Monday, July 3, 2017

மறைக்கப்பட்ட பொக்கிஷம்

தன்னை அறிதல் 1

வணக்கம்...


முதலில் ஒரு கதை

அந்த கோவில் வாசலில் ஒருவன் பிச்சை எடுத்து கொண்டு இருந்தான்.

அவனது சொத்து என்றால் அவனது கையில் இருக்கும் நல்ல கருமை நிற திருவோடு ஒன்றுதான்.

(அவன் இந்த கால  பிச்சைக்காரன் போல் அல்ல)

அன்றன்று விழும் பிச்சை வைத்து சாப்பிட்டு கொள்வான்.

அவனுக்கு வயதாகி விட்டது...சரியாக நடக்கவும் முடியவில்லை.

ஒருதடவை கீழே விழுந்தான் அவனது திருவோடும் எகிறி போய் விழுந்தது....

அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை...ஆனால் திருவோடு உடைந்து விட்டதோ என மிகவும் பயந்து விட்டான்.

ஏனெனில், அது அவனது தாத்தாவிடம் இருந்து தந்தையிடம் இருந்து அவனுக்கு வந்தது.

ஆகவே, எடுத்து திருப்பி திருப்பி பார்த்தான்....

ஓரிரு இடங்களில் காயமும் கீறலும் இருந்தது.

உடன் அருகே இருந்த கடைக்காரரிடம் கொடுக்க அவர் அதை பார்த்து நல்ல வலிமையான உலோகமாக உள்ளது. வேறு யாரேனும் பாத்திரம் செய்பவரிடம் கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள் என கூறினான்.

அவனும் அதற்கு தகுந்தவர் இடம் கொண்டு சேர்க்க அவரும் அதை என்ன உலோகம் என பார்க்க சற்றே உரசி பார்த்தார்.

அதை கண்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.

ஏனெனில், முழுக்க முழுக்க பொன்னால் செய்யப்பட்ட திருவோடு ஆகும்.

ஏனெப்பா, இதை வைத்துக் கொண்டா? மூன்று தலைமுறையாக பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறாய்.. .என்று கேட்டான்...

இதை வைத்து தாம் குடும்பத்தோடு வாழ்வாங்கு வாழ்ந்து இருக்கலாமே எனக் கேட்டார்

இந்த கதையை தாம் ஏற்கனவே படித்தி இருக்கலாம்.

இக்கதையில் வரும் பிச்சைக்காரன் போல் தான்

நாம் அனைவரும் உடல் எனும் தங்க திருவோட்டினை வைத்துக் கொண்டு அதன் அருமை பெருமை தெரியாமல் வாழ்ந்து வருகிறோம்...

நமது மனித உடல் என்பது ஒரு அற்புதமான பொக்கிஷம்...

மேலும் மிகவும் அருமையான இயந்திரம் ஆகும்.

அதை வைத்து நாம் இப்பூவுலகில் எதையும் சாதிக்க இயலும்.

மேலும் மனித நிலையில் இருந்து அடுத்த பரிணாமத்தையும் அடைய இயலும்...

அதை விட்டு நாம் வெந்ததை தின்று இப்பூவுலக ஆசை, மற்றும் தேவைக்காக உழைத்து தேய்ந்து, தேய்ந்து பின் இறந்தும் போகிறோம்...

அதை ஏன் தவிர்க்க முடியாதா? வேறு வழியே இல்லையா?

யோசியுங்கள் .....

நாளை சந்திப்போம்....

🌹 *நல்லதே நடக்கிறது*🌺

No comments:

Popular Posts