Tuesday, August 19, 2008

ராமனுக்கு நிகர் யாருமில்லை


இராமயண நாயகர் ராமரைப்பற்றி நெத்தியடியான கருத்துக்களை திரு பழ. கருப்பையா அளித்துள்ளார். பார்க்கலாம் இதற்கு நாத்திகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று

உலக இலக்கியங்களில் ராமனுக்கு நிகரான கதாபாத்திரம் வேறு ஏதும் கிடையாது என்றார் எழுத்தாளர் பழ. கருப்பையா.

இன்றைய பிரச்னைகளுக்கு தீர்வு காட்டிடும் நடப்பியல் இலக்கியம் கம்பராமாயணம்- என்ற தலைப்பில் எழுத்தாளர் பழ. கருப்பையா வேலூரில் பேசினார். அவர் கூறியதாவது:

மகாபாரதம், கம்பராமாயணம் இரு காப்பியங்களை மிஞ்சிய இலக்கியம் உலகில் கிடையாது. அதிலும் ராமனை மி்ஞ்சும் பாத்திரம் எந்த இலக்கியத்திலுமில்லை.

ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் இருக்கும் குடும்ப அமைப்பு மாறி, ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பு உருவான காலகட்டத்தில் ராமாயணம் உருவாகிறது.

பெண்ணுக்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கற்பு நெறி, ஆணுக்கும் இருக்க வேண்டும் என்பதை ராமன் மூலம் காட்டுகிறது கம்ப ராமாயணம். அப்படிப்பட்ட சூழலில் கற்புடை மாதரைக் கவர்ந்து செல்பவருக்கு என்ன கதி நேர்ந்திடும் என்ற எச்சரிக்கையையும் எடுத்துரைக்கிறது கம்பராமாயணம்.

இந்தியக் காப்பியங்கள் நமக்குச் சொல்வது யாதெனில், அறத்தை மக்களிடம் கொண்டு சேருங்கள் என்பதுதான். மக்களுக்கு அறத்தை போதித்து, நெறியான வாழ்க்கை வாழச்செய்வதுதான் சிறந்த அரசியல்முறையாக இருக்க முடியும்.

ஒரு ஊரில் பல ஆயிரம் பேர் இருந்தாலும் காவலர்கள் நூறுபேர்தான் இருப்பார்கள். ஆனால் சட்டம்-ஒழுங்கு நிலை நாட்டப்படும். அதற்குக் காரணம் 99% மக்கள் சட்ட திட்டங்களுக்கும் தர்மத்திற்கும் பயந்து நடப்பவர்கள். அதனால்தான் தர்மத்தை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்கிறேன். அப்போது சட்டம் தானாக பாதுகாக்கப்படும். அதைத்தான் ராமாயணம் போன்ற கதைகள் மூலம் நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.

மன்னராட்சி என்ற போதிலும், கண்ணகி அரசவைக்குள் நுழைந்து அரசனை கேள்வி கேட்க முடிகிறது. ஆனால், மக்களாட்சியில் எந்தவொரு அமைச்சரையும் மக்கள் கேள்வி கேட்க முடியாத நிலைதானே உள்ளது. அமைச்சர்கள் அதிகாரத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்துவர்களாக, அறம் பிழைத்தோராக இருக்கின்றனர்.

ராமனை காட்டுக்குப் போகச்சொன்ன தந்தையையும் காரணமான கைகேயியை மற்றும் பரதனையும் அழிப்பேன் என்று கோபம் கொள்ளும் இலட்சுமணனை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை.... இது விதியின் பிழை... என்று ராமன் அமைதிப்படுத்துவதும், 


ஏர்முனையிலிருந்து விடுபட்ட காளைபோல, பதவியை விருப்புடன் துறக்கும் பண்புநெறியும் அறவாழ்வுக்கு எடுத்துக்காட்டுகள். நம்மை மேல்நிலைக்கு தூக்கும் மாபெரும் இலக்கியம் கம்ப ராமாயணம். அறத்தை போதிக்கும் நூல் கம்ப ராமாயணம்' என்றார் பழ. கருப்பையா.


நன்றி; தட்ஸ்தமிழ்


10 comments:

ஜிம்ஷா said...

///மன்னராட்சி என்ற போதிலும், கண்ணகி அரசவைக்குள் நுழைந்து அரசனை கேள்வி கேட்க முடிகிறது. ஆனால், மக்களாட்சியில் எந்தவொரு அமைச்சரையும் மக்கள் கேள்வி கேட்க முடியாத நிலைதானே உள்ளது. அமைச்சர்கள் அதிகாரத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்துவர்களாக, அறம் பிழைத்தோராக இருக்கின்றனர்.///


நன்று. மன்னராட்சியே நல்லாட்சி என எண்ணத் தோன்றுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் மன்னன் ஒருவனே சம்பாதிப்பான். ஆனால் தற்போது அப்படியில்லை. சாதாரண ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் கூட அரசு பணத்தை சூரையாட நினைக்கிறான். ஆனால் ஒன்று மன்னராட்சியில் தண்டனைகள் கடுமையாக இருக்கும். அதுவும் நன்மைக்கே. தண்டனை கடுமையானால்தான் குற்றங்கள் குறையும். ஜனநாயக நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதும் தண்டனை குறைவு என்பதால்தானே...

கூடுதுறை said...

//நன்று. மன்னராட்சியே நல்லாட்சி என எண்ணத் தோன்றுகிறது.//

அதற்க்காக மன்னராட்சிதான் சரி என்று கொள்ளமுடியாது....

ராமர் மற்றும் ராஜராஜ சோழன் போல மன்னன் இருந்தால் சரி துக்ளக் போல மன்னன் அல்லது கொடுங்கோல் மன்னனாக இருந்தால் மக்கள் நிலமை அவ்வளவு தான்

கூடுதுறை said...

//ஜனநாயக நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதும் தண்டனை குறைவு என்பதால்தானே...//

எப்படியும் சட்டையின் ஒட்டை வழியாக தப்பிவிடலாம் என்பதாலும் இருக்கலாம்

வால்பையன் said...

// ராமனுக்கு நிகரான கதாபாத்திரம் வேறு ஏதும் கிடையாது //

எங்க வீட்ல கூட நிறைய பாத்திரம் இருக்கே,

ராமாயணம் என்பது ஒரு கற்பனை புனைவு.

அப்படியே ராமன் என்ற ஒருவன் வாழ்ந்திருந்தாலும் அவன் என்னை போலவே ஒரு நல்லவனாக வாழ்ந்திருக்கிறான் என்று வேண்டுமானால் நான் பெருமை பட்டு கொள்ளலாம்.

இதில் நாத்திகர்களின் பதில் எதற்கு?

சும்மா இருக்குற சங்கை ஊதிக்கிடே இருக்கனுமா
அப்புறம் நான் ஆரம்பிச்சா தாங்க மாட்டிங்க

கூடுதுறை said...

அதுதான் இன்னும் காணவில்லையே என்றுதான் பார்த்தேன்...

2200 வருடங்களுக்கு முன்பு ஒரு அலேக்ஸாண்டர் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவின் மீது படையெடுத்து வந்தான் என்றால் நம்புவீர்கள்.

ஆனால் நம் நாட்டை அதற்கு முன்பே ராமன் என்பவன் ஆண்டான் என்றால் நம்பமாட்டீர்கள்..

//சும்மா இருக்குற சங்கை ஊதிக்கிடே இருக்கனுமா அப்புறம் நான் ஆரம்பிச்சா தாங்க மாட்டிங்க//

வலைப்பதிவில் இச்சங்கை ஊதிக்கொண்டிருப்பதே நாத்திகர்கள்தான் அவர்களை முதலில் நிறுத்தச்சொல்லுங்கள்...

ஆகா நல்லா ஊதிவிட்டாச்சு..... பார்க்கலாம்

ஜிம்ஷா said...

///வால்பையன் said...

// ராமனுக்கு நிகரான கதாபாத்திரம் வேறு ஏதும் கிடையாது //

எங்க வீட்ல கூட நிறைய பாத்திரம் இருக்கே,///


வால்பையன் உண்மையிலேயே வால்பையன்தான். அவங்க வீட்லேயும் நிறைய பாத்திரம் இருக்காம் பாருங்க. யாரால சொல்ல முடியும் இந்த மாதரியான பதிலை...?

ஜிம்ஷா said...

கமெண்ட்ஸ் மாடரேஷனைப் பற்றி நான் ஒரு பதிவுபோட்டிருக்கேன். அனைத்து பதிவர்களும் படியுங்கள். தங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

http://tvmalaionline.blogspot.com/2008/08/blog-post_1301.html

கூடுதுறை said...

//யாரால சொல்ல முடியும் இந்த மாதரியான பதிலை...?//

ஜிம்சா வால்பையன் கடிக்கும் கடி இதேல்லாம் மிகவும் சாதாரணம்...

ஜே.கே.ரித்திஷ் பாராட்டி லக்கிலுக்கிடம் பின்னுட்டம் போட்டிருக்கிறார் அதை ப்பாருங்கள்

கரிகாலன் said...

திரு.பழ.கருப்பையா அவர்கள் இராமர் என்ற பொதுவான பாத்திரத்தை பற்றி பேசுகிறாரா? அல்லது கம்பர் குறிப்பிடும் இராமரை பற்றி பேசுகிறாரா?

இராமர் பற்றியும் இராமாயணம் பற்றியும் பலப் புனைவுகள் உள்ளன. இந்தப் புனைவுகள் ஒன்றுக்கொண்று பலவகையில் முரண்படுகின்றன.

கூடுதுறை said...

//இராமர் பற்றியும் இராமாயணம் பற்றியும் பலப் புனைவுகள் உள்ளன. இந்தப் புனைவுகள் ஒன்றுக்கொண்று பலவகையில் முரண்படுகின்றன.//

கரிகாலன் இதுக்கு இங்கேயே நல்ல உதாரணம் கூறலாம்... சில நாட்களுக்கு முன்பு பதிவர் தயானந்த் பரிசலுக்கு ஒரு பகிரங்கக்கடிதம் எழுதினார்.... அதேக்கடிதத்தை இரண்டு மூன்று பேர் உல்டா செய்து இங்கே வெளியிட்டனர். வெவ்வேறு விதமாக...

வெரும் சுமார் ஆயிரம் பேர் படிக்கும் பதிவுலகிலேயே ஒரு விசயம் இப்படி கண்,காது மூக்கு வைத்து மறுபதிப்பிடப்படுகிறதே... சுமார் 5000 வருடங்களாக குரு போதனை, மற்றும் வாய்வழி செவிவழி, மற்றும் பிற்காலத்தில் ஓலைச்சுவடி என பலதலைமுறை தாண்டி வரும் ஒரு விசயம் எப்படி எல்லாம் மாற்றம் அடைந்து வந்திருக்கும் சற்றே யோசனை செய்து பாருங்கள்....

நாம் அதில் இருக்கும் தத்துவத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்...

தோசை போட்டால் தோசையை சாப்பிட வேண்டும் அதில் ஒட்டையை எண்ணக்கூடாது....

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews