Monday, September 15, 2008

ஈரோடு பதிவர்சந்திப்பு - வால்பையன் வருத்தம்...

ஈரோடு பதிவர்சந்திப்பு - வால்பையன் வருத்தம்...

இன்று ஒரு வழியாக ஈரோட்டில் ஒரு பதிவர் சந்திப்பு நல்லமுறையில் நடந்து
முடிந்தது.

சுமார் ஒரு வருடமாக திட்டமிடப்பட்டு பல முறை தேதி குறிக்கப்பட்டு பிறகு நாள்
குறிக்கப்படாமல் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இன்று திங்கள்கிழமை மதியம் சுமார் 12.45 மணிக்கு முடிவு செய்யப்பட்டு மூத்த பதிவர் வால்பையன் அவர்கள் அலுவலகத்தில் இனிதே நடைபெற்றது.

கூடுதுறையாகிய எனது தலைமையில் உள்ளூர் பதிவர்கள் 10 பேரும், வால்பையன் அவர்கள் தொலைபேசியில் அழைக்கப்பட்டு எட்டு பதிவர்களும், பாஸ் கார்த்திக் அவரது பங்கிற்கு ஈரோடு வாழ் பதிவர்கள் ஒன்பது  பேரும் கலந்து கொண்டனர்.

அவரவர் அறிமுகத்திற்கு பிறகு அமைதியாக இருந்து பாஸ் கார்த்திக் அவர்கள் நீங்கள்தானே கூடுதுறை என்று சந்தோசத்துடன் எகிறி வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார்.

சந்திப்பில் பொதுவான விசயங்கள் அலசப்பட்டன... கூகுல் குரோம் மற்றும் அட்டவணைப் பதிவுகள் பேசப்பட்டது. பிறகு பேச்சு கம்மாடிட்டி டிரேடிங் பக்கம் திரும்பியது. நானும் இன்று காலை மேற்படி மார்க்கெட் பற்றிய ஆர்ட்டிகள் ஒன்று படித்தேன் அதில் தங்கம் விலை அடுத்த ஆண்டு டிசம்பர் வரை இப்போது இருக்கும் விலையை விட இறங்கியே இருக்கும் என்று எழுதியுள்ளது என்று கூறினேன்

வால்பையனும் ஆஹா பரவாயில்லையே எனக்கூறி யார் எந்த வல்லுனர் எழுதியுள்ளார் ஆவலுடன் கேட்டார். வல்லுனர் ஒருவரும் இல்லை ஒரு குருப்பெயர்ச்சி பலன் புத்தகத்தில்தான் அப்படிக்கூறியுள்ளனர் எனக்கூறினேன். வால்பையன் காற்று போன பலூன் ஆனார்.

மேலும் அவர் தனது தம்பிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட விசயத்தை நம்மிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

பாஸ் கார்த்திக் அவர்கள் சாப்பிட்டு விட்டுதான் போகவேண்டுன் என மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைவரும் ஈரோடு ஆக்ஸ்போர்டு மங்களம் உணவகம் சென்றோம்.

கார்த்திக் அவர்கள் அசைவம் சாப்பிடுவோம் எனக்கேட்டதற்கு இன்று திங்கள்கிழமை நாம் அசைவம் சாப்பிடமாட்டோம் எனக்கூறியதற்கு மிகவும் ஆச்சர்யப்பட்டார்.

திங்கள்கிழமை ஏன் சாப்பிடுவதில்லை என விளக்கம் கேட்டார். நாம் கார்த்திகை மாதம் சாமி கும்பிடுபவர்கள் ஆகவே திங்கள் அசைவம் சாப்பிடுவதில்லை எனக்கூறினேன்.

வேறு எதாவது வெண்குழல் வத்தி அல்லது சமத்துவபுரம் என இழுக்க... மன்னிக்கவும் எனக்கு பழக்கமில்லை எனக்கூற வால்பையன் மிகவும் வருத்தமடைந்தார். சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் எல்லாம் எப்படி மிதந்தோம் இப்போது நம்மூர் பதிவர் சந்திப்பு இப்படி முழுக்க முழுக்க சைவமாக அமைந்துவிட்டதே என மிக்க வருத்தம் கொண்டார்.

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் பல பதிவர்களின் எச்சரிக்கையையும் மீறி நான் சைனா போன் வாங்கிவிட்டதைக்கூறி அதை எடுத்துக்காட்டினேன். மேலும் அதனுடைய பிளஸ் பாயிண்டுகளை மட்டும் எடுத்துக்கூறினேன். (யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்).

அதிலிருந்து வால்பையன் என்னை ஒருபுகைப்படம் எடுத்து இது வால்பையன் எடுத்தது எனக்கூறி வெளியிடுங்கள் கட்டளையிட்டார். எனது படம் என்றால் கூடுதுறைதான் வரும் எனக்கூறி மறுத்துவிட்டேன்.

அத்துடன் சந்திப்பு இனிதே முடிவுற்றது.

டிஸ்கி: 10 +8 +9  பேர் கலந்து கொண்டனர் என்று எழுதியது எல்லாம் சும்மா பில்டப் நாம் மூன்றுபேர்தான் கலந்துகொண்டோம். ஆனால் அத்தனை பேர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்.... ம் .ம். ம் ... பார்ப்போம் வருங்காலத்தில்

35 comments:

Prabhakaran said...

நல்லா எழுதி உள்ளீர்கள்... விரைவில் நிறையபேர் கலந்து கொள்வார்கள்

கூடுதுறை said...

நன்றி பிரபாகர்

SP.VR. SUBBIAH said...

இரண்டு பேர்கள் கலந்து கொண்டாலும் அது சந்திப்புதான்!

முரளிகண்ணன் said...

\\இரண்டு பேர்கள் கலந்து கொண்டாலும் அது சந்திப்புதான்\\

yes i agree

cheena (சீனா) said...

நாங்க மதுரைலே இத விடப் பெரிய வலைப்பதிவர் மாநாடு நடத்தினோமே

http://cheenakay.blogspot.com/2008/09/blog-post.html

ம்ம் பரவா இல்ல - அடுத்த மாநாடு வாலு தம்பி கல்யாணத்துலே தூள் கிளப்பிடுங்க

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................

தாமோதர் சந்துரு said...

அய்யா சாமிகளா, நாங்களும் ஈரோட்டுலதான இருக்குறோம், எங்கலையெல்லாம் கூப்படமாட்டிங்க, ஆனா, வால்பையன் வருத்தப்பட்டா என்னத்தச் சொல்லருது. அன்னைக்கு அப்படித்தா அமரபாரதி வந்தன்னிக்கி நாங்க போன் போட்டா எடுக்க மாட்டீங்க,
பராவயில்லய்ங்க, எங்களைக்கூப்பிட்டா சுண்டக்கஞ்சிக்கு
எங்க போரதுனு உட்டுருப்பிங்க
வாழ்க வளமுடன்
அன்புடன்
சந்துரு

கூடுதுறை said...

// sp.vr. subbiah said...
இரண்டு பேர்கள் கலந்து கொண்டாலும் அது சந்திப்புதான்//


வருகைக்கு நன்றி ஐயா...

அமர பாரதி said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

//அவரவர் அறிமுகத்திற்கு பிறகு அமைதியாக இருந்து பாஸ் கார்த்திக் அவர்கள் நீங்கள்தானே கூடுதுறை என்று சந்தோசத்துடன் // அடங்கொய்யால! இருந்தது மூனு பேர். அதுல வாலோட பாஸ் கார்த்திக். இதுல அவரு எகிறி வந்து வேற அறிமுகப்படுத்திக்கிட்டாரா.

//அப்படித்தா அமரபாரதி வந்தன்னிக்கி நாங்க போன் போட்டா எடுக்க மாட்டீங்க,
// அண்ணா, அடுத்த தடவை இவிங்கள தேடியாவது கண்டு பிடிச்சுருவோம்.

கூடுதுறை said...

//Blogger முரளிகண்ணன் said...
\\இரண்டு பேர்கள் கலந்து கொண்டாலும் அது சந்திப்புதான்\\
yes i agree//

thanks muralikannan

தாமிரா said...

27 பேர் என்றவுடன் முதலில் அரண்டுபோய்விட்டேன். அப்புறம்தான் தெளிவாச்சுது. எல்லோருமே வர வர வாயைத்தொறந்தாலே பொய்யா சொல்லி கொல்றாங்களே..

கூடுதுறை said...

//Blogger தாமிரா said...
27 பேர் என்றவுடன் முதலில் அரண்டுபோய்விட்டேன். அப்புறம்தான் தெளிவாச்சுது. எல்லோருமே வர வர வாயைத்தொறந்தாலே பொய்யா சொல்லி கொல்றாங்களே..//

பதிவுன்னா ஒரு பில்டப் இருந்தாத்தானே நல்லா இருக்கும் தாமிரா அவர்களே...

கவிஞர்க்கு பொய்யழகு
பதிவர்க்கு குசும்பழகு

கூடுதுறை said...

//Blogger cheena (சீனா) said...
நாங்க மதுரைலே இத விடப் பெரிய வலைப்பதிவர் மாநாடு நடத்தினோமே
http://cheenakay.blogspot.com/2008/09/blog-post.html
ம்ம் பரவா இல்ல - அடுத்த மாநாடு வாலு தம்பி கல்யாணத்துலே தூள் கிளப்பிடுங்க//

சீனா உங்களைப்பற்றிகூட சந்திப்பில் பேசிக்கொண்டோம்...

இன்னும் ஒரு விசயம் தெரியுமா? தம்பி கல்யாணமே உங்களூர் மதுரையில்தான் மாநாட்டிற்கு அப்படியே ஏற்பாடு செய்துவிடுகிறீர்களா?

கூடுதுறை said...

//Blogger rapp said... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................//

என்ன rapp ரொம்ப நாளா ஆளைக்காணோம்?

கூடுதுறை said...
This comment has been removed by the author.
கூடுதுறை said...

//தாமோதர் சந்துரு said...
அய்யா சாமிகளா, நாங்களும் ஈரோட்டுலதான இருக்குறோம், எங்கலையெல்லாம் கூப்படமாட்டிங்க, //

ஆஹா மாட்டிக்கிட்டார்பா இன்னும் ஒருத்தர் ஈரோட்டிலே... இதோ வர்றோம் சந்துரு...


//ஆனா, வால்பையன் வருத்தப்பட்டா என்னத்தச் சொல்லருது. அன்னைக்கு அப்படித்தா அமரபாரதி வந்தன்னிக்கி நாங்க போன் போட்டா எடுக்க மாட்டீங்க, பராவயில்லய்ங்க, எங்களைக்கூப்பிட்டா சுண்டக்கஞ்சிக்கு எங்க போரதுனு உட்டுருப்பிங்க வாழ்க வளமுடன் அன்புடன் சந்துரு//

இந்த மேட்டர் ரீடைரக்டு டூ வால்பையன்.......

கூடுதுறை said...

//Blogger அமர பாரதி said...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.//

ஆஹா... பெருந்தலைவர்கள் எனது பதிவுக்கு வருகையா?

தன்யனானேன் நன்றி நன்றி...

சுபாஷ் said...

:))

அமர பாரதி said...

கூடுதுறை,

////Blogger அமர பாரதி said...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.//

ஆஹா... பெருந்தலைவர்கள் எனது பதிவுக்கு வருகையா?//

பால பாரதின்னு நினைச்சுக்கிட்டு எழுதிட்டீங்க போல. இருந்தாலும்

கூடுதுறை said...

// அமர பாரதி said...
பால பாரதின்னு நினைச்சுக்கிட்டு எழுதிட்டீங்க போல. //

எப்படி இருந்தாலும் பாரதி என்று பெயர் இருந்தாலே பெருந்தலைதானே...

கிரி said...

கூடுதுறை நான் ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன் போல :-) நான் அடுத்த வாரம் வருகிறேன்

வந்ததும் உங்களை அழைக்கிறேன்

இளைய கவி said...

ஏனுங்கன்னா, நானும் கரூர்ல தான இருக்கேன் ஒரு வார்த்தை சொன்னா வந்திருக்க மாட்டேனா ?

கூடுதுறை said...

// சுபாஷ் said...
:))//

வெறும் ஸ்மைலி போட்டு இருந்தாலும் வருகைக்கு நன்றி சுபாஷ்

தமிழ்நெஞ்சம் said...

//வல்லுனர் ஒருவரும் இல்லை ஒரு குருப்பெயர்ச்சி பலன் புத்தகத்தில்தான் அப்படிக்கூறியுள்ளனர் எனக்கூறினேன். வால்பையன் காற்று போன பலூன் ஆனார்.//

Enna Oru Kodumai கூடுதுறை idhu?

கூடுதுறை said...

// தமிழ்நெஞ்சம் said...
//வல்லுனர் ஒருவரும் இல்லை ஒரு குருப்பெயர்ச்சி பலன் புத்தகத்தில்தான் அப்படிக்கூறியுள்ளனர் எனக்கூறினேன். வால்பையன் காற்று போன பலூன் ஆனார்.//

Enna Oru Kodumai கூடுதுறை idhu?

இது தான் தற்போது நிஜம் ஆகிக்கொண்டுள்ளதே... தமிழ்நெஞ்சம் அவர்களே... குருட் ஆயில் விலை இறக்கம், அமெரிக்க டாலர் விலை அதிகரிப்பு எல்லாம் நடக்கிறதே...

கூடுதுறை said...

// கிரி said...
கூடுதுறை நான் ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன் போல :-) நான் அடுத்த வாரம் வருகிறேன்
வந்ததும் உங்களை அழைக்கிறேன்//

கிரி உங்கள் வரவு நல்வரவு ஆகுக...

கூடுதுறை said...

// இளைய கவி said...
ஏனுங்கன்னா, நானும் கரூர்ல தான இருக்கேன் ஒரு வார்த்தை சொன்னா வந்திருக்க மாட்டேனா ?//

வாங்க இளையகவி உங்களை அழைக்காமலா அடுத்து கூப்பிட்டு விடுவோம்...

அனுஜன்யா said...

Two is company; Three is crowd என்பார்கள். அந்த வகையில் உங்கள் சந்திப்பு பெரிய கூட்டம்தான். மேலும், தல (பேர் வால்பையன் என்றாலும்) வந்தார்னா நூறு பேர் வந்த மாதிரி. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

கூடுதுறை said...

//Blogger அனுஜன்யா said...
Two is company; Three is crowd என்பார்கள். அந்த வகையில் உங்கள் சந்திப்பு பெரிய கூட்டம்தான். மேலும், தல (பேர் வால்பையன் என்றாலும்) வந்தார்னா நூறு பேர் வந்த மாதிரி. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா//

முதல் வருகைக்கு நன்றி அனுஜன்யா...

ஈரோடு என்றால் தல(வால்பையன்) இல்லமாலா? இன்று பாருங்களேன் அவர்பதிவில் 101 டிகிரி காய்ச்சலோடு கும்மி போட்டுக்கொண்டு இருப்பதை...

கூடுதுறை said...

30

நானே போட்டுக்கொள்கிறேன்

தமிழ்நெஞ்சம் said...

Congrats for meeting @ Erode.

How is Arun,Karthik Heroes

கூடுதுறை said...

// தமிழ்நெஞ்சம் said...
Congrats for meeting @ Erode.
How is Arun,Karthik Heroes//

வணக்கம் தமிழ்நெஞ்சம். உங்களைப்பற்றியும் சந்திப்பில் பேசிக்கொண்டோம்...

வாலுக்கு அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் தாங்கள் செய்கிறீர்களேமே...

அவருக்கு a for apple link கொடுத்து மாட்டிவிட்டேன். இன்னும் இதுவரை எதுவும் போடவில்லை... உங்களிடம் தான் உதவிகேட்கப்போவதாக கூறினார்..

ஜிம்ஷா said...

வணக்கம் கூடுதுரையாரே...
எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. பரவாயில்லை. அப்புறம் கிளிக் போட்டாச்சு.

கூடுதுறை said...

//Blogger ஜிம்ஷா said...
வணக்கம் கூடுதுரையாரே...
எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. பரவாயில்லை. அப்புறம் கிளிக் போட்டாச்சு.//

வருக ஜிம்ஷா...உங்களுக்கு அழைப்பில்லாமாலா... கவலை வேண்டாம் அடுத்ததில் அழைப்பு உண்டு..

the said...

Surat Manufacturer, Surat India Wholesaler, Surat Retailers, Surat Textile, Surat DiamondsHere is the list of all manufacturer, supplier, retailers, textile show room, textile house, diamond house.

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews