குமாரபாளையம் மாணவி மாநிலத்தில் முதலிடம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் S.S.M.லட்சுமியம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி மெட்ரிகுலேசன் தேர்வில் 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார்.
அவர் குமாரபாளையம் பிரபல மருத்துவர்கள் வாசுதேவன் - குகப்பிர்யா தம்பதியனரின் மகள் ஆவார்.
அவருக்கு தாளாளர் K.S. இளவரசன் மற்றும் தலைமையாசிரியர் சம்பத்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
மற்றும் பள்ளிவளாகத்தில் 10000 வாலா வெடி வைத்துக்கொண்டாடினர்.
மேற்படி பள்ளி பலவருடங்களாக SSLC தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுவருகிறது என்பது குறிப்படத்தக்கது.
இதே குமாரபாளையத்தில் தான் நான் குடியிருந்து வருகிறேன்
7 comments:
வெற்றிபெற்ற மாணவி லட்சுமியம்மாளுக்கு வாழ்த்துகள்
1. பாளையங்கோட்டை மாணவி ராம் அம்பிகை மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு 496 பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்துள்ளார்
2வது இடத்தை 2 மாணவர்களும், 2 மாணவிகளும் ஆக மொத்தம் 4 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 494.
3. 493 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தை மொத்தம் 8 பேர் பிடித்துள்ளனர்.
நன்றி தமிழ்பிரியன் அவர்களே!
தாங்கள் கூறியிருப்பவர்கள் பெற்று இருப்பது ஸ்டேட்போர்டு மதிப்பெண்கள் ஆகும்.
நான் கூறியிருப்பது மெட்ரிகுலேசன் தேர்வு
நன்றி புகழன் அவர்களே
நான் சொல்லி கொடுத்து எங்க ஊர்ல ஒரு பொண்ணு பஸ்ட் மார்க்குன்னு எதாவது பதிவு போட போறிங்களா? ச்சின்னபையன் அப்படி தான் பண்ணினார்!
நான் வாழ்த்துக்கள் சொன்னதா சொல்லிருங்க அந்த பொண்ணுக்கு
வால்பையன்
பரவாயில்லை இது போன்ற சிறிய ஊரில் இருந்து மாநிலத்தில் முதலிடம் என்பது பெரிய விசயம்தான்
அன்பர்ந்த அனானியே!
குமாரபாளையம் சிறிய ஊர் அல்ல.
இது 3 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம் ஆகும்
இந்த பின்னுட்டத்திற்கு அனானியில் போடவேண்டுமா?
வால்பையன் அவர்களே! இந்த பெண்ணிற்கு நான் எதுவும் சொல்லிக்கொடுக்கவில்லை. அதனால்தான் மாநிலத்தில் முதலிடம் எடுத்துவிட்டது !!!
///வால்பையன் அவர்களே! இந்த பெண்ணிற்கு நான் எதுவும் சொல்லிக்கொடுக்கவில்லை. அதனால்தான் மாநிலத்தில் முதலிடம் எடுத்துவிட்டது !!! ///
இப்படியில்ல உண்மையை ஒத்து கொள்ள மனம் வேண்டும்.
வால்பையன்
Post a Comment