Saturday, July 12, 2008

நம்பிக்கைக்கு ஆப்பு மட்டுமல்ல கடப்பாறையை கூட வைக்கமுடியாது

இது முழுக்க முழுக்க நம்பிக்கை சம்பந்தமான விசயம்....

இதில் நாத்திக சிகாமணிகள் தலையிடமால் இருப்பதே நலம்...
அமேரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்பி கல் எடுத்து வந்ததையே நம்பாத
கூட்டம் இன்னும் அமெரிக்காவிலேயே உள்ளது... சும்மா டூம் லைட் போட்டு
டீவியில் காட்டி ஏமாற்றி உள்ளனர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்...

ஆகவே நம்புபவர்கள் நம்பட்டும், நம்பதாவர்கள் தள்ளியே இருங்கள். அதில் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமல்ல...

ஜோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால் உண்மைதான்...நீ எனப்பா ஏமாற்றும் ஜோதிடரிடம் போகிறாய்? நல்ல ஜோதிடர் அறிந்து அவரிடம் செல்...

இதற்கு பதில் சொல்லுங்கள்.... நமது நாட்டில் (ஏன் நமது நாடு) உலக அளவில் என்றே எடுத்துக்கொள்ளூங்கள்.

எந்த தொழிலாவது ஏமாற்றுக்காரர்கள் இல்லாதது என உள்ளது என்று கூறுங்கள்

புனிதமான தொழில் எனப்படும் மருத்துவத்தில் போலி டாக்டர்கள் இல்லையா?
கோயில்,சர்ச்,மசூதியில் போலிவாதிக்ள் இல்லையா?
வியாபாரத்தில் நியாயவாதி என ஒருவன் உண்டா? வியாபாரிக்கு பெயரே பொய்யன்தான்...எவ்வளவு அதிகமாக பொய் சொல்கிறானோ அவ்வளவு லாபம்..
அரசியல் ? சொல்லவே வேண்டாம்...
பள்ளிகூடம்??? கல்லூரி..........
வக்கில்கள்???..................... இவர்கள் பொய்யே சொல்வதில்லை
காவல் துறை???..........
ஏன்.... பங்கு வணிகத்தில் ஒரு ஹர்சத் மேத்தாவைப் போல் பல பேர் இல்லையா?

இதைபோல் பல உதாரணம் சொல்ல்லாம்...

மக்களின் நிலமை எப்போதும் எரியும் கொள்ளீயில் எது நல்ல கொள்ளி என தேடிப்பிடிக்க வேண்டிய நிலமைதான் உள்ளது....

ஆகவே, எதுவும் நாம் தேர்ந்து எடுத்து கொள்வதில்தான் உள்ளது....
சரி, நாத்திகவாதிகள் சொல்லலாம், நாம் மக்களை திருத்துவதற்குதான் சொல்கிறோம்.. ஜோதிடம் பார்க்கவேண்டாம் ஏமாற்றுவார்கள் என்று...

இதில்தான் தவறு செய்கிறீர்கள்... நீங்கள் போலி ஜோதிடரை அடையாளம் காட்டுங்கள்...அது நியாயம்... ஜோதிடமே தவறு எனச் சொல்லுவதில் என்ன நியாயம் உள்ளது...

ஊருக்கு இரண்டு போலி மருந்துவர் பிடிபட்டால் இனி மருத்துவமே தவறு.. இனி யாரும் மருத்துவம் பார்க்கவேண்டாம் எனச் சொல்வீர்களா....

இல்லை மளிகைக்கடைக்காரன் கலப்படம் செய்தால் இனி மளிகைக்கடையிலேயா சாமன்கள் வாங்கவேண்டாம் எனச்சொல்வீர்களா?

ஹர்சத் மேத்தா பங்கு வணிகத்தில் ஊழல் செய்ததால் யாரும் பங்கு வணிகத்தில் ஈடுபடக்கூடாது சொல்வீர்களா?

அடுத்து ஒரு கடினமானது....

ராமர், கிருஷ்ணர்,காந்தி,யேசு, நபிகள்,புத்தர்,ஆதிசங்கரன்,ராமனுஜர் இந்த பூமியில்தான்
ராவணனன்,கம்சன்,கோட்சே,துரியோதனன்,ஹிட்லர்,கோயபல்ஸ்,எனக்கெட்டவர்களும் பிறக்கிறார்கள்

இன்னும் சொல்லப்போனால் கெட்டவர்கள்தான் அதிகம் பிறக்கிறார்கள்... ஆகவே மனிதர்களே உங்களால்தான் கெட்டவர்கள் அதிகம் பிறக்கிறாரகள்...

ஆகவே மனிதர்கள் இனபெருக்கமே செய்யக்கூடாது என நாத்திகர்கள் போராடலாமே?

ஏன் செய்வதில்லை....

உங்களுக்கு விருப்பம் இல்லையா.. விட்டுவிடுங்கள்....மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்

11 comments:

கல்கிதாசன் said...

அருமையான பதில் கூடுதுரையாரே,
போலி டாக்டர் (அரைகுறை ஜோதிடர்) எழுதிய prescription ஐ (ஜாதகத்தை) எடுத்து கொண்டு Pharmacists படிக்காத மருந்து கடைக்காரனிடம் (தெருவோர ஜோசியரிடம் ) கொடுத்து அதன் மூலம் பலனில்லாமல் அல்லோபதி மருத்துவத்தையே குறை சொன்னானாம் ஒருத்தன். இவர்கள் கதையும் அதுதான்.

Anonymous said...

ஜோதிடமாம்... அதற்கு ஒரு பதிவாம்...

போய்யா.........

கூடுதுறை said...

அன்பு அனானியே...

ஜோதிடம் ஜோதிடம் தான்
பதிவு பதிவுதான்...

முடிந்தால் பெயரோடு வந்து வாதிட்டுபார்...

அப்போது கிழிக்கிறேன் உனது முகமூடியை

செந்தழல் ரவி said...

திரு.கூடுதுறை அவர்களே !!!

இந்த பதிவு சிறந்த நகைச்சுவை பதிவு...!!!

நன்றி...

கூடுதுறை said...

நன்றி ரவி அவர்களே!

வடிவேலு அடி வாங்கும் போது நாம் அனைவரும் சிரிக்கிறோம்...ஆனால் அவருக்கு..


சர்க்கஸ் கோமாளிக்கும் சிரிக்கிறோம்...ஆனால் அவருக்கு....

சற்றே சிந்தியுங்கள்...

உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் விட்டுவிடுங்கள்...
வாத்தியார் போன்றவர்கள் மனதினை புண்படுத்தாதிர்கள்...

நீங்கள் எனது பதிவிற்கு பதில் அளிக்காமல் நழுவ நகைச்சுவையேன் தப்பிக்க பார்க்கிறீர்கள்

SP.VR. SUBBIAH said...

Level of thinking is different from man to man.They are not experienced in this subject!

They are not having our level of thinking and knowledge

In a war of words silence is the best weapon.Forget them! Ignore them
It is the right solution!

செந்தழல் ரவி said...

நாந்தானே உங்கள் பதிவை பார்த்து சிரித்தேன் :))))

கேள்வி கேட்டால் மனது புன்படும் என்பது சரியாக படவில்லை...

கேள்விக்கு பதில் அல்லவா சொல்லவேண்டும் - வாத்தியார் என்பவர் ?

மனுதர்மத்தின் கூறான சோதிடக்கலை அழிந்து ஒழிய வேண்டும்...

கூடுதுறை said...

வாத்தியாரிடம் கேள்வி கேட்டால் கண்டிப்பாக பதில் கிடைக்கும்... அவரும் பதில் கொடுத்துவிட்டார்...

ஆனால் கேள்வி கேட்பதில் ஒரு முறை உள்ளது என அவரே கூறிவிட்டார்


யாருமே யாரையும் அல்லது எதையும் அழிக்க இயலாது...

//In a war of words silence is the best weapon//

வாத்தியாரின் இந்த வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு இருக்கிறேன்

வணக்கம்

கல்கிதாசன் said...

திரும்பவும் ஆரம்பிச்சிட்டங்கையா... ..

//////மனுதர்மத்தின் கூறான சோதிடக்கலை//////

எதோ இந்தியாவில மட்டும்தான் ஜோதிடத்தை நம்பறமாதிரி பேசுறீங்க. உலக நாடுகளில் எல்லாம்- ஏன் இங்க லண்டனில் கூடத்தான் ஜோதிடம் பார்கிறவங்க இருக்கிறாங்க. Fate & Fortune weeklies இங்கு அமோகமாக விற்பனை ஆகும். எந்த மனு வந்து இங்க ஜோதிடத்தை பரப்பினது.

ரமணா said...

வால்பையன் சார் ஒரு உண்மை இப்போ தெரிஞ்சு போச்சு.!

தமிழ்மண பதிவுகளின் தலைப்புகள் பல சமிப காலமாக " மலையாள படத்திற்கு தமிழக திரை களில் " "ரா........." என வால்போஸ்ட் அடித்து கூட்டத்தை கூட்ட வது போல் " சுண்டி இழுக்கும் காமத்துபால் தலைப்புகளும் ,ஜ... கதைகளும் இருக்கும் போது
வாசகர்களின் மன ஒட்டத்தை திருப்ப எடுத்த முயற்சியும், உங்கள் பகுத்தறிவு கொள்கை பிரச்சாரம்( இப்போ தமிழகத்தில் முன்பிருந்த வலு இப்போ இல்லாதது மாதிரி தோற்றம்)யுக்தியும் தானே

"ஒரு கல்லில் இரு மாங்காய்"

பதிவாளர்களுக்குள் இது ஒரு நல்ல ஆரோக்கிய போட்டி

"சாபாஸ் சரியான போட்டி"
(வஞ்சிக் கோட்டை வாலிபன் வீரப்பா பாணியில்)

வாசக அன்பர்களுக்கு நல்ல அறிவுச் செய்தி வேட்டை.பாரட்டுக்கள்

இப்போ வலைத்தளத்தில் " on line voting " இருக்கே
(protection againast second voting by the same person)

வாசகர் எண்ணம் என்ன என்று அறிய செய்தால் தமிழக இன்றய நிலையின் பிரதி பலிப்பை ( ஒரளவுக்கு)
தெரிய வாய்ப்பு.

தேர்தல் வேற வந்திடும் போலுள்ளதே!

அதுவும் இப்போ என்ன நடக்கப் போவதுன்ன பல பெரியவங்க விரும்பினமாதிரி இரு கட்சி ஆட்சி முறை ( மேல் நாடுகளில் உள்ளது மாதிரி
--please vist dondu.blogspot.com for further details about other nations( usa,u.k,france,germany ...etc)

ஆனால் என்ன அது இரு கம்பெனி
ஆட்சிமுறையாய் மாறும் திக்கில் செல்கிறது.

1.அண்ணன் ராமனின் இடது சாரி அணி
2.தம்பி லக்குமனனின் வலது சார் அணி.

1.அணுசக்தி ஒப்பந்தம் எதிர்ப்பு அணி

2.அணுசக்தி ஒப்பந்தம் ஆதரவு அணி

என்ன திடிரென்று கருத்து வேறு பக்கம் செல்கிறதே என்றா?

இதுவும் ஜோதிடம் சம்பந்தமாக( அதவது எதிர்காலக் கணிப்பாளர்களின் ஆருடங்கள்)
பற்றிதான்.
நாஸ்டர்டாம் போல் ஒரு கணிப்பு ( படித்த உண்மைச் செய்தி)
"வரும் காலங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து உலகில் எந்தப் பகுதியில்
வாழும் மனிதனும் தான் மாதம் பெரும் மொத்த ஊதியத்தையும்( total monthly income form all sources)
தனது குடுப்பத்தின் மாதாந்திர உணவுத் தேவைக்கு மட்டும் செலவளிக்க வேண்டியது வரும் எனவே அது சமயம் மற்ற பொருடகளை (consumer goods) வாங்க ஆளில்லாமல் பணப்புழக்கம் குறைந்து( பணவீக்கம் பணம்புழங்காச் சூழலாய் மாறி) real estate வணிகம் "பேய்கள் வாழும் மாளிகயாய் மாறும்( பேய் என்பதுகூட ஒரு கற்பனைதான் சண்டைக்கு வரவேண்டாம்- வால் பையன் சார்)

இதுக்கு பங்கு வணிகத்தில் நல்ல அளுமை உள்ளவர் என "டோண்டு ராகவன் சாரால்" வெகுவாய்ப் பாரட்டப்பட்ட வால்பையன் சார் என்ன சொல்கிறார்.

விவாதம் இந்த திசையில் செல்லட்டுமே
வரும் காலத்தில் பொருளாதார எருக்கடிக்கு ஆலாகப் போகும் "வெகுஜனம்" காரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டால்

நல்லது அல்லவா.

இது நடக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உலகில் கட்டியங் கூற அரம்பித்துவிட்டன்

1.பணக்கார அமெரிக்காவின் பொருளாதர வீழ்ச்சி

2.கச்சா எண்ணெயின் உயர்ந்து வரும் அதீத விலையுர்வு( 200 டாலரை தொடும் என்பது கணிப்பு)

3. இந்தியாவின் பனவீக்கம் 20 ஐ நோக்கி நகர்வதாக தகவ்ல்.

4.உலக் வெப்பமாதலின் காரனத்தல்,
ஏற்படும் இழப்புக்கள் அனைத்து துறைகளிலும்( எரி சக்தியில் குறிப்பாக)

5.விவசாய நிலங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டு விவசாயப் பரப்பு வேகமாய் குறைந்து வரும் அபாயகரம்

6.நம்மைவிட வேகமாக வளர்ந்துவரும் "சைனாவின்" பொறாமை(வில்லத்தனம்)நரித் தனங்கள்

7. 2010ல் அரிசியை இறக்குமதி செய்தால்தான் அனைவருக்கும் சோறிட முடியும் எனக் கணிப்பு( அரசுத் துறை)

8.குறுக்கு வழியில் பனம் குவிக்கும்" வல்லான் பணம் குவிக்கும்" என்று பாரதி தாசன் பாடியதை மெய்பிக்கும் விதமாக செயல் படுவோர்

9.பெருகிவரும் மக்கட் தொகை பெருக்கம்

10.அரசியல் வாதிகளின் சுயநலப் போக்கு( லஞ்ச, லாவண்யம், கட்சி மாரும் போக்குகள்)

11.மக்களின் புரிந்தும் புரியாத் தன்மைகள்

12.மரங்கலை வெட்டுதல் ,பிளாஸ்டிக் பொருட்களை உலகின் தரை,வானவெளிகள்,நிர் நிலைகள், காற்று மண்டலம் முழுவதும் பரப்பி நீர்,நிலம்,காற்று ஆகிய மனித ஜீவாதாரங்களை வேகமாய் கெடுத்து இயற்கயின் சமன் சூநிலையை பாழ்படுத்தும் நாம்.


இந்த 12 ம் தான் இந்திய ஜாதகத்தில் 12 ராசிக் கட்டத்தில் உள்ல கிரகங்கள் போல்--முக்கியாமன 9 பவர் கூடியது எனவும்-மற்றவை காலிக் கட்டம்- அதாவது சிலதை சரி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்))


copy to

1.http://dondu.blogspot.com/
2.http://classroom2007.blogspot.com/
3.http://scssundar.blogspot.com
4.http://truetamilans.blogspot.com/

Anonymous said...

SUPER AAPPU TO VALPAIYAN

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews