Saturday, July 26, 2008

கூடுதுறையின் பெருமையை (எனது அல்ல) படியுங்கள்

கூடுதுறையின் பெருமையை (எனது அல்ல) படியுங்கள்.

கூடுதுறையின் பெருமையை விளக்கிக்கூறும் பதிவை எழுதவேண்டும் என வேகு நாட்களாக எனது எண்ணம். அதற்கு தற்போது வர இருக்கும் ஆடி 18ல் ஆடி பெருக்கு திருவிழா நடக்க இருப்பதால் தற்போது எழுதினால் சிறப்பாக இருக்கும் என இதைப் பதிவிடுகிறேன்.

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத என் காவேரி பெருமையை விவரிக்கிறது துலா புராணம்.

பவானி கூடுதுறையின் காட்சி

mukkoodal
பொதுவாக இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் எனக் கூறுவதுண்டு. தமிழ்நாட்டில் பவானி, உத்திரபிரதேசத்தில் அலகாபாத், கர்நாடகவில் திருமுக்கூடல் ஆகியவை சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும்.

ஆடி மாதம் முழுவதும் காவிரியில் புத்தம் புதிய புனலுடன் பொங்கும் நுரையுடன் துள்ளி குதித்து காவேரித்தாய் ஓடிவருவாள் (இது அந்தக்காலத்தில்). இப்போது தமிழக அரசின் தயவில் குறிப்பிட்ட காலத்தில் மேட்டுர் அணையை திறந்துவிட்டால் அதுவும் அளவோடு ஓடி வருகிறாள்.

தமிழகத்தில் காவிரி பாயும் அனைத்து இடங்களிலும் இவ் ஆடிப்பெருக்கை ஆடிமாதம் 18 தேதியன்று ஆடிபதினெட்டு பண்டிகை என சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

இவ்வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் தொடக்கமே காவிரியின் ஆடிப்பெருக்குதான்.

தமிழகத்தில் காவிரி நுழையும் இடமான ஹோகேனக்கல்லில் (தற்போது எடியூரப்பவின் போரட்ட பிரசித்தி பெற்ற இடம்) ஆரம்பித்து மேட்டுர், பவானி கூடுதுறை, கொடுமுடி, முக்கொம்பு, திருவரங்கம், திருச்சி, தஞ்சை மாவட்டம் முழுவதும் மற்றும் காவிரிபூம்பட்டினம் வரை அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் நமது பவானி கூடுதுறையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இங்கு ஆடி 17ம் தேதி இரவில் இருந்து அக்கம் பக்கம் கிராம்ம் மற்றும் நகரங்களிலிருந்து மக்கள் குவியத்தொடங்கி ஆடி 18 இரவு வரை கூடுதுறையில் குளித்து கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்து தங்களது பாவச்சுமையை போக்கிக்கொள்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் கூடுதுறையில் இந்நாளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுகின்றனர்.

கூடுதுறை சங்கமம் கரையில் இருந்து திருவேணி சங்கமம் ஒரு பார்வை


250px-BavaniKuuduthurai

வாருங்கள் அனைவரும் கூடுதுறையில் குளித்து வேதநாயகி சமேத சங்கமேஸ்வரரை தரிசித்தி அவரின் அருள் பெருவோம்

சங்கமேஸ்வரர் கோயில் பற்றிய பதிவு அடுத்த பதிவில்

7 comments:

இரா. வசந்த குமார். said...

மிக்க மகிழ்வாக இருக்கின்றது நண்பரே...! கூடுதுறை கரையில் இருந்து மற்றுமொரு பதிவர் என்பதில்..!

வாழ்க...! வளர்க...!

SP.VR. SUBBIAH said...

///////வாருங்கள் அனைவரும் கூடுதுறையில் குளித்து வேதநாயகி
சமேத சங்கமேஸ்வரரை தரிசித்தி அவரின் அருள் பெருவோம் ////

தவறு இருக்கிறது ஸ்வாமி! நாயகியை நாயகனாக்குங்கள்!

கூடுதுறை said...

நன்றி வசந்த குமார். தற்போதுதான் என்னை கவனித்தீர்களா?

கூடுதுறை said...

இல்லை ஐயா! வேதநாயகி சமேத சங்கமேஸ்வரர்.
சமேத என்றால் உடன் இருக்கும் என்று அர்த்தம்...

நான் சொல்வது சரியா ஐயா?

ILA (a) இளா said...

அட நீங்க முந்திகிட்டீங்களே.. நான் ரொம்ப நாளாஆஆஆஆஆ நெனைச்சுட்டு இருந்தேன். :)

Subbiah Veerappan said...

வேதநாயகி உடனிருக்கும் சங்கமேஸ்வரர் என்று தமிழ்ப் படுத்துங்கள் ஸ்வாமி! குழப்பம் வராமல் இருக்கும்!

வேளராசி said...

சமேத = உடனமர் என்று கூறுவார்கள்.

Popular Posts