Wednesday, July 16, 2008

பெண்களின் திருமண வயதை 21 ஆக்கவேண்டும் - பாகம் 2

இது சம்பந்தமான முதல்பதிவிற்க்கான லிங்க் இதில் உள்ளது. இதனை படித்துவிட்டு கீழே இருப்பதை படிக்கவும்.

தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் குறைந்த பட்சம் டிகிரி முடித்த பிறகு திருமணம் செய்தால்தான் அவர்களின் பிற்கால தேவைகளை சுயமாக பூர்த்தி செய்துகொள்ள இயலும்.

தற்போதை நிலைமையில் வால்பையன் பின்னுட்டத்தில் கூறியதைப்போல் பெற்றோர்கள் (ஒரு சிலரைத்தவிர) காதலுக்கு பயந்து 18 அல்லது 19 வயதுக்குள் திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.

அல்லது பெண்கள் தங்களின் தவறான சுயமுடிவாலும் ஆண்களின் கவர்ச்சியாலும் ஈர்க்கப்பட்டு காதலில் தள்ளப்பட்டு பெற்றொர் உற்றோரை பிரிந்து சென்று அவதிப்படுகின்றனர். இதில் மிகச்சிறிய அளவில் உள்ளவர்களே வளமையான வாழ்க்கை பெறுகின்றனர்.

நான் காதலை தவறு எனக்கூற வரவில்லை...காதல் ஏற்படும் வயது மிகத்தவறான வயதாகும், அப்போது வெறும் இனக்கவர்ச்சி இருக்குமே ஒழிய அதன் பின் இருக்கும் இருண்டகாலம் காதலர்களுக்கு தெரிவதில்லை...

ஒரு சிலர் கேட்கலாம் ஏன் பெற்றோர்கள் நன்றாக வளர்க்கலாம் என... ஆனால் இப்போது 12 அ 13 வயதுக்கு மேல் குழந்தைகள் பெற்றோர்கள் கைமீறி போய்விடுகின்றனர்... அதுவும் வசதியுள்ள வீட்டுச்சிறுவ, சிறுமிகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.

அப்படியே பெற்றோர்கள் அடங்கி நடக்கும் டீன் ஏஜ்களை நமது சினிமாக்களும் டீவி சீர்யல்களும் சும்மா விடுவதில்லை....

சினிமாக்களில் மாணவர்கள் படிப்பதே இல்லை... பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவதே காதலிக்கத்தான் என்பதைப்போலவே காட்டுகின்றனர். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் வசூலை குறிவைத்துத்தான் சில இயக்குனர்கள் படமே எடுக்கின்றனர்.

போதாக்குறைக்கு தொலைக்காட்சி.... சினிமாவது செலவு செய்து நாமாக சென்று பார்க்கவேண்டும்... தொ.கா அப்படியல்ல நம் வீட்டு ஹாலுக்கே வந்து தொலைக்கிறது...அதில் சீரியல்கள் அடிக்கும் கொட்டம் உள்ளதே... அதை நாம் எல்லோரும் அனுபவத்துக்கொண்டுதான் உள்ளோம்...

பொதுவாக வாழ்க்கை முறையில் இல்லாத உறவேல்லாம் அதில் வருகிறது. இதைப்பற்றி நமது பதிவர்கள் எற்கனெவே அலசி ஆராய்ந்து காயபோட்டு விட்டனர்...சிரியல்கள் தவிர நமது தொலைக்காட்சிகளில் சினிமா கிளிப்பிங்கள் அனைத்திலும் சில சுவராஸ்யகாட்சிகள் எனக்கூறி எனப்பாதி படத்தை காண்பித்துவிடுகின்றனர். முழுப்படம் பார்த்தாலவது தவறு செய்பவர்கள் கடைசியிலாவது திருந்துவதை காண்பிப்பார்கள்.

டீன் ஏஜ் குழந்தைகள் மனம் அலைபாய்வதற்கு வேறு தேவையேயில்லை...

ஆனால் விதி... அந்த வேறு என்பது நிறையவே இருக்கிறது இக்காலத்தில்....

செல்போன் மற்றும் கணினி, பள்ளியிலும் கல்லூரியிலும் ஏட்டளவில் வேண்டுமானல் செல்போன் கொண்டுவரக்கூடாது என இருக்கலாம். அவை இல்லாமல் எத்தனை பேர் உள்ளனர்? பேசக்கூட வேண்டியதில்லை... sms என்று ஒன்று உள்ளதே அதே போதுமான அளவு கெடுத்துக்கொண்டுள்ளது....

கால்முதல் தலை வரை போர்வை போத்திக்கொண்டு sms மூலம் சாட் செய்துகொண்டுருக்கும் வளரும் தலைமுறையே மிக அதிகம்...

கணினி நம்மைப்போன்ற பதிவர்களுக்கு கூட தெரியாத பல வெப்சைட் முகவரிகள் அவர்களிடம்தான் உள்ளன.

ஆகவே, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்காலத்திய ஊடகங்கள் இளைஞர், இளைஞிகளை தவறான பாதைகளுக்கு மிக வேகமாக இழுத்து செல்கின்றன....

இதில் எல்லாம் தப்பிப்பிழைத்து நன்றாக படித்து நல்ல வேலையோ சுயதொழிலையோ மிக நன்றாக செய்துவரும் இளைஞ, இளைஞிகளும் உள்ளனர்.

ஆனால் நம் கவலைகள் எல்லாம் 18 வயதில் வழிதவறிபோகும் இளைஞர்கள், இளைஞிகள் பற்றித்தான்.............



இந்த விவாதம் மேலும் தொடர்கிறது இது சம்பந்தமாக ஆலோசனை சொல்பவர்கள் தயவுசெய்து பின்னுடமிடவும்.

பின்னுட்டமிட நேரம் இல்லாதவர்கள் சைடுபாரில் உள்ள வாக்களிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்கவும்...


பாகம் 1

26 comments:

Anonymous said...

விவாதம் நல்லா போயிட்டு இருக்கு

சிக்கிரம் அடுத்த பதிவு போடுங்கள்

மங்களூர் சிவா said...

மங்களூரில் நான்கு பேரிடம் கேட்கப்பட்ட கருத்து கணிப்பின்படி பெண்களுக்கு 40 வயதில்தான் அறிவு முதிர்சி மெச்சூரிட்டி ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது எனவே பெண்களின் திருமண வயதை 40 ஆக அறிவிக்க வேண்டும் என உருண்டு புரண்டு கேட்டுக் 'கொல்'கிறேன்

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... இது காமடிப் பதிவா???? நான் நீங்க நெஜமாகவே நிறைய விஷயங்களை அலசப் போறீங்கன்னு நினைச்சேன்

கோவை விஜய் said...

mr.கூடுதுறை.இச்சமயத்திற்கு தேவையான பதிவு.சமுதாயம் சார்ந்த உங்கள் நல் எண்ண பதிவுக்கு நன்றி.
எல்லோர் மத்திலும் இது ஓடிகொண்டே இருக்கிறது.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

கூடுதுறை said...

சிவா அண்ணா கூறிவிட்டார்... இனி தலைப்பை மாற்றிக்கொள்கிறேன்....

எதோ நிறைய பேர் துரத்தும் சத்தம் கேட்கிறேதே...

அனைவரையும் west coast exp. ஏற்றி மங்களூர் அனுப்பிவிடுகிறேன்

வால்பையன் said...

ஓட்டு போட்டாச்சு

வால்பையன்

வால்பையன் said...

//தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் குறைந்த பட்சம் டிகிரி முடித்த பிறகு திருமணம் செய்தால்தான் அவர்களின் பிற்கால தேவைகளை சுயமாக பூர்த்தி செய்துகொள்ள இயலும்.//

டிகிரி படிக்க வேண்டும், ஆனால் பிற்கால தேவைகளை பூர்த்தி செய்ய தன்னம்பிக்கை போதும். பல படிக்காத பெண் மேதைகளை நான் பார்த்திருக்கிறேன்

வால்பையன்

வால்பையன் said...

//இதில் மிகச்சிறிய அளவில் உள்ளவர்களே வளமையான வாழ்க்கை பெறுகின்றனர்.//

நான் மீதி இருக்கும் பெரிய அளவுல மாட்டிகிட்டேன் அண்ணாத்த!

வால்பையன்

வால்பையன் said...

//இப்போது 12 அ 13 வயதுக்கு மேல் குழந்தைகள் பெற்றோர்கள் கைமீறி போய்விடுகின்றனர்...//

எதுக்கப்பா அத்தனை வருஷம், இப்பெல்லாம் அதுக்கு முனாடியே காதலிக்குதுங்க

வால்பையன்

வால்பையன் said...

//அப்படியே பெற்றோர்கள் அடங்கி நடக்கும் டீன் ஏஜ்களை நமது சினிமாக்களும் டீவி சீர்யல்களும் சும்மா விடுவதில்லை....//

இப்பவாச்சும் ரெண்டு பேர்த்தையும் சேர்த்துகிட்டிங்க்களே

வால்பையன்

வால்பையன் said...

//பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவதே காதலிக்கத்தான் என்பதைப்போலவே காட்டுகின்றனர்//

நானும் இத்தனை நாளா அப்படித்தான் நினைச்சிகிட்டு இருந்தேன்
அப்போ அது அதுக்கில்லையா

வால்பையன்

வால்பையன் said...

//கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் வசூலை குறிவைத்துத்தான் சில இயக்குனர்கள் படமே எடுக்கின்றனர்.//

விஜய்யெல்லாம் டாக்டர் பட்டம் வேற எப்படி வாங்குறதாம்

வால்பையன்

வால்பையன் said...

//அதில் சீரியல்கள் அடிக்கும் கொட்டம் உள்ளதே... அதை நாம் எல்லோரும் அனுபவத்துக்கொண்டுதான் உள்ளோம்...//

ஏங்க எல்லாத்தையும் இழுக்கிறிங்க.
நீங்க பார்த்த நாங்களும் பார்ப்போம்னு அர்த்தமா
எங்களுக்கு F-tv பார்க்கவே நேரம் சரியா இருக்கு

வால்பையன்

வால்பையன் said...

//பொதுவாக வாழ்க்கை முறையில் இல்லாத உறவேல்லாம் அதில் வருகிறது.//

எதையும் புதுசா கண்டுபிடிக்க விடமாட்டிங்களே

வால்பையன்

வால்பையன் said...

//இதைப்பற்றி நமது பதிவர்கள் எற்கனெவே அலசி ஆராய்ந்து காயபோட்டு விட்டனர்..//

காஞ்சதா இல்லையா

வால்பையன்

வால்பையன் said...

//நமது தொலைக்காட்சிகளில் சினிமா கிளிப்பிங்கள் அனைத்திலும் சில சுவராஸ்யகாட்சிகள் எனக்கூறி எனப்பாதி படத்தை காண்பித்துவிடுகின்றனர்.//

மீதிப்படம்
சூப்பர் சீன்ஸ்
ஒருபட பாடல்
சூப்பர் க்ளைமாக்ஸ்
சூப்பர் நகைச்சுவை

காத்திருக்கணும் சார் எல்லாம் ஒரே நாளில் கிடைக்காது

வால்பையன்

வால்பையன் said...

//முழுப்படம் பார்த்தாலவது தவறு செய்பவர்கள் கடைசியிலாவது திருந்துவதை காண்பிப்பார்கள்.//

கிளைமாக்ஸ்க்கு முன்னாடி விளம்பரம் போடுவாங்க
அப்பவே சேனல் மாத்திருவோம்ல

வால்பையன்

வால்பையன் said...

//பள்ளியிலும் கல்லூரியிலும் ஏட்டளவில் வேண்டுமானல் செல்போன் கொண்டுவரக்கூடாது என இருக்கலாம். அவை இல்லாமல் எத்தனை பேர் உள்ளனர்? //

முதலில் அவனை நிறுத்த சொல்
நானும் நிறுத்துகிறேன்

அட வாத்தியாருங்க செல்போன் கொண்டுவர்ரத சொன்னேம்பா

வால்பையன்

வால்பையன் said...

//பேசக்கூட வேண்டியதில்லை... sms என்று ஒன்று உள்ளதே அதே போதுமான அளவு கெடுத்துக்கொண்டுள்ளது....//

இன்னும் கொஞ்ச நாள்ல டெலிபதி வரப்போவுது. அப்போ இது கூட தேவைப்படாது

வால்பையன்

வால்பையன் said...

//கணினி நம்மைப்போன்ற பதிவர்களுக்கு கூட தெரியாத பல வெப்சைட் முகவரிகள் அவர்களிடம்தான் உள்ளன.//

கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன், இங்கே எனக்கு போர் அடிக்குது

வால்பையன்

வால்பையன் said...

//சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்காலத்திய ஊடகங்கள் இளைஞர், இளைஞிகளை தவறான பாதைகளுக்கு மிக வேகமாக இழுத்து செல்கின்றன....//

அப்போ அவங்க இழுத்துகிட்டு ஓடினாங்க
இப்போ இது இழுக்குதா

வால்பையன்

வால்பையன் said...

//இதில் எல்லாம் தப்பிப்பிழைத்து நன்றாக படித்து நல்ல வேலையோ சுயதொழிலையோ மிக நன்றாக செய்துவரும் இளைஞ, இளைஞிகளும் உள்ளனர்.//

உங்களையும், என்னையும் மாதிரி

வால்பையன்

வால்பையன் said...

//ஆனால் நம் கவலைகள் எல்லாம் 18 வயதில் வழிதவறிபோகும் இளைஞர்கள், இளைஞிகள் பற்றித்தான்.............//

கையில ஒரு வரைப்படம் கொடுத்துருவோம் வழி தவறாது.

வால்பையன்

வால்பையன் said...

//இந்த விவாதம் மேலும் தொடர்கிறது இது சம்பந்தமாக ஆலோசனை சொல்பவர்கள் தயவுசெய்து பின்னுடமிடவும்.//

கொடுத்திருக்கும் ஆலோசனைகள் போதுமா!
இன்னும் கொஞ்சம் வேணுமா

வால்பையன்

கயல்விழி said...

இது சீரியசா இல்லை காமெடியா?

கிரி said...

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

திரைப்படமும் தொலைக்காட்சியும் பெருமளவில் குழந்தைகளை இளைஞ இளைஞிகளை கெடுக்கிறது. ஆனால் இது தவிர்க்க முடியாத ஒன்று :-(

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts