Thursday, August 7, 2008

லக்கிலுக்கிற்கு போட்டியாக எனது கதை....

லக்கிலுக்கிற்கு போட்டியாக கதை....


பதிவுலக சிங்கம், எழுத்துலக சக்கரவர்த்தி, தமிழகத்தின் தளபதிக்கே தளபதி, பல கோடி வாசகர்களின் சிம்ம சொப்பனம், நகைசுவை சாம்ராட் எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் லக்கிலுக் (நன்றி: வால்பையன்) அவர்கள் இந்தப்பதிவில் ஒரு புனைவுக்கதை எழுதியுள்ளார். அதைப்பார்த்தவுடன் எனக்கும் கதை எழுதும் ஆசை வந்துவிட்டது...

அது இப்போது உடனே வந்த ஆசையல்ல.. நான் பள்ளியில் படிக்கும்போதே வந்த ஆசை. அப்போது ரப் நோட்டில் மர்மக்கதையேல்லாம் எழுதியுள்ளேன்...

அவன் அந்த மர்மகுகையில் இருந்து தனது பாஸுக்கு டெலிபோன் செய்தான்! (இது சக மாணவன் கேட்டகேள்வி ஏண்டா அதுவே மர்மகுகை அங்கே எப்படி ஒயர் இழுத்து டெலிபோன் கனைக்சன் கொடுத்தார்கள்?)

இப்படியேல்லாம் எழுதி 4 அல்லது 5 கதைகள் எழுதிவிட்டேன்... உடனே எனக்கு ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், சுஜாதா ஆகிவிட்டதாக ஒரு கர்வமே வந்துவிட்டது.

இதில் உடன் பயிலும் மாணவர்கள் வேறு புதியதாக வரும் ஆசிரியர்களிடம் எல்லாம் இவன் நன்றாக கதை எழுதவான் சார் என்று கூறி என்னை உசுப்பேற்றி வேறு விடுவார்கள்.

அந்த நோட்புக்கை அனைத்து மாணவர்களூம் போட்டி போட்டு வாங்கிபடித்து விட்டு (மனதுக்குள் நன்றாக திட்டிவிட்டு) நன்றாக இருக்கு இன்னும் நிறைய எழுது கூறினார்கள்.

அடுத்து எனது கதையை வகுப்பினர் மட்டும் படித்தால் போதுமா? பத்திரிக்கைக்கு
அனுப்பவேண்டும் அனைவரும் படிக்கவேண்டும் என விரும்பினேன். (ரொம்பத்தான் ஆசை)

ஆனால் எப்படி அனுப்பவது என்ற விபரம் எதுவும் தெரியாது (நோட்புக்கையே அனுப்புவதா?) எனது சக மாணவன் ஒருவன் எனக்கு எல்லாம் அந்த விவரம்தெரியும் என்னிடம் கொடு நான் அனுப்பிவைக்கிறேன் என்று கூறினான். ஆனால் தனது பெயரில்தான் அனுப்புவேன் பரிசு சன்மானம் எதாவது வந்தால் உனக்கு கொடுத்துவிடுகிறேன் என்றான்.

ஆகா இது சரியான ஆப்பாக உள்ளதே என்று உஷாரனேன். முடியாது நானே அனுப்பிக்கொள்கிறேன் என்று திருப்பிவாங்கிக்கொண்டேன். அப்போது எனக்கு பரிச்சியமான (குமுதம் கூட படிப்பேன் ஆனால் அதிகம் ஆசைப்படக்கூடாது என்று)சிறுவர் புத்தகமான ரத்னமாலா, அம்புலிமாமா, மற்றும் பெயர் மறந்து போன மூன்று பத்திரிக்கைகளுக்கு போஸ்டுகார்டில் கதை எழுதியுள்ளேன் அதை எப்படி அனுப்புவது நோட்புக்கோடு அப்படியே அனுப்புவதா? இல்லை பேப்பரில் அனுப்புவதா? இல்லை தொடர்கதையாக அனுப்புவதா எனக்கேட்டு எழுதிப்போட்டேன். அதுவும் எனது பள்ளிமுகவரி கொடுத்து (வீட்டுமுகவரி கொடுத்தால் முதுகில் டின் கட்டி வாசித்திவுடுவார்கள் எனபயம்)

அடுத்து கிளைமாக்ஸ்

அப்போது கணிதபாடம் கண்டிப்பான வாத்தியார் பாடம் நடத்திகொண்டிருந்தார். அப்போது புயல் போல் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்தார். நான் எதோ எழுதுக்கொண்டிருந்தேன் அதனால் கவனிக்கவில்லை அனைத்து மாணவர்களும் எழுந்து நின்ற அரவம் கேட்டு தலை நிமிர்ந்தேன். அங்கே தலைமையாசிரியர் கண்ணில் நெருப்பலையோடு அங்கே நின்று கொண்டிருந்தார்.

உடன் அவர் தனது சிம்மக்குரலில் இங்கே (எனது பெயரைக்குறிப்பிட்டு) யார் எனக் கர்ஜித்தார். மற்ற மாணவர்கள் அமர்ந்துவிட நான் மட்டும் பலியாடு போல் நின்று கொண்டிருந்தேன். நீதானா அது என கன்பர்ம் செய்து கொண்டு காலாண்டு தேர்வின்மதிப்பேண்கள் என்னவேன்று கேட்டார்.(நான் என்னத்தெ கிழிப்பேன்) மொத்தமே இரண்டில் தான் பாஸ்மார்க் (அதுவும் வரலாறு புவியியல் மற்றும் தமிழ் அதில்தானே கதைவிட்டு எழுத முடியும்)

இத்தனை பாடத்தில் பெயிலாகிவிட்டு உனக்கு கதை எழுதுவதேல்லாம் தேவையா? என்று வாய்க்கு வந்ததயேல்லாம் கூறி திட்டத்தொடங்கினார். யார் வைத்த வத்தி என்று புரியாமல் நின்று கொண்டிருந்த எனக்கு என்ன செய்வதேன்றே புரியவில்லை. இனி இந்த மாதிரி வேலையெல்லாம் வைத்துக்கொண்டால் TC கொடுத்துவிடுவேன் மிரட்டல் விடுத்து இந்தா இதை வைத்துக்கொள் என்று ஒருகடிதத்தை எடுத்துக்கொடுத்தார்.

ஆகா கதை எழுத எனக்கு வாய்ப்பு வந்துவிட்டது பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து கடிதம் வந்து விட்டது என்று எகிறிக்குதித்து சென்று வாங்கினேன்.

த.ஆசிரியரே அனைத்து அர்ச்சனைகளையும் செய்துவிட்டதால் கணித ஆசிரியரின் நீண்டகம்பில் இருந்து தப்பினேன் என நினைக்கிறேன். இல்லை அவர் நல்லமூடில் இருந்தாரோ என்னோவோ அன்று அடி விழவில்லை. அப்படியே அவர் அடிக்க கம்பினை ஓங்கினோலோ எனது ஆயுதத்தை எடுத்திவிட்டிவிடுவேன். அதனால் ஒன்றிரண்டி அடியோடு நின்றுவிடும (எனது ஆயுதம் = வேறன்ன ஓவேன அழுகைதான்!)

அவர் தொடர்ந்து பாடம் நடத்த எனது நோட்புக்கில் மறைத்து வைத்துக் கொண்டு அந்தக்கடிதத்தை எடுத்து படித்தேன்...

ஓ..... அந்த சோகத்தை எப்படி சொல்வது அந்த தற்போது பெயர் மறந்து போன பத்திர்க்கைக்கு அனுப்பிய போஸ்ட்கார்டு முகவரி தவறு என திரும்பிவந்திருந்தது.

மற்ற இரண்டு பத்திரிக்கையிலிருந்து பதிலெதுவும் வரவேயில்லை. இப்படியாக எனது கதையெழுதும் படலம் முடிவுக்குவந்தது. ஒரு சுஜாதா,ராஜேஸ்குமார் மற்றும் ராஜேந்திரக்குமார் உருவாக விடமால் அந்த தலைமயாசிரியர் தடுத்துவிட்டார்.

ஆனால் இப்போது பதிவில் கதை எழுதலாமா எனத்தெரியாமல் இருந்தேன். தற்போது லக்கிலுக் எனக்குள் இருக்கும் கதைஎழுதும் சிங்கத்தை தட்டி அல்லது எட்டி உதைத்து எழுப்பிவிட்டு விட்டார்.

இனி எனது பதிவில் கதையெழுதப்போகிறேன். அதை நீங்கள் படித்தாகவேண்டியது என்பது உங்கள் தலைவிதி. என்ன இந்தப்பதிவைக்கூட கயல்விழி அக்கா இது என்ன நகைச்சுவை பதிவா எனக்கேட்காமல் இருந்தால் சரி

டிஸ்கி: இது கதையேல்ல நிஜமே... இனி எழுதப்போவதுதான் கதைகள் அதுவும்
கதைகள் எனும் லேபிலோடு

27 comments:

sudar said...

WELCOME TO STORY WORLD

Anonymous said...

//இனி எனது பதிவில் கதையெழுதப்போகிறேன்.//

நா இதுதா கதனு நெனச்சி வாசிச்சேன். வித்தியாசமா போகுதே என்றுகூட யோசிச்சன்.
ம்ம்ம்ம்ம் ஆனா இனித்தான் ரவுண்டு கட்டப்போறீங்களா? வாழ்த்துக்கள்.

//அதை நீங்கள் படித்தாகவேண்டியது என்பது உங்கள் தலைவிதி.//

ஆறுதலுமா?? ம்ம்
சுபாஷ்

கூடுதுறை said...

நன்றி சுடர் ....

கூடுதுறை said...

ஹிஸ்பாஸ் இப்படித்தான் நினைத்துக்கொள்வீர்கள் என டிஸ்கி போட்டுள்ளேன்...

வருகைக்கு நன்றி...

ஆறுதல் இலவசம்

கல்கிதாசன் said...

மர்ம, திகில், பயங்கர கதையா எழுதுங்க கூடுதுரையாரே,

கூடுதுறை said...

நன்றி... கல்கி அண்ணா....

இப்படி உசுப்பேத்தி விடுறிங்க... ரணகளமாக ஆகபோறிங்க பார்த்துகுங்க...

விஜய் ஆனந்த் said...

// இனி எனது பதிவில் கதையெழுதப்போகிறேன் //

வாங்க வாங்க!!!! நல்லா எழுதுங்க..!!!!

// அதை நீங்கள் படித்தாகவேண்டியது என்பது உங்கள் தலைவிதி. //

எவ்வளவோ படிக்கிறோம்...இதப்படிக்க மாட்டோமா!!!!

கூடுதுறை said...

//எவ்வளவோ படிக்கிறோம்...இதப்படிக்க மாட்டோமா!!!!//

விஜய் ஆன்ந்த் நீங்க ரொம்பநல்ல்ல்ல்ல்ல்ல்வர்ங்கோ.....

PRABHAKARAN said...

super story...

keep it up

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி பிரபாகரன்

சரவணகுமரன் said...

//இது சக மாணவன் கேட்டகேள்வி ஏண்டா அதுவே மர்மகுகை அங்கே எப்படி ஒயர் இழுத்து டெலிபோன் கனைக்சன் கொடுத்தார்கள்?)

செம காமெடியா இருக்கே... நீங்க பேசமா கிரைம் கதையே எழுதுங்க... அதுதான் பயங்கர காமெடியா இருக்கும் போல... :-)

கூடுதுறை said...

சரவணகுமரன்

கவலையேப்படவேண்டாம்...

மர்மக்கதை நகைச்சுவையாகவும், நகைச்சுவை கதை மர்மமாக திகிலுட்டுவதாகத்தான் இருக்கும்

Anonymous said...

என்ன கொடுமை சார் இது?

Anonymous said...

//மர்மக்கதை நகைச்சுவையாகவும், நகைச்சுவை கதை மர்மமாக திகிலுட்டுவதாகத்தான் இருக்கும்//

பாத்துங்க, ஆங்கில டப்பிங் படம் மாதிரி இல்லாம பாத்துக்கோங்க. ( இங்கதா படு சீரியசான பேய்ப்படம் நம்ம வடிவேலு காமடியைறே துக்கி சாப்புடும். ஹாஹா )உங்கள உசுப்பேத்தி கடசில இப்படியாக்கிடுவாங்கிய, உசுப்பேத்தறவங்ககிட்ட உஷார்!!!!

வால்பையன் said...

உங்களுக்கு புனைவு நன்றாக வருகிறது.
அப்புறம் பள்ளிகூடத்துகேல்லாம் போனிங்கேன்னு சொன்ன நாங்க நம்பணுமாக்கும்

வால்பையன்

கூடுதுறை said...

அட நிஜமாதான் 3வதுன்னாலும் பள்ளிக்குபோய்தானே ஆகணும்...

ஜோசப் பால்ராஜ் said...

//அவன் அந்த மர்மகுகையில் இருந்து தனது பாஸுக்கு டெலிபோன் செய்தான்!//

இந்த கதையவே எழுதுங்க முதல்ல, வேணும்ணா நவீன காலத்துக்கு ஏற்ப அந்த மர்ம குகையிலிருந்து செல்போனில் பேசினான் என்று ஆரம்பிக்கலாம்.

அண்ணே, நான் கூட ஒரு நாவல் எழுதுனேன், பத்தாவது பரிட்சை முடிஞ்ச விடுமுறையில எழுதுனேன் . உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனும் கொள்கைப்படி சிறுகதையெல்லாம் முயற்சிக்காம நேரடியா நாவல் எழுதுனேன். கவலைப்படாதீங்க. கட்டாயம் நான் இப்ப திரும்ப கதை எழுதுறதா இல்ல.

கூடுதுறை said...

நன்றி ஜோசப் பால்ராஜ் அண்ணா...

அப்போதான் வெளியிட வழி இல்லை இப்போதான் பதிவு இருக்கே...எழுத வேண்டியதானே...

படிக்கும் அவனவன் டவுசரை கழண்டு ஓட வைக்கவேண்டியதுதானே....

முயற்சி செய்யுங்கள்

வால்பையன் said...

//அட நிஜமாதான் 3வதுன்னாலும் பள்ளிக்குபோய்தானே ஆகணும்...//

அட நீங்க அவ்ளோ படிச்சிருக்கிங்களா

வால்பையன்

கூடுதுறை said...

ஆமாம் 3ம் கிளாஸ் பாஸ்....

நான் கூட கேள்விப்பட்டேன்... கருங்கல்பாளையம் டீச்சர் மேல் கல்லால் அடித்துவிட்டு ஓடிய 2ம் வகுப்பு மாணவன் நீங்கள்தானா?...

நான் அப்போதே பேப்பரில் படித்து இருக்கிறேன்.....

வால்பையன் said...

//கருங்கல்பாளையம் டீச்சர் மேல் கல்லால் அடித்துவிட்டு ஓடிய 2ம் வகுப்பு மாணவன் நீங்கள்தானா?... //

அவ்ளோ பெரிய கல் நெஞ்சக்காரன் நானல்ல.


கல் எல்லாம் வாத்தியாருக்கு தான்
டீச்சருக்கு லவ் லெட்டர் மட்டும் தான்

வால்பையன்

கூடுதுறை said...

அப்போ நீங்க இல்லையா அது... ஒரு வேளை பக்கத்தில் கார்த்திக் ஆக இருக்கும்....

அப்புறம் என்ன ஆச்சு.... TC குளோசா?

வால்பையன் said...

என் முதலாளிய எங்க இழுக்குறிங்க
அப்புறம் எனக்கு வேலை க்ளோஸ் ஆகிரும்

வால்பையன்

கூடுதுறை said...

என்னது கார்த்திக்தான் உங்க பாஸ்ஸா?

சாரி எனக்கு தெரியாது...

இப்போ சொல்றேன்... கார்த்திக் ஒரு நல்லவர், வல்லவர், நாலும் (இல்ல) நாற்பதும் தெரிந்தவர்....

வால்பையன் said...

இன்னும் இன்னும் நல்லா

வால்பையன்

Anonymous said...

கூடுதுறை சுந்தர், நீங்கள் கதை எழுதி அதை உங்கள் அப்போதைய தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்கவும்.
மோ. மோகன் குமார்.

கூடுதுறை said...

மோகன் தங்களின் யோசனைக்கு நன்றி,

ஆனால் அவர் தற்போது இல்லை மறைந்துவிட்டார்...

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews