Friday, October 17, 2008

சினிமா சினிமா - தொடர்பதிவு

சினிமா சினிமா - தொடர்பதிவு

என்னை இத்தொடர் பதிவில் கோர்த்து விட்ட சுபாஷ்   என் முதற்க்கண் நன்றியை (நற நற) தெரிவித்துக் கொண்டு பதிவிற்குப் போகலாமா? அனேகமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்

1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஒரு வயதில்... அப்போது நன்றாக தூங்கியதாக அம்மா கூறியிருக்கிறார்

ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ஹரிதாஸ்

இ. என்ன உணர்ந்தீர்கள்?

சினிமா என்றால் நிறைய பாட்டு இருக்கும் என உணர்ந்தேன்

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தல நடித்த வரலாறு. நடுஇரவு 1 மணி ரயிலுக்கு டிக்கெட் புக் செய்து இருந்ததால் ஈரோடு ரயில் நிலையம் எதிரில் உள்ள திரையரங்கில் பார்த்தது...

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன 
உணர்ந்தீர்கள்?

வேறேங்கே... நமது கணினியில் தான்...அதுதான் சவுகர்யம்...எதுவென்று வேண்டாமே...

சிகரெட் புகையுடன் சுவாசித்துகொண்டு, காறி துப்பபட்டுருக்கும் எச்சிலை மிதித்து நடந்து கொண்டு, வாந்தி எடுக்க வைக்கும் கழிவறை, காட்டுக்கூச்சல் போட்டு ரசிகர் பட்டாளம் தொந்தரவே இல்லை...

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பராசக்தி


5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கே மீது கொலை வழக்கு

ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

அலிபாபாவும் 40 திருடர்களும். முதல் கலர் படம்

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ம்... தினத்தந்தியில்... இப்போது நெல்லை சினிமா நிருபர்

7.தமிழ்ச்சினிமா இசை?

கே.வீ.மகாதேவன்

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்திப்படங்கள்...தமிழ் டப் ஆங்கிலப்படங்கள் (உதவி: சன் & விஜய் டீவி)

பக்த மீரா,


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

படங்களை பார்ப்பது தவிர வேறோன்றும் இல்லை...அதுவும் தற்போதைய நிலைமை மேம்பட உதவாது.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சின்னத்திரை இருக்க தமிழ்சினிமா கவலை கொள்ளவேண்டியது இல்லை

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ் எழுத்தாளர்கள் வளம் பெறுவார்கள்.. நாடகம் உயிர்பெறும்... பதிவர்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்


எனக்கு கோத்துவிடும் சமாச்சரமே பிடிக்கவில்லை.... (ஏனேன்றால் நான் கோத்துவிடுபவர்கள் அதற்கு பதிவே போடுவதில்லை உதாரணம் (A for Apple) 
ஆகவே நானும் அண்ணன் உண்மைத்தமிழன் கட்சியில் சேர்ந்து கோத்துவிட்டவரை கேள்விகள் கேட்கிறேன்.

என்னைக்கோத்துவிட்ட சுபாஷ் அவர்களுக்கு....
கேள்வி:

1) உங்களுடைய பதிவில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் உள்ளனவே?


2) எப்படி நேரம் கேட்ட நேரத்தில் வந்து தனிமையில் கொடூரமாக கும்மி பின்னுட்டம் போட உங்களால் முடிகிறது?


3) தற்போது பதிவுகள் குறையக்காரணம் என்ன? அதிக கும்மிதான் காரணமா?









டிஸ்கி: பதிவர்கள் மன்னிக்கவும்...இந்த சினிமா தொடர்பதிவே பொதுவாக பதிவர்களின் வயதைக்கண்டுபிடிக்கும் முயற்சியோ என சந்தேகித்து இந்த பதிவில் கும்மி போட்டு தாக்கிவிட்டேன். அத்தனையும் உடான்ஸ் தான்

45 comments:

வால்பையன் said...

//அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்//

இன்னும் நானும் களத்துல இருக்கேன்

வால்பையன் said...

//ஒரு வயதில்... அப்போது நன்றாக தூங்கியதாக அம்மா கூறியிருக்கிறார்//

பார்த்ததை பற்றி தான் கேள்வி
தூங்கியதை பற்றி அல்ல

வால்பையன் said...

//நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ஹரிதாஸ்//

பார்த்தா அவ்வளவு வயசு தெரியலையே

வால்பையன் said...

//அத்தனையும் உடான்ஸ் தான்//

நம்பிட்டேன் ..டோம்

கிரி said...

//எனக்கு கோத்துவிடும் சமாச்சரமே பிடிக்கவில்லை//

சேம் ப்ளட் :-)

சரி கூடுதுறை ..பதிவு போட்டுட்டு அப்பாடா வேலை முடிஞ்சுதுன்னு இருக்கிற மாதிரி தெரியுது ஹி ஹி ஹி

கூடுதுறை said...

//இன்னும் நானும் களத்துல இருக்கேன்//

களத்தில் இருந்து பிரயோஜனம் இல்லை... பதிவு வந்தால் பார்க்கலாம்

கூடுதுறை said...

//பார்த்ததை பற்றி தான் கேள்வி
தூங்கியதை பற்றி அல்ல//

பார்த்தேனே... கொஞ்ச நேரம் மிரள மிரள பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன்..

கூடுதுறை said...

//பார்த்தா அவ்வளவு வயசு தெரியலையே//

கடைசியில் உள்ள டிஸ்கியை பார்க்கவும்

கூடுதுறை said...

வால்பையன் said...
//அத்தனையும் உடான்ஸ் தான்//
நம்பிட்டேன் ..டோம்.


நம்பிட்டேன் சரி...நம்பிட்டோம் ? ? ?

இது யாரு யாரு? நீங்கள், பிளிச்சிங் பவுடர்,நல்லதந்தி சரியா?

(எல்லோரும்தான் சொல்றாங்க நாம்பளும் ஒரு பிட்ட போட்டுவைப்போம்...)

கூடுதுறை said...

// கிரி said...
//எனக்கு கோத்துவிடும் சமாச்சரமே பிடிக்கவில்லை//
சேம் ப்ளட் :-)
சரி கூடுதுறை ..பதிவு போட்டுட்டு அப்பாடா வேலை முடிஞ்சுதுன்னு இருக்கிற மாதிரி தெரியுது ஹி ஹி ஹி//

உண்மைதான் கிரி... பதிவு போட்டுவிட்டு அப்பாடா இந்த தொந்தரவு விட்டது... பதிவுகளை இணைத்துவிட்டு ஓடிப்போய்தூங்கி விட்டேன்... விடியற்காலை கரண்ட் போகுமே...அப்போது கொட்ட கொட்ட விழித்து இருக்கவேண்டும் அல்லவா?

Subash said...

வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல ல ல ல ல ல ( எக்கோ!!! )

Subash said...

ஆஹா!!!!
அப்பப்பா கூட அந்த படமெல்லா பாத்திருப்பாருனு நினக்கல!!! ஹிஹி

Subash said...

ஃஃசினிமா சினிமா - தொடர்பதிவுஃஃ

ஓகே!!!!

Subash said...

ஃஃமுதற்க்கண் நன்றியை (நற நற) தெரிவித்துக் கொண்டுஃஃ

எப்படி?
நம்பியார் கையை பழசைவதுபோல உங்கள நினைச்சு பார்க்கட்டுமா??

ஹிஹி

நன்றிக்கு நன்றிங்க

Subash said...

ஃஃஅனேகமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்ஃஃ

அய்ய்ய்
நீங்க அப்ப பாஸ்!!!!!!!!!!!1

Subash said...

ஃஃஒரு வயதில்... அப்போது நன்றாக தூங்கியதாக அம்மா கூறியிருக்கிறார்ஃஃ

குடுத்து வச்சிருக்கீங்க!!!!

Subash said...

ஃஃநினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ஹரிதாஸ்ஃஃ


யயயப்ப்ப்ப்பாபாபாபாபாபா

Subash said...

ஃஃஎன்ன உணர்ந்தீர்கள்?

சினிமா என்றால் நிறைய பாட்டு இருக்கும் என உணர்ந்தேன்ஃஃ


அந்த படம் புரா பாட்“டுத்தானே

Subash said...

ஃஃதல நடித்த வரலாறு. நடுஇரவு 1 மணி ரயிலுக்கு டிக்கெட் புக் செய்து இருந்ததால் ஈரோடு ரயில் நிலையம் எதிரில் உள்ள திரையரங்கில் பார்த்தது...ஃஃ

ஹிஹி
நானும் ஏதோ ரசிகனா நடுச்சாமம் போயி பாத்திங்களோனு பஜந்துட்டன்

Subash said...

ஃஃவேறேங்கே... நமது கணினியில் தான்...அதுதான் சவுகர்யம்...எதுவென்று வேண்டாமே...
ஃஃ

உண்மைதான்!!!!

Subash said...

ஃஃசிகரெட் புகையுடன் சுவாசித்துகொண்டு, காறி துப்பபட்டுருக்கும் எச்சிலை மிதித்து நடந்து கொண்டு, வாந்தி எடுக்க வைக்கும் கழிவறை, காட்டுக்கூச்சல் போட்டு ரசிகர் பட்டாளம் தொந்தரவே இல்லை...ஃஃ

உண்மைதான்
தியேட்டர்கள் சிறப்பாகவிருந்தால் நாம ஏன் வீட்ல சிடீ டிவிடி பாக்கறோம்.
என்னமோஇ அவ்களுக்கு எப்ப புரியும்னே தெரியல

Subash said...

ஃஃ மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பராசக்திஃஃ

காக்க காக்க

Subash said...

ஃஃ.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கே மீது கொலை வழக்குஃஃஃ


நோ............. காமென்ட்ஸ்

Subash said...

ஃஃ

அலிபாபாவும் 40 திருடர்களும். முதல் கலர் படம்ஃஃ

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ம்ம்ம்முடியலலலலலலல

Subash said...

ஃஃதமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ம்... தினத்தந்தியில்... இப்போது நெல்லை சினிமா நிருபர்ஃஃ


ஓகோ..

நா நேரடியா அவங்ககிட்டயே போன் போட்டு ”என்னப்பா விஜய். வில்லு நியுஸ் என்னனு கேட்ருவேன்.
ஹிஹிி

Subash said...

ஃஃ7.தமிழ்ச்சினிமா இசை?

கே.வீ.மகாதேவன்ஃஃ


இவர பத்தி அப்பா சொன்னாரு.

Subash said...

ஃஃதமிழ் டப் ஆங்கிலப்படங்கள் (உதவி: சன் & விஜய் டீவி)ஃஃ

எனக்கும் மிகப்பிடித்த படங்கள்.
காமடி படம் பாக்கணும்னா டப் பண்ணிய பேய்ப்படம் பாத்தா ஓகேயாயிடும்.
ஹிஹி

Subash said...

ஃஃபடங்களை பார்ப்பது தவிர வேறோன்றும் இல்லை...அதுவும் தற்போதைய நிலைமை மேம்பட உதவாது.ஃஃ

சரிதான்
ஹிஹி

Subash said...

ஃஃசின்னத்திரை இருக்க தமிழ்சினிமா கவலை கொள்ளவேண்டியது இல்லைஃஃ

தமிழ்சினிமா இருக்கு சின்னத்திரையும் கவலைகொள்ள தேவையில்லை

Subash said...

ஃஃதமிழ் எழுத்தாளர்கள் வளம் பெறுவார்கள்.. நாடகம் உயிர்பெறும்... பதிவர்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்ஃஃ


ரிப்பீட்டேய்ய்ய்ய்

Subash said...

ஃஃஎனக்கு கோத்துவிடும் சமாச்சரமே பிடிக்கவில்லை.... ஃஃ

ஆஆஆஆஆ
அவ்ளோ நல்லவரா நீங்க????

Subash said...

ஃஃஏனேன்றால் நான் கோத்துவிடுபவர்கள் அதற்கு பதிவே போடுவதில்லைஃஃ

சேம் பீலிங்ஸ்!!!!

Subash said...

ஃஃகோத்துவிட்டவரை கேள்விகள் கேட்கிறேன்.ஃஃ

ஆஹாஹாஹாஹாஹா
மாப்புபுபுபுபு
வச்சிட்டான்யா ஆஆஆஆஆப்ப்ப்பபுபுபுபுபுபு
எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

Subash said...

ஃஃஃ1) உங்களுடைய பதிவில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் உள்ளனவே?ஃஃஃ

வழமையா நா பேசறமாதிரி அப்படியே டைப் பண்றேன்.
தனித்தமிழில் எழுதினா பிறகு அத நா வாசிக்கும்போதுகூட விளங்காது!!!
ஹிஹி

Subash said...

ஃஃஃஃஃ
2) எப்படி நேரம் கேட்ட நேரத்தில் வந்து தனிமையில் கொடூரமாக கும்மி பின்னுட்டம் போட உங்களால் முடிகிறது?ஃஃஃஃஃஃஃஃஃ

ஹிஹிஹிஹிஹிஹி
கேள்விகேட்ட ஸ்டைல் !!! உண்மையில் சிரிப்புதா வருதுங்க.
---

எல்லா வேலையும் முடிச்சுட்டு வர நைட் 1 மணிக்கு கிட்ட வரம். அப்ப நித்திரை வராதுங்க. அப்பதா பதிவு பக்கம் வந்து படிக்கறதுஇ பின்னுட்டம் போடுரது எல்லாமே.
மானிட்டர பாத்து கண் பத்தி வரும்வரைக்கும் இருப்பன்.
அந்தக்கொடுமையில் போட்டு தாக்கறதுதான் கும்மிருட்டுக்கும்மி!!!
ஹிஹி

Subash said...

ஃஃ3) தற்போது பதிவுகள் குறையக்காரணம் என்ன? அதிக கும்மிதான் காரணமா?ஃஃ

பதிவு குறைய காரணம் கும்மியல்ல.
இப்ப காலேஜ் முடிஞ்சுன்றதால வேற வேலைலயும் ஊர் சுத்தவும் டைம் சரியாருக்குதுங்க.
இன்னிக்குகூட ஒரு புது போன் நம்ர் கிடைச்சுது. நம்ம செட்ட கூட்டிட்டு ஈவினிங் போயி பாக்கணும்!!!!
அவ்ளோ பிசி!!!ஹிஹிஹிஹி

Subash said...

ஃஃஇந்த சினிமா தொடர்பதிவே பொதுவாக பதிவர்களின் வயதைக்கண்டுபிடிக்கும் முயற்சியோ என சந்தேகித்துஃஃ


அடக்கடவுளே!!!!!!!!!
அவசரப்பட்டு உண்மையெல்லாம“ சொல“்லிட்டனே!!!!!!

Subash said...

ஃஃஅத்தனையும் உடான்ஸ் தான்ஃஃ

ஹிஹிஹிஹி
இப்படி சொன்னா நாங்க ஏத்துப்போமா என்ன???

பழமைபேசி said...

நீங்க நம்ம ஊட்டுத் திண்ணைக்கு வாறதே இல்லை இப்ப‌? இருங்க! இருங்க!! ஊர்ப் பன்னாடிகிட்டச் சொல்லத்தான் கெடக்கு.....

கூடுதுறை said...

ஆஹா... சுபாஷ் தப்பு செய்துவிட்டீர்களே...பதிவில் கேட்ட கேள்விகளுக்கு பதில் பதிவில்தான் இடவேண்டும்... பின்னுட்டத்தில் அல்ல...


உடனடியாக உங்களது பதிவில் பதில்களை வெளியிடுங்கள்...

இல்லையேல் பழமைபேசி மூலம் உங்களூர் பண்ணாடியிடம் புகார் கொடுத்துவிடுவேன்...ஜாக்கிரதை

Subash said...

ஃஃஉடனடியாக உங்களது பதிவில் பதில்களை வெளியிடுங்கள்...ஃஃ


ஆஹா!!!!!!1
தெரியாம போச்சே!!!!!!!!!!!
ம்ம் போட்டா போச்சு!!!!
:)

உண்மைத்தமிழன் said...

கூடுதுறையாரே..

'பராசக்தி'தான் தாக்கிய படமா..

வாழ்த்துக்கள்..

பிறகு.. எனது வலைப்பதிவுக்கு லின்க் கொடுத்திருப்பதற்கு நன்றிகள்..

அந்த லின்க்கை கொடுப்பது எப்படி என்பதை எனக்குச சொல்லிக் கொடுங்களேன்..))))))))))))

Subash said...

போட்டாயிற்று !!!!!!!!!!!!!

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி உ.தமிழன் அண்ணா...

தாங்கள் பதிவை கடைசி வரை படிக்கவில்லை என்று தெரிகிறது...கடைசி வரி வரை படியுங்கள்.

லிங்க் கொடுப்பது என்பது ஒன்றும் பெரிய விசயமில்லை....

குறிப்பிட்ட பதிவில் தலைப்பில் உள்ள லின்க்கை காப்பி செய்து கொள்ளவும்.

எதில் லிங்க் கொடுக்கவேண்டுமோ அந்த வார்த்தையை செலக்ட் செய்து பதிவு எழுதும் இடத்தில் மேலே லின்க் என்ற ஐகானை அழுத்தினால் ஒரு பாப் ஆப் திறக்கும் அதில் காப்பி செய்த லின்க்கை கொடுத்து ஓகே செய்து விடுங்கள் அவ்வளவே

சந்தேகம் இருப்பின் கேட்கவும்

நசரேயன் said...

நல்ல தொகுப்பு

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts