந்த நீர் இன்னும் 2 நாட்களுக்குள் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் எனத் தெரிகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 62.24 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 17 ஆயிரத்து 968 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

கர்நாடகத்தின் கே.ஆர்.எஸ். அணையும், ஹேமாவதி அணையும் வேகமாக நிரம்பி வருவதால்அங்கிருந்தும் மேட்டூருக்கு நிறைய நீர் திறந்து விடப்படும். எனவே விரைவில் மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, August 7, 2008

அடுத்த ஒரு வாரத்திற்கு ஆண்கள் ஜாக்கிரதை.....

அடுத்த ஒரு வாரத்திற்கு ஆண்கள் ஜாக்கிரதை.....அதுவும் குறிப்பாக வடநாட்டில் வாழும் இளைஞர்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

காரணமா? கீழே பாருங்கள்

|||||
||
|
|

இதுதான் காரணம் அடுத்தவாரம் ரக்சா பந்தன் வரப்போகிறது. பெண்கள் ராக்கி கட்டி சகோதரன் ஆக்கிக்கொள்வார்கள் ஜாக்கிரதை...

லக்கிலுக்கிற்கு போட்டியாக எனது கதை....

லக்கிலுக்கிற்கு போட்டியாக கதை....

பதிவுலக சிங்கம், எழுத்துலக சக்கரவர்த்தி, தமிழகத்தின் தளபதிக்கே தளபதி, பல கோடி வாசகர்களின் சிம்ம சொப்பனம், நகைசுவை சாம்ராட் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் லக்கிலுக் (நன்றி: வால்பையன்) அவர்கள் இந்தப்பதிவில் ஒரு புனைவுக்கதை எழுதியுள்ளார். அதைப்பார்த்தவுடன் எனக்கும் கதை எழுதும் ஆசை வந்துவிட்டது...

அது இப்போது உடனே வந்த ஆசையல்ல.. நான் பள்ளியில் படிக்கும்போதே வந்த ஆசை. அப்போது ரப் நோட்டில் மர்மக்கதையேல்லாம் எழுதியுள்ளேன்...

அவன் அந்த மர்மகுகையில் இருந்து தனது பாஸுக்கு டெலிபோன் செய்தான்! (இது சக மாணவன் கேட்டகேள்வி ஏண்டா அதுவே மர்மகுகை அங்கே எப்படி ஒயர் இழுத்து டெலிபோன் கனைக்சன் கொடுத்தார்கள்?)

இப்படியேல்லாம் எழுதி 4 அல்லது 5 கதைகள் எழுதிவிட்டேன்... உடனே எனக்கு ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், சுஜாதா ஆகிவிட்டதாக ஒரு கர்வமே வந்துவிட்டது.

இதில் உடன் பயிலும் மாணவர்கள் வேறு புதியதாக வரும் ஆசிரியர்களிடம் எல்லாம் இவன் நன்றாக கதை எழுதவான் சார் என்று கூறி என்னை உசுப்பேற்றி வேறு விடுவார்கள்.

அந்த நோட்புக்கை அனைத்து மாணவர்களூம் போட்டி போட்டு வாங்கிபடித்து விட்டு (மனதுக்குள் நன்றாக திட்டிவிட்டு) நன்றாக இருக்கு இன்னும் நிறைய எழுது கூறினார்கள்.

அடுத்து எனது கதையை வகுப்பினர் மட்டும் படித்தால் போதுமா? பத்திரிக்கைக்கு
அனுப்பவேண்டும் அனைவரும் படிக்கவேண்டும் என விரும்பினேன். (ரொம்பத்தான் ஆசை)

ஆனால் எப்படி அனுப்பவது என்ற விபரம் எதுவும் தெரியாது (நோட்புக்கையே அனுப்புவதா?) எனது சக மாணவன் ஒருவன் எனக்கு எல்லாம் அந்த விவரம்தெரியும் என்னிடம் கொடு நான் அனுப்பிவைக்கிறேன் என்று கூறினான். ஆனால் தனது பெயரில்தான் அனுப்புவேன் பரிசு சன்மானம் எதாவது வந்தால் உனக்கு கொடுத்துவிடுகிறேன் என்றான்.

ஆகா இது சரியான ஆப்பாக உள்ளதே என்று உஷாரனேன். முடியாது நானே அனுப்பிக்கொள்கிறேன் என்று திருப்பிவாங்கிக்கொண்டேன். அப்போது எனக்கு பரிச்சியமான (குமுதம் கூட படிப்பேன் ஆனால் அதிகம் ஆசைப்படக்கூடாது என்று)சிறுவர் புத்தகமான ரத்னமாலா, அம்புலிமாமா, மற்றும் பெயர் மறந்து போன மூன்று பத்திரிக்கைகளுக்கு போஸ்டுகார்டில் கதை எழுதியுள்ளேன் அதை எப்படி அனுப்புவது நோட்புக்கோடு அப்படியே அனுப்புவதா? இல்லை பேப்பரில் அனுப்புவதா? இல்லை தொடர்கதையாக அனுப்புவதா எனக்கேட்டு எழுதிப்போட்டேன். அதுவும் எனது பள்ளிமுகவரி கொடுத்து (வீட்டுமுகவரி கொடுத்தால் முதுகில் டின் கட்டி வாசித்திவுடுவார்கள் எனபயம்)

அடுத்து கிளைமாக்ஸ்

அப்போது கணிதபாடம் கண்டிப்பான வாத்தியார் பாடம் நடத்திகொண்டிருந்தார். அப்போது புயல் போல் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்தார். நான் எதோ எழுதுக்கொண்டிருந்தேன் அதனால் கவனிக்கவில்லை அனைத்து மாணவர்களும் எழுந்து நின்ற அரவம் கேட்டு தலை நிமிர்ந்தேன். அங்கே தலைமையாசிரியர் கண்ணில் நெருப்பலையோடு அங்கே நின்று கொண்டிருந்தார்.

உடன் அவர் தனது சிம்மக்குரலில் இங்கே (எனது பெயரைக்குறிப்பிட்டு) யார் எனக் கர்ஜித்தார். மற்ற மாணவர்கள் அமர்ந்துவிட நான் மட்டும் பலியாடு போல் நின்று கொண்டிருந்தேன். நீதானா அது என கன்பர்ம் செய்து கொண்டு காலாண்டு தேர்வின்மதிப்பேண்கள் என்னவேன்று கேட்டார்.(நான் என்னத்தெ கிழிப்பேன்) மொத்தமே இரண்டில் தான் பாஸ்மார்க் (அதுவும் வரலாறு புவியியல் மற்றும் தமிழ் அதில்தானே கதைவிட்டு எழுத முடியும்)

இத்தனை பாடத்தில் பெயிலாகிவிட்டு உனக்கு கதை எழுதுவதேல்லாம் தேவையா? என்று வாய்க்கு வந்ததயேல்லாம் கூறி திட்டத்தொடங்கினார். யார் வைத்த வத்தி என்று புரியாமல் நின்று கொண்டிருந்த எனக்கு என்ன செய்வதேன்றே புரியவில்லை. இனி இந்த மாதிரி வேலையெல்லாம் வைத்துக்கொண்டால் TC கொடுத்துவிடுவேன் மிரட்டல் விடுத்து இந்தா இதை வைத்துக்கொள் என்று ஒருகடிதத்தை எடுத்துக்கொடுத்தார்.

ஆகா கதை எழுத எனக்கு வாய்ப்பு வந்துவிட்டது பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து கடிதம் வந்து விட்டது என்று எகிறிக்குதித்து சென்று வாங்கினேன்.

த.ஆசிரியரே அனைத்து அர்ச்சனைகளையும் செய்துவிட்டதால் கணித ஆசிரியரின் நீண்டகம்பில் இருந்து தப்பினேன் என நினைக்கிறேன். இல்லை அவர் நல்லமூடில் இருந்தாரோ என்னோவோ அன்று அடி விழவில்லை. அப்படியே அவர் அடிக்க கம்பினை ஓங்கினோலோ எனது ஆயுதத்தை எடுத்திவிட்டிவிடுவேன். அதனால் ஒன்றிரண்டி அடியோடு நின்றுவிடும (எனது ஆயுதம் = வேறன்ன ஓவேன அழுகைதான்!)

அவர் தொடர்ந்து பாடம் நடத்த எனது நோட்புக்கில் மறைத்து வைத்துக் கொண்டு அந்தக்கடிதத்தை எடுத்து படித்தேன்...

ஓ..... அந்த சோகத்தை எப்படி சொல்வது அந்த தற்போது பெயர் மறந்து போன பத்திர்க்கைக்கு அனுப்பிய போஸ்ட்கார்டு முகவரி தவறு என திரும்பிவந்திருந்தது.

மற்ற இரண்டு பத்திரிக்கையிலிருந்து பதிலெதுவும் வரவேயில்லை. இப்படியாக எனது கதையெழுதும் படலம் முடிவுக்குவந்தது. ஒரு சுஜாதா,ராஜேஸ்குமார் மற்றும் ராஜேந்திரக்குமார் உருவாக விடமால் அந்த தலைமயாசிரியர் தடுத்துவிட்டார்.

ஆனால் இப்போது பதிவில் கதை எழுதலாமா எனத்தெரியாமல் இருந்தேன். தற்போது லக்கிலுக் எனக்குள் இருக்கும் கதைஎழுதும் சிங்கத்தை தட்டி அல்லது எட்டி உதைத்து எழுப்பிவிட்டு விட்டார்.

இனி எனது பதிவில் கதையெழுதப்போகிறேன். அதை நீங்கள் படித்தாகவேண்டியது என்பது உங்கள் தலைவிதி. என்ன இந்தப்பதிவைக்கூட கயல்விழி அக்கா இது என்ன நகைச்சுவை பதிவா எனக்கேட்காமல் இருந்தால் சரி

டிஸ்கி: இது கதையேல்ல நிஜமே... இனி எழுதப்போவதுதான் கதைகள் அதுவும்
கதைகள் எனும் லேபிலோடு

Monday, August 4, 2008

பதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்...?

பதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்...?
கோலிவுட்டையும், டோலிவுட்டையும் (அதாங்க தெலுங்கு சினிமா... அவங்க மட்டும் சளைச்சவங்களா என்ன?) ஒரு சேரக் கலக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கிசுகிசு... பாவனாவின் ரகசியக் கல்யாணம்தான்.

அடடா... இப்படி அதிர்ச்சியாவீங்கன்னு எதிர்பார்க்கல... இருந்தாலும் கிசுகிசுதானே. தைரியமா படிங்க!

கோடம்பாக்கத்துக்கு தற்காலிகமாக 'பை' சொல்லிவிட்டு, ஹைதராபாத் பக்கம் போன பாவனா, ஒண்டரி என்றொரு படம் நடித்தார். ஓஹோவென்று போகாவிட்டாலும், அம்மணிக்கு தெலுங்கில் நல்ல பெயரையும் அவருக்கென்று ஒரு இடத்தையும் பெற்றுத் தந்தது அந்தப் படம்.

இப்போது ஹீரோ எனும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ஹீரோவாக நடிப்பவர் இளம் நாயகன் நிதின். படப்பிடிப்பில் சினிமாவுக்காக இருவரும் காட்டிய நெருக்கம், நிஜத்திலும் தொடர்ந்ததாம்.

ரீல் ஹீரோவையே ரியல் ஹீரோவாக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்ட பாவனா, கோலிவுட்டில் பலர் முயன்றும் திறக்க முடியாத தன் மனதை நிதினுக்குத் திறந்துவிட்டுவிட்டாராம்.

படப்பிடிப்புத் தவிர்த்த பிற நேரங்களில் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என தெலுங்குப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

இப்போது இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் சில தெலுங்கு சினிமா இணைய தளங்களும், பத்திரிகைகளும் எழுதியுள்ளன.

என்னதான் நடக்குது?..

பாவனாவிடமே கேட்டுவிட்டோம்... அவரோ இன்னும் சித்திரம் பேசுதடி சித்திரமாகச் சிரிக்கிறார் கலகலவென்று.

என்னடா இன்னும் நம்மைப் பத்தி பெருசா எந்த வம்புச் செய்தியும் வரலியேன்னு பார்த்தேன். தெலுங்குப் பத்திரிகைகள் அதையும் குறைவில்லாம செய்திட்டாங்க. கவலையேபடாதீங்க... யாருக்கும் சொல்லாம ரகசியமா திருமணம் செய்துக்க மாட்டேன். இன்னும் சினிமாவில் சாதிக்க எவ்வளவோ இருக்கு... நானும் ஒருவிதத்துல பத்திரிகையாளரா இருந்து வந்தவதான். அதனால இந்த கிசுகிசுக்களைப் பார்த்து சிரிச்சிக்கிட்டேன் என்றார் பிடிகொடுக்காமல்.

சினிமா கிசிகிசுக்கள் போலவே, அவற்றுக்கான பதில்களும் மாறுவதே இல்லை!
நன்றி : தட்ஸ்தமிழ்

Sunday, August 3, 2008

இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை

இசையின் மகத்துவம் உலகம் அறிந்ததுதான். ஆனால் அந்த இசையைக் கையாளும் விதத்தில்தான் அற்புதங்கள் நிகழ்கின்றன. இசையை மிகச் சரியாகக் கையாள்வதில் ராஜாவுக்கு நிகர் ராஜாதான்.

சமீபத்தில் ராஜாவின் இசை ஒரு மிகப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.

ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் போய் செக்கப் செய்துள்ளனர். அவரும் பல சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, குழந்தை அசைவின்றி இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் இருந்தாலும் வயிற்றில் குழந்தை கை கால்களை அசைக்கும் போதுதானே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருக்கும்...

என்ன செய்வதென்றே புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து அமைதியாகிப் போனார்களாம். ஒருநாள் இளையராஜாவின் திருவாசகம் இசையை மன நிம்மதிக்காக ஓடவிட்டிருக்கிறார்கள்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சான்றோர் மொழி மெய்யாகிப் போனது.

என்ன ஆச்சர்யம்... சில நிமிடங்களில் வயிற்றில் ஒரு அசைவு தெரிந்துள்ளது. இசையை நிறுத்தியதும் அந்த அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து நான்குமுறை இப்படிப் போட்டுப் போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும் குழந்தையின் அசைவு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இசை நின்றதும் சில வினாடிகளில் அசைவும் நின்று போனதாம். அப்போதிலிருந்து தொடர்ந்து ராஜாவின் இசைதான் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சரியாகப் பத்தாவது மாதம், குழந்தை ஆரோக்கியமாக, அதுவும் அறுவைக்கு அவசியமின்றி சாதாரணமாகவே பிறந்து, மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிக்க கதை போலத் தோன்றினாலும், இச்சம்பவம் நிஜம்தான் என்பதை மெய்ப்பிக்க அந்த ஜெர்மன் தம்பதிகளே சென்னைக்கு வந்திருந்தனர் சில தினங்களுக்கு முன்பு. அவர்கள் முன்பின் இளையராஜாவைப் பார்த்ததும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது இசை மட்டும்தான்.

ராஜாவின் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே ராஜாவிடம் விஷயத்தைக் கூற அந்தத் தம்பதிகளை நேரில் சந்தித்து குழந்தைக்கும் ஆசி வழங்கியிருக்கிறார் ராஜா.

ஜெர்மனியின் மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக் கொண்டதோடு, ராஜாவின் திருவாசம் சிடியை வாங்கிக் கேட்டு, மொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயிருக்கிறார்கள்.

அதோடு மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் ஜெர்மன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம்.

உண்மையில் இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது.

போகர் மருத்துவத்தை நம்மவர்கள் ஓரங்கட்ட, அதை இன்னும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிகிறார்கள் ஜெர்மானியர்கள்.

இந்திய இசையை, இசைக் கலைஞர்களை பாதுகாக்க, கௌரவிக்க நாம் தவறிவிடக் கூடாது. இளையராஜா என்பவர் வெறும் திரை இசைக் கலைஞர் மட்டுமல்ல  என்பதை அழுத்தம் திருத்தமாக உணர வைத்திருக்கும் சம்பவம் இது.

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews