Thursday, August 28, 2008

நடுக்கடலில் 6 கப்பல்கள் கடத்தல்- 10 இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கதி?

ஏமன்: அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த 6 சரக்குக் கப்பல்களை சோமாலியாவைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.

இதில் ஒரு கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 10 ஊழியர்கள் உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்தக் கடத்தல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏமனுக்கும் சோமாலியாவுக்கும் இடையே அரபிக் கடலில் உள்ள ஏமன் வளைகுடாவில் இந்தக் கடத்தல்கள் நடந்தன. இந்தக் கப்பல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களும் மாலுமிகளும் உள்ளனர்.

முதலில் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு சரக்குக் கப்பலைக் கடத்திய கொள்ளையர்கள், அடுத்தடுத்து பனாமா, ஜப்பான், மலேசியா, ஜெர்மன் உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த கப்பல்களைக் கடத்தினர்.

இந்தியப் பெருங்கடலையும் மத்தியத் தரைக் கடலையும் ( Mediterranean sea) இணைக்கும் இந்த வளைகுடா பகுதி வழியாகத் தான் அரேபிய நாடுகள்-ஐரோப்பா இடையே கப்பல்கள் இயங்குகி்ன்றன.

இதில் பெரும்பாலானவை கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல்களே.

சேமாலியாவில் நடந்து வரும் இனப் போரால் அந்தப் பகுதியே பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. இந் நிலையில் தான் இந்தக் கடத்தல்கள் நடந்துள்ளன.

கடத்தப்பட்டுள்ள கப்பல்களில் ஒ ன்றான எம்.சி.விக்டோரியாவில் இந்தியத் தொழிலாளர்கள் 10 பேர் பணியாற்றி வருகின்றனர்.

ராக்கெட் லாஞ்சர்களுடன் அதிவேகப் படகுகளில் வந்து கப்பல்களை கொள்ளையர்கள் கடத்துவதும், பின்னர் பெரும் அளவில் பணம்-பொருட்களை வாங்கிக் கொண்டு விடுவிப்பதும் இந்தப் பகுதியில் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு பயணிகள் கப்பல்களும் தப்புவதில்லை.

ஆனால், ஒரே நேரத்தில் 6 கப்பல்களை இவர்கள் கடத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் ஒரு ஜப்பானிய கப்பலை கடத்தும் முயற்சி வெல்லவில்லை. ராக்கெட் லாஞ்சர்களால் தாக்கப்பட்டாலும் கூட அந்தக் கப்பல் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிவிட்டது.

கடத்தப்பட்டுள்ள மலேசிய கப்பல் பாமாயில் ஏற்றிச் சென்றதாகும். ஈரான் கப்பல் கச்சா எண்ணெயும், ஜப்பானிய கப்பல் ரசாயனப் பொருட்களையும் ஜெர்மன் கப்பல் உணவு உள்ளிட்ட சரக்குகளுடனும் சென்று கொண்டிருந்தன. இவை தவிர வேறு இரு கப்பல்களும் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றவை. இந்தக் கப்பல்களில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகளும், ஊழியர்களும் உள்ளனர்.

இதற்கிடையே மலேசிய கப்பலில் கொள்ளையர்கள் ஏறி தாக்கியபோது அதிலிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஊழியர் கொல்லப்பட்டுள்ளார் என மலேசியா கூறியுள்ளார்.

சோமாலியாவில் இப்போது அரசாங்கம் என்று ஏதும் இல்லை. கடற்படையும் இல்லை. இதனால் கடல் கொள்ளையர்களை ஒடுக்க மற்ற நாட்டு கப்பல் படைகள் தாக்குதல் நடத்த, கடந்த மாதம் தான் ஐ.நா. சபை அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி. தட்ஸ்தமிழ்

6 comments:

Anonymous said...

அட இப்ப கப்பலையே கடத்த ஆரம்பித்துவிட்டார்களா?

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி பிரபாகரன்..

அதுதானே...

விரைவில் கடல்புறாவுடன் இளையபல்லவரை அனுப்பிவைக்கலாமா?

வால்பையன் said...

//இதில் பெரும்பாலானவை கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல்களே.//

அப்போ டவுசர் கிழிய போறது உறுதி.
ஆனா இன்னைக்கு அஞ்சு டாலர் கீழே அடிச்சிட்டான்.
நாள்ல வேலை நான் எதுவும் வாங்கல!
அமெரிக்காவின் ஜி.டி.பி உயர்ந்துள்ளதால் இன்று கீழே வருமென்று உறுதியாக நம்பினேன்.

மேட்டருக்கு வருவோம்
சோமாலியா தீவிரவாதிகள் பெரிதாக கொள்கை எதுவும் இல்லாதவர்கள், பணத்தேவைக்காக கடத்தியிருப்பார்கள், அனைவரும் கண்டிப்பாக உயிருடன் திரும்புவார்கள் என்று இங்கேயும் நம்புகிறேன்

Anonymous said...

//சோமாலியா தீவிரவாதிகள் பெரிதாக கொள்கை எதுவும் இல்லாதவர்கள், பணத்தேவைக்காக கடத்தியிருப்பார்கள், அனைவரும் கண்டிப்பாக உயிருடன் திரும்புவார்கள் என்று இங்கேயும் நம்புகிறேன்///

இவரும் அதில் ஒருத்தரோ!!!!!!!!!
ஆஹா........

கூடுதுறை said...

//இவரும் அதில் ஒருத்தரோ!!!!!!!!!
ஆஹா........//

இது இன்னும் சூப்பர்...

Anonymous said...

சுந்தர், உங்களை ஒரு தொடர் ஓட்ட பதிவுக்கு (விளையாட்டுக்கு) அழைப்பு விடுத்துள்ளேன். தயவு செய்து கலந்து கொள்ளவும். விவரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்.
மோ. மோகன் குமார்

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts