Saturday, May 31, 2008

ஆடாதேடா ஆடாதேடா மனிதா !!! நீ வெறும் தூசிதானடா !!!

மனிதனின் ஆட்டம் எல்லாம் அவன் வீடு வீதியோடு சரி அவனை நம் பூமியோடு ஒப்பிட்டால் அவன் ஒன்றுமே இல்லை.....

சரி பூமியை மற்ற நமது அருகில் உள்ள சக சகோதர கிரகங்களோடு ஒப்பிடுவோமா....

கீழே உள்ள படத்தை பாருங்கள்.....




செவ்வாய், வெள்ளி, புதன் மற்றும் புளூட்டோ(இது தூர கிரகம்) விடம் ஒப்பிடும் போது நமது பூமி கில்லிதான். 

ஆனால் நமது சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களோடும் ஒப்பிடும்போது ?

கீழ் உள்ள படத்தை பாருங்கள்




வியாழன், சனியோடு ஒப்பிடும் போது கால்பந்து அளவில் இருந்தால் நமது பூமி ஒரு இலந்தைப் பழம் அளவுதான். 

சரி இப்போது வியாழன் மற்றும் சனியின் கதியை நமது சூரியனின் அளவோடு ஒப்பிட்டு பார்ப்போமா?

கீழே உள்ள படத்தை கிளிக்குங்கள்




இப்போது சூரியன் கால்பந்தைவிட சற்று பெரிதெனில் நமது வியாழனின் நிலை இலந்தபழத்தை விட சிறிது... 

நமது பூமியின் நிலமை வெறும் கடுகு அளவே !!!!

சரி அடுத்து நமது சூரியனாரின் கதியை பார்ப்போம்...

கீழே உள்ள படத்தை பாருங்கள்




நமது சூரியனாருக்கு ஏற்பட்ட நிலமை அவர் இப்போது கடுகாகிவிட்டார். 

நமது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகமான் வியாழன் சுமார் ஒரு pixel அளவு ஆகிவிட்டார்

நமது பூமியின் நிலமை கண்ணுக்கு தெரியாத சூழ்நிலை

ARCTURUS என்ற நட்சத்திரத்தோடு ஒப்பிடுகையில்.....

சரி அடுத்து ARCTURUS நட்சத்திரத்தின் நிலைதான் என்னவென்று பார்ப்போமா?

அடுத்த படத்தை பாருங்கள்



இப்போது ARCTURUS யின் நிலமை கடுகளவு... நமது சூரியனோ ஒரு pixel அளவு

இதில் வியாழனே கண்ணுக்கு தெரியாத சூழ்நிலை....பூமியின் நிலை ?

மனிதா தேவையா? இந்த ஆட்டம்?? இதில் ஆத்திகமே பெரிது நாத்திகமே பெரிது என போட்டி வேறு

மனிதாபிமானத்தை வளர்த்து நல் மனிதர்களாய் வாழ்வோமே.....

8 comments:

Anonymous said...

உலகளாவிய பார்வை என்பது இதுதான்.உலகைப் பற்றிய பரந்து பட்ட புரிதல் ஏற்படும் போது 'நான்' காணாமல் போய் விடும்.

Anonymous said...

நன்றி ஜாலிஜம்பர் அவர்களே!

இதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம்

Anonymous said...

இவற்றையெல்லாம் பார்க்கும்போதுதான் படைப்பின் பிரம்மாண்டம் தெரியும்!
படங்கள் நனறாக உள்ளன நண்பரே!

Anonymous said...

மன்னிக்கவும் வடகரைவேலன்..

நான் அதை பார்க்கவில்லை. என்னைப்போல பார்க்கதவர்களும் இப்போது பார்க்கட்டுமே !!

உலகம் ஒன்றுதானே!1

Anonymous said...

வருகைக்கு நன்றி வாத்தியார் ஐயா !

Anonymous said...

வாவ். என்னே ஆச்சரியம். உலக உருண்டையையே கொண்டுவந்து, விளக்கியது மிகச் சிறப்பு.

Anonymous said...

நன்றி ஜிம்ஷா அவர்களே!

அப்படியே நான்கு பேருக்கு சொல்லுங்கள். உங்கள் பதிவில் ஒரு லிங்க் கொடுத்து

Anonymous said...

Its nice.And can send more interesting pic.any how all pic r interesting

Popular Posts