Saturday, August 9, 2008

கர்நாடகத்தால் இதை மட்டும் தடுக்க முடியாது

கர்நாடகம் மற்றும் அதன் அரசியல் வாதிகள் எதை வேண்டுமானல் தடுக்கலாம். அனால்   இதை மட்டும் தடுக்க முடியாது
கேரளாவின் வயநாடு பகுதியில் கன மழை பெய்து வருவதால் கர்நாடகத்தின் கபிணி அணை நிரம்பி விட்டது. இதையடுத்து அணைக்கு வரும் 56 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்படுகிறது.

தென் மேற்கு பருவ மழை சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேகம் பிடித்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரளாவில் பருவ மழை கடந்த 10 நாட்ளாக விளாசிக் கொண்டிருக்கிறது.

கேரளாவின் வயநாடு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் கபிணி அணை நிரம்பி விட்டது. அணைக்கு தற்போது விநாடிக்கு 56 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

இந்த உபரி நீர் அப்படியே தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திருப்பி விடப்படுகிறது. இந்த நீர் இன்னும் 2 நாட்களுக்குள் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் எனத் தெரிகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 62.24 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 17 ஆயிரத்து 968 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

கர்நாடகத்தின் கே.ஆர்.எஸ். அணையும், ஹேமாவதி அணையும் வேகமாக நிரம்பி வருவதால்அங்கிருந்தும் மேட்டூருக்கு நிறைய நீர் திறந்து விடப்படும். எனவே விரைவில் மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

22 comments:

Anonymous said...

கர்நாடகத்திற்கு இப்படி ஒரு ஆப்பா?

கூடுதுறை said...

ஆப்புதான் இயற்கை வைத்த ஆப்பு...

அனானிக்கு நன்றி

ஜோசப் பால்ராஜ் said...

தஞ்சை மாவட்டத்து உழவனின் மகனுக்கு ( நான் தாங்க) இன்பத்தேன் போல் இனிக்கும் செய்தி இது.

எல்லாத்துக்கும் மேல இயற்கைனு ஒன்னு இருக்குல்ல. வா(மு)ட்டாள், எடியூரப்பா எல்லாரும் இப்ப என்ன செய்ய முடியும்?

குரங்கு said...

உபரி நீரினால் தமிழகத்திக்கு நன்மையா, தீமையா?

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி பால்ராஜ்...

கண்டிப்பாக ஒண்ணூம் செய்யமுடியாது....

Anonymous said...

போங்க பொழச்சு போங்க

Anonymous said...

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி... கு.ரங்கு அவர்களே (பேரை மாத்துங்க கூப்பிட முடியல)

அந்த உபரி நீர்தான் தமிழகத்திற்கு உயிர் நீராக உள்ளது...

இல்லையேல் அவ்ளவ்தான்....

குரங்கு said...

====
கூடுதுறை said...
வருகைக்கு நன்றி... கு.ரங்கு அவர்களே (பேரை மாத்துங்க கூப்பிட முடியல)
====

எப்படிங்க மாத்த முடியும்? இதாங்க என்னேட பேரு. :)

கூடுதுறை said...

வாங்க வா(மு)ட்டாள் நாகராஜ்...

உங்க மக்கள் உங்களுக்கு கொடுத்த அடி போததா?

ராஜ நடராஜன் said...

கூடுதுறையாருக்கும் ஏனைய பதிவர்களுக்கும் வணக்கத்துடன் சொல்லிக்கொள்வது.தமிழ்நாட்டுக்கும்,கர்நாடகாவுக்கும் பருவமழைக்காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஒன்றும் கிடையாது.எடியூரப்பா போன்றோர்களும் மழைத்தண்ணீரை அப்படியே அணைகட்டிவிடவேண்டுமென்றும் நினைப்பதில்லை.இந்த வரப்புத்தகராறு பருவகாலம் தவிர்த்த காவிரிஆற்றின் வெள்ளோட்டமே.எனவே நமது பார்வை ஏனைய மாதத்துக்கான நீரை பங்கீட்டுக்கொள்வதில் நட்புறவுடனான கொள்கையாக இருக்கவேண்டும்.உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காத கர்நாடகத்தின் போக்கினை மாற்றும் முயற்சியாக மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதிலும் நமது பார்வைகளை செயல்படுத்தவேண்டும்.நன்றி.

குரங்கு said...

====
ராஜ நடராஜன் said...
கூடுதுறையாருக்கும் ஏனைய பதிவர்களுக்கும் வணக்கத்துடன் சொல்லிக்கொள்வது.தமிழ்நாட்டுக்கும்,கர்நாடகாவுக்கும் பருவமழைக்காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஒன்றும் கிடையாது.எடியூரப்பா போன்றோர்களும் மழைத்தண்ணீரை அப்படியே அணைகட்டிவிடவேண்டுமென்றும் நினைப்பதில்லை.இந்த வரப்புத்தகராறு பருவகாலம் தவிர்த்த காவிரிஆற்றின் வெள்ளோட்டமே.எனவே நமது பார்வை ஏனைய மாதத்துக்கான நீரை பங்கீட்டுக்கொள்வதில் நட்புறவுடனான கொள்கையாக இருக்கவேண்டும்.உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காத கர்நாடகத்தின் போக்கினை மாற்றும் முயற்சியாக மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதிலும் நமது பார்வைகளை செயல்படுத்தவேண்டும்.நன்றி.
====

சரியாக சொல்லியுள்ளீர்கள் நடராஜன்

கூடுதுறை said...

ராஜ நடராஜன் அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி. அதற்கு சில விளக்கம் இங்கே...

//மழைத்தண்ணீரை அப்படியே அணைகட்டிவிடவேண்டுமென்றும் நினைப்பதில்லை//

அப்படியில்லை தமிழகத்தின் எதிர்ப்பு மற்றும் வழக்குகள் இருப்பதால் மேற்கொண்டு அணைகள் கட்டாமல் உள்ளனர்.

//பருவமழைக்காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஒன்றும் கிடையாது//

பருவகாலத்தில் மழை இல்லாவிட்டால் தான் பிரச்னையே... நல்ல மழை இருந்துவிட்டால் யார் தடுப்பார் காவேரி அன்னையை...

//உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காத கர்நாடகத்தின் போக்கினை மாற்றும் முயற்சியாக மத்திய அரசு செயல்படவேண்டும்//

இதற்குத்தான் ஒரு சரியான பாதையை சுப்ரீம் கோர்ட்டு வகுக்கவேண்டும்... தனிமனிதன் சுப்ரிம்கோர்டை மதிக்காவிட்டால் கோர்ட் சும்மா விட்டுவிடுமா?

சூப்ரிம் கோர்ட் தீர்ப்பை மதிக்காத மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய சுப்ரிம் கோர்ட் பரிந்துரைக்கவேண்டும்.

அப்படி செய்தால் ஆட்சியாளர்கள் விழுந்தடித்துக்கொண்டு கோர்ட் உத்திரவை அமல் செய்வார்கள்...

கிரி said...

அவர்களுடைய உபரி நீரை நாம் (தேவை இல்லை என்று கூறினாலும்) வாங்க வேண்டும் ஆனால் நம் தேவைக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய நீரை கொடுக்க மாட்டார்கள்.. :-(


நேற்று கூட கன்னட மொழியை செம்மொழி ஆக்காமல் தமிழ் நாடு தடுக்க முயற்சி செய்வதாக கூறி கன்னட வெறியர்கள் போராட்டம் நடத்தினர். நாம் எதுக்கு தடுக்க போகிறோம் என்று எனக்கு புரியவில்லை.

அதுவும் இல்லாமல் செம்மொழி ஆக்கி என்ன செய்ய போறாகன்னும் புரியல..நம்ம மொழி மட்டும் செம்மொழி ஆன பிறகு எல்லோரும் சுத்த தமிழா பேச ஆரம்பித்துட்டங்களா ..அட போங்கய்யா! எதுக்கு எடுத்தாலும் ஒரு போராட்டம்...

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி கிரி....

அடுத்து கன்னடியர்களின் அடுத்த போராட்டம் கீழே...

வடநாட்டின் ரயில் வண்டிகள் பெங்களூர் வழியாக தமிழகம் செல்லவிடமாட்டோம்...

Sanjai Gandhi said...

அண்ணே கர்நாடகம் மட்டுமல்ல.. தமிழகமே நினைத்தாலும் தடுக்க முடியாது. அணைகளை திறக்கவில்லை என்றால் அவர்களில் பல ஆயிரம் பேர் செத்து மடிவார்கள். சாவில் இருந்து தப்பிக்க நமக்கு அனுப்புகிறார்கள். இந்த சமயத்தில் வெண்டாம் என்று சொல்லி அவர்கள் அணையிலேயே அந்த நீர் இருக்க செய்ய தமிழகத்தில் எந்த வசதியும் இல்லை.

நாம் செத்தாலும் அவர்கள் தண்னீர் தர மாட்டார்கள். அணைகள் நிரம்பிவிட்டால் நாம் செத்தாலும் பரவாயில்லை என்று திறந்துவிடுவார்கள். :(

ராஜ நடராஜன் said...

மீண்டும் ஒருமுறை வந்தேன்.பின்னூட்டங்கள் கோபக்கனலை அதிகம் வெளிப்படுத்துவது போல் தெரிகிறது.வெறுப்பான மனோபாவங்கள் இரு மாநிலத்திற்குமே நல்லதல்ல.நாம் விதை விதைத்து விட்டுப் போய் விட்டால் வருங்கால சந்ததியினர் அதனை அறுவடை செய்ய வேண்டி வரும். கட்சி சண்டைகளினால் கூட பொதுப்பிரச்சினைகளில் நாம் காரியம் சாதிக்க இயலாமை கண்கூடு.அந்த மனோபாவம் இந்த ஆளும் தலைமுறையுடனாவது முடியட்டும்.

கூடுதுறை said...

நன்றி நடராஜன் ஐயா..

இன்று கூட நம் தமிழக அரசு கன்னட செம்மொழிக்கு நாம் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளது...

வால்பையன் said...

என்ன வந்து என்ன பிரயோஜனம்.
அதான் மிஷின போட்டு சத்தைஎல்லாம் உரிஞ்சிட்டு சக்கையை தான அனுப்புறாங்க

வால்பையன்

S.P. Mehanathan said...

Very happy to note that Metter dam is going to get more than sufficient Kauvery water.
It is also time for our government to distribute the surplus water, after getting the dam filled, to other areas for irrigation/drinking purposes.
Otherwise, for sure, the excess water will go into Bay of Bengal.
Let us remember the advise of our beloved ex President Mr. Abdul Kalam about this.
Mehanathan, Tiruppattur, Sivagangai Dist.

Anonymous said...

சுந்தர், நீங்கள் சொல்வது போல அவர்களால் இதைத் தடுக்க முடியாது‌ (அவர்கள் இதை தடுக்கவும் விரும்பமாட்டார்கள்).
ஆனால் தமிழகம், இப்படி அவர்கள் விருப்பபட்டால் தான் தண்ணீர் பெற முடியும் என்பது வேதனைக்குரிய விஷயம்.

மோ. மோகன் குமார்

கூடுதுறை said...

Mohan thanks for your comments

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts