Saturday, August 23, 2008

எச்சரிக்கை!!! பாடகிகள் ஜாக்கிரதை.... புதுப்பாடகி வருகிறார்.......
பாடகிகள் ஜாக்கிரதை.... புதுப்பாடகி வருகிறார்.......பாட்டு பாடப் போகிறார் திரிஷா....

திரிஷா சினிமாப்பாட்டுகளை பாடப்போகிறார்.. அதுபற்றி வந்த செய்தி கீழே வழக்கம்போல் அடைப்புக்குறிக்குள் இருப்பது மட்டும் நான் எழுதியது

குருவி நொண்டியடித்த பிறகு, சொல்லிக் கொள்கிற மாதிரி வேறு படம் எதுவும் இல்லாததால் ரொம்ப அப்செட்டிலிருக்கிறார் த்ரிஷா.(குருவி எங்கே நொண்டியடித்தது?? துப்பாக்கியால் சுடப்பட்ட குருவி போல் சுருண்டு விழுந்துவிட்டதே?)

முன்பு நடிக்க நேரமில்லாத அளவுக்கு தமிழிலும் தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தன. இவரோ, ஒரு கோடி இரண்டு கோடி என சம்பளம் கேட்டு மிரள வைத்துக் கொண்டிருந்தார். (இப்போ தெருக்கோடிதான் கிடைக்கும் முடிந்தால் அங்கே நட்டநடு ராத்திரியில் டான்ஸ் ஆடலாம்)

குருவிக்குப் பின்னர் நிலைமை அப்படியே மாறிப்போனது. இப்போதைக்கு அபியும் நானும், சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகிய இரு படங்கள்தான் தமிழில். (இந்தப் படங்களும் பல வருடங்களாக எடுக்கப்பட்டுவரும் படங்கள் எப்போது ரிலிஸ் எனக்கடவுளுக்கே தெரியாது?

தெலுங்கில் இரண்டே படங்கள். ஒன்றில் தொலைக்காட்சிப் பாடகியாக வருகிறாராம். இந்த வேடத்தில் அச்சு அசலாகத் தோன்ற வேண்டுமே என்பதற்காக, சரியான உடல் மொழியைக் (தப்பா எடுத்துக்காதீங்க... அதான் பாடி லாங்குவேஜ்!) கற்றுக் கொண்டாராம் த்ரிஷா. (இதுக்கு லாங்குவேஜ் எதுக்கு லூசுப்பெண்ணாக ஆக்ட் கொடுக்க பயிற்சி வேண்டுமா? அப்ப இத்தனை நாள் நடித்ததேல்லாம் என்னவாம்? )

உண்மையில் த்ரிஷாவுக்கு பாடுவதில்தான் அலாதி ஆர்வமாம்.(என்னக் கொடுமை சார் இது) 'நடிப்பை விட பாடுவதில்தான் ஆரம்பத்தில் எனக்கு அதிக ஆர்வமிருந்தது. ஆனால் வாய்ப்பு அமையவில்லை. (அதற்கு மாடலிங் செல்லாமல் இருந்து மார்கழி மாதம் சபாவில் சான்ஸ் வாங்கி பாடி இருக்கவேண்டும்)

தெலுங்கில் 'கிங்' என்ற படத்தில் தொலைக் காட்சிப் பாடகியாக நடித்து வருகிறேன். இதில் அந்த வேடத்தில் சிறப்பாகத் தோன்ற முன் பயிற்சி எடுத்துக் கொண்டேன்..' என்கிறர் த்ரிஷா.(இது என்ன தொலைக்காட்சி பாடகி? தொலைக்காட்சியில் பாடகிகளுக்கு என்ன வேலை? வீடியோ ஜாக்கி என்றாலவது ஒரு அர்த்தம் உண்டு)

விரைவிலேயே ஏ.ஆர். ரஹ்மான இசையில் பாடப்போவதாகவும் கூறியுள்ளார். (பாவம் ரஹ்மான்)

'ரஹ்மான் இசைக்கு தீவிர விசிறி நான். ஒருமுறையாவது அவரது இசையில் பாடிவிடத் துடித்துக் கொண்டிருந்தேன், இப்போது அப்படியொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. விரைவில் இதுபற்றி அறிவிப்பேன், என்கிறார் த்ரிஷா.(விரைவில் வரப்போகிறார் கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் எதிரொலி. எதிரொலிக்கு அர்த்தம் புரிகிறதா?)

சொந்தக்குரலில் பாடுவது இருக்கட்டும், சொந்தமா எப்போ டப்பிங் பேசப் போறீங்க?

(இதுக்கு தனியா துட்டு கொடுக்கமாட்டாங்களே...அதனால்தான்)

10 comments:

Prabhakaran said...

நல்ல கமெண்ட்ஸ்....

இருந்தாலும் திரியின் படம் சூப்பர்.....

கூடுதுறை said...

thanks prabhakar...

எதோ ஒண்ணு நல்லா இருந்தா சரிதான்

கிரி said...

//கூடுதுறை said...

thanks prabhakar...

எதோ ஒண்ணு நல்லா இருந்தா சரிதான்//

:-)))))

தமிழ்நெஞ்சம் said...நல்லாப் பாடுவார்னு நம்புகிறேன்.

Karthik said...

//அபியும் நானும், சென்னையில் ஒரு மழைக்காலம்

Hope these movies will be Good to watch.
:-)

கூடுதுறை said...

வருகைக்கு நன்றி தமிழ்நெஞ்சம் அவர்க்ளே....

ஜிம்ஷா said...

அந்த காலத்தில பாட்டு பாடறதுனா மிகவும் சிரமமான விஷயம். இப்போது அப்படியல்ல. 3 ஷாவை பாடகியாக்கி பார்க்க எனக்கு ஆசையில்லை. ஆட்டத்திற்காக பார்க்கலாம்.

குடுகுடுப்பை said...

பாடிட்டு போகட்டும் விடுங்க கூடு

மங்களூர் சிவா said...

/
நல்ல கமெண்ட்ஸ்....

இருந்தாலும் திரியின் படம் சூப்பர்.....
/

றீப்பிட்டூ

கூடுதுறை said...

வருகைக்கு கொஞ்ச நாள் ஆனாலும் வருகைக்கு நன்றி சிவா..

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews