Monday, August 4, 2008

பதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்...?

பதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்...?
கோலிவுட்டையும், டோலிவுட்டையும் (அதாங்க தெலுங்கு சினிமா... அவங்க மட்டும் சளைச்சவங்களா என்ன?) ஒரு சேரக் கலக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கிசுகிசு... பாவனாவின் ரகசியக் கல்யாணம்தான்.

அடடா... இப்படி அதிர்ச்சியாவீங்கன்னு எதிர்பார்க்கல... இருந்தாலும் கிசுகிசுதானே. தைரியமா படிங்க!

கோடம்பாக்கத்துக்கு தற்காலிகமாக 'பை' சொல்லிவிட்டு, ஹைதராபாத் பக்கம் போன பாவனா, ஒண்டரி என்றொரு படம் நடித்தார். ஓஹோவென்று போகாவிட்டாலும், அம்மணிக்கு தெலுங்கில் நல்ல பெயரையும் அவருக்கென்று ஒரு இடத்தையும் பெற்றுத் தந்தது அந்தப் படம்.

இப்போது ஹீரோ எனும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ஹீரோவாக நடிப்பவர் இளம் நாயகன் நிதின். படப்பிடிப்பில் சினிமாவுக்காக இருவரும் காட்டிய நெருக்கம், நிஜத்திலும் தொடர்ந்ததாம்.

ரீல் ஹீரோவையே ரியல் ஹீரோவாக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்ட பாவனா, கோலிவுட்டில் பலர் முயன்றும் திறக்க முடியாத தன் மனதை நிதினுக்குத் திறந்துவிட்டுவிட்டாராம்.

படப்பிடிப்புத் தவிர்த்த பிற நேரங்களில் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என தெலுங்குப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

இப்போது இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் சில தெலுங்கு சினிமா இணைய தளங்களும், பத்திரிகைகளும் எழுதியுள்ளன.

என்னதான் நடக்குது?..

பாவனாவிடமே கேட்டுவிட்டோம்... அவரோ இன்னும் சித்திரம் பேசுதடி சித்திரமாகச் சிரிக்கிறார் கலகலவென்று.

என்னடா இன்னும் நம்மைப் பத்தி பெருசா எந்த வம்புச் செய்தியும் வரலியேன்னு பார்த்தேன். தெலுங்குப் பத்திரிகைகள் அதையும் குறைவில்லாம செய்திட்டாங்க. கவலையேபடாதீங்க... யாருக்கும் சொல்லாம ரகசியமா திருமணம் செய்துக்க மாட்டேன். இன்னும் சினிமாவில் சாதிக்க எவ்வளவோ இருக்கு... நானும் ஒருவிதத்துல பத்திரிகையாளரா இருந்து வந்தவதான். அதனால இந்த கிசுகிசுக்களைப் பார்த்து சிரிச்சிக்கிட்டேன் என்றார் பிடிகொடுக்காமல்.

சினிமா கிசிகிசுக்கள் போலவே, அவற்றுக்கான பதில்களும் மாறுவதே இல்லை!
நன்றி : தட்ஸ்தமிழ்

11 comments:

Anonymous said...

பாவனா பாவம்ங்க... அவர் சுட்டிப்பெண் என்றாலும் நிதினுடன் காதல் என்பதெல்லாம் ஒரு வதந்தி தாங்க

ராஜ நடராஜன் said...

தம்பி......எங்கே இருக்கீங்க???? செய்தி கிட்டியதா?

கூடுதுறை said...

வதந்தி என்றால் நன்றி... சினிமா நிருபரே ஆனால் வதந்தியை பரவ விட்டது யார்?

கூடுதுறை said...

நடராஜன் அவர்களே யாருக்கு செய்தி கிட்டவேண்டும்?

Anonymous said...

நிதினோட வீட்டுக்கு ஆட்டோ அனுப்பலாமா???? ஹிஹி

கூடுதுறை said...

hisbash உத்தரவிட்டால் ஆட்டோ போகுமா?

ராஜ நடராஜன் said...

என்னங்க கூடுதுறையாரே!இப்படி கேட்டுட்டீங்க?தம்பியண்ணன் பதிவாளர் காதில் விழப்போகுது! வதந்தியில் மயங்குகிறாரோ இல்லையோ தம்பி யார் எனக் கேட்டதில் நிச்சயம் தலைசுற்றல்தான்:(

கூடுதுறை said...

கொஞ்சம் அவருடைய லிங்க் கொடுத்து விபரமாகத்தான் சொல்லுங்கள் நடராஜன் சார்... நம் வாசகர் தெரிந்து கொள்ளட்டுமே...

thamizhparavai said...

//என்னடா இன்னும் நம்மைப் பத்தி பெருசா எந்த வம்புச் செய்தியும் வரலியேன்னு பார்த்தேன். தெலுங்குப் பத்திரிகைகள் அதையும் குறைவில்லாம செய்திட்டாங்க. கவலையேபடாதீங்க... யாருக்கும் சொல்லாம ரகசியமா திருமணம் செய்துக்க மாட்டேன். இன்னும் சினிமாவில் சாதிக்க எவ்வளவோ இருக்கு... நானும் ஒருவிதத்துல பத்திரிகையாளரா இருந்து வந்தவதான்//அப்பாடா... இப்பொதான் உயிரே வந்தது...
சரி சரி.. அதுக்காக நிதின் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பாம விட்டுராதீக....

Anonymous said...

/////hisbash உத்தரவிட்டால் ஆட்டோ போகுமா?/////

சும்மா ஆபீசில இருக்கறவன பதிவுபோட்டு உசுப்பேத்துற டேலண்ட்ல பதிவர்களிருக்கும்போது ஆட்டோக்காரங்கள பொருளெடுக்க வைக்கறதென்ன பெரிசா? ஹிஹி

சுபாஷ்
hisubash.wordpress.com

Unknown said...

அருமை
இன்னும் நிறைய எதிர்பார்த்து
http://loosupaya.blogspot.com

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews