தற்போது நமது சமுதாயத்திற்கு மிகத்தேவையான ஒரு விவாதத்தை தொடங்குகிறேன் நமது சமுதாயத்தில் முற்காலத்தில் பெண்களுக்கு 10 முதல் 12 வயதிலேயே பால்ய விவாகம் (7வயதில் கூட) நடைபெற்றுக்கொண்டு இருந்தது...
அவ்வயதில் திருமணம் செய்யும் பெண்கள் உடல் அளவிலும் மற்றும் மன அளவிலும் வளரவேண்டி இருப்பதால் பல பெரியோர்களின் முயற்சியால் பெண்களின் திருமண வயது 18 என சட்டபூர்வமாக ஆக்கப்பட்டது.
அதனால் 18 வயது முன்னால் பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது மீறி செய்தால் அத்திருமணம் செல்லாது. பெண்கள் அவ்வயது வரை பெற்றோரின் பாதுகாப்பில்தான் இருக்கவேண்டும். இச்சட்டம் ஒரு சில சம்பவங்களை தவிர்த்து (ஏன் சில பெற்றோர்களால் நன்றாகவே மீறப்படுகிறது) செவ்வனே நிறைவேற்றப்படுகிறது.
மேலும், தற்போது திருமணங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும் சட்டம் இயற்றப்பட்டு ஒவ்வோரு மாவட்டமாக ஏற்கனவே நடைபேற்றத்திருமணங்கள் வீடுவீடாக சென்று பதிவு செய்யும் வேலை நடைபெற்றுவருகிறது.
விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் திருமணமானவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு நடக்கும் ஒவ்வோரு திருமணமும் அதாவது பெற்றோரால் பார்த்து நிச்சயமாக்கப்பட்டு கல்யாண மண்டபத்தில் நடைபெறும்
திருமணம், கோயில் நடக்கும் திருமணம், சர்ச்சில் நடக்கும் திருமணம், போலீஸ் ஸ்டேசனில் நடக்கும் திருமணம் அனைத்தும். (இதில் காதலர்கள் அதிகபட்சம் பதிவு அலுவலகத்தில் தான் செய்து கொள்கின்றனர்)
இதனால் இச்சட்டம் இண்டு இடுக்கில்லாமல் அமல் ஆக்கப்பட்டு விடும், இதனால் பெண்களுக்கும் சட்டபூர்வமான பாதுகாப்பும் முழு அளவில் கிடைத்துவிடும்.
இப்போது நான் விசயத்திற்கு வருகிறேன்.
பெண்கள் 18 வயதில் உடல் அளவில் திருமணத்திற்கு வளர்ந்துவிட்டாலும் மன அளவில் வளர்ந்து விடுகிறார்களா? என்பதே என் கேள்வி.
ஒரு சிலரினை தவிர மிகப்பெரும்பான்மையான பெண்கள் அவ்வயதில் மனதளவில் வளர்ச்சி பெருவதில்லை. மேலும் அவ்வயதில் போதுமான கல்வி அறிவும் பெருவதில்லை. அச்சூழ்நிலையில் அவர்களால் எந்தவோரு சுயமான முடிவும் சரியாக எடுக்க இயலாது.
கல்வியும் முற்காலத்தில் அந்தக்கால SSLC இருந்தாலே வாழ்க்கைக்கு மற்றும் குறைந்த பட்ச வாழ்க்கை சம்பாத்தியத்திற்கு போதுமானதாக இருந்தது. அது 18 வயதில் சாத்தியம் தான்...
ஆனால் தற்போது அப்படியா? இக்கால SSLC என்பது ஒன்றுமே இல்லை.
அதிகபட்சம் 18 வயதில் +2 முடிக்க முடியும்... அதை வைத்துக்கொண்டு பெண்கள் என்ன செய்ய இயலும். இக்காலத்தில் குறைந்தது ஒரு டிகிரி இருந்தால்தான் வாழ்க்கையை ஒட்ட இயலும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும்.
மிகப்பெரிய பதிவாக வருவதால் மீதிப்பதிவை அடுத்த பதிவில் இடுகிறேன்
இது சம்பந்தமாக ஆலோசனை சொல்பவர்கள் தயவுசெய்து பின்னுடமிடவும்
பாகம் 2
28 comments:
இதற்கு போய் அடுத்த பதிவு வரை காத்திருக்க வேண்டுமா? தாங்கள் பெண்களைப் பற்றி கூறுவதால், அவர்களுக்கு சாதகமாகவே சொல்லவும். இல்லாவிட்டால் எதைக்கொண்டு அடிப்பார்கள் என்பது உமக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பெண்களைப் பற்றி நானும் உடனே ஒரு பதிவு போடப்போறேன்.
சில விசயங்களுக்கு நேரம் கொடுத்துதான் பதிவிடவேண்டும்
ஒரு நாளைக்கு மூன்று பதிவிட காப்பி பேஸ்ட் பதிவில்லை இது
உங்கள் கருத்தை தெரிவுயுங்கள், மாற்ற வேண்டுமா? இல்லையா?
நன்றி
பதினெட்டு வயதில் மனவளர்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள் என்பது உண்மை தான்
ஆனால் இருபத்தொரு வயதில் அடைந்திருப்பார்கள் என்பது என்ன நிச்சியம். ஏன் ஆணின் திருமண வயது பற்றி யாரும் பேசுவதில்லை.
மொக்கை போதும் விசயத்திற்கு வருவோம்
பொதுவாக பெண்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.
ஆண்கள் மிக சுலபமாக ஏமாற்றி சென்று விடுகிறார்கள்.
அக்காலத்திலும் சரி ,இக்காலத்திலும் சரி பெண்கள் சீக்கிரமே திருமணம் செய்து வைக்க காரணம், அவர்கள் ஏதோ வினையை மடியில் கட்டி கொண்டு இருப்பது போல் உணருவது தான். உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் இன்று காதல் செய்யாத பள்ளி பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாமா இல்லையா.
காதல் தாரில்லை ஆனால் அந்த வயதில் அது சரியான முடிவாக இருக்காது இல்லையா. ஆனால் பெற்றோர்களுக்கு இது பெரிய தலைவலி இம்மாதிரி தவறு செய்யகூடாது என்பதற்காக பெற்றோர்களே செய்யும் தவறு தான் சிறுவயது திருமணம்
வால்பையன்
என்ன கொடுமை சார் இது!
பெண்களின் திருமண வயதை 15 ஆக மாற்ற வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்....
நீங்க மட்டும் 18 வயசு பொண்ணை திருமணம் செய்துவிட்டு பின் பெண்ணின் திருமண வயதை 21 ஆக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல.. நண்பா...!
நல்ல விஷயத்தை கூறினீர்கள்.
பதிவு நன்றாக உள்ளது.
இதை பற்றி நானும் யோசித்தேன்.
ஆனால் இது இளைஞிகளுக்கு கடும் கோபத்தை உண்டாக்கும்.
எனவே வெளியே செல்லும் போது பார்த்து செல்லுங்கள்...
நன்றி!
நன்றி karnnacar
இந்த பதிவே இளைஞிகளுக்காகத்தான் போடப்பட்டுள்ளது...
அவர்களால் ஒரு ஆபத்து வருமென்றால் அதை வரவேற்கிறேன்
//இந்த பதிவே இளைஞிகளுக்காகத்தான் போடப்பட்டுள்ளது...
அவர்களால் ஒரு ஆபத்து வருமென்றால் அதை வரவேற்கிறேன்//
இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது
உங்களை தமிழச்சி கிட்ட போட்டு கொடுக்கிறேன்
வால்பையன்
நன்றி வால்பையன் அவர்களே,
ஆரம்பத்தில் மொக்கை போட்டாலும் நல்ல வாதத்தை வைத்துள்ளீர்கள் அடுத்த பதிவில் மேலும் காணலாம்
//இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது
உங்களை தமிழச்சி கிட்ட போட்டு கொடுக்கிறேன் //
நான் உள்குத்து பதிவர்கள் இல்லை.அதற்கேல்லாம் பல மூத்தபதிவர்கள் இருக்கிறார்கள்
மங்களூர் சிவா கூட நட்சத்திர பதிவர் ஆகிவிட்டார். நாம் எப்போது ஆவது?
ஒரு சில வாரங்களில் ஜிம்ஷா நட்சத்திர பதிவர் ஆவார் என கேள்வி....
என்னப்பா!
ஜாக்கிரதை நாங்க லவ்வர்ஸ் கட்சி
தூக்கிடுவோம் ஜாக்கிரதை...
//மங்களூர் சிவா கூட நட்சத்திர பதிவர் ஆகிவிட்டார். நாம் எப்போது ஆவது?
ஒரு சில வாரங்களில் ஜிம்ஷா நட்சத்திர பதிவர் ஆவார் என கேள்வி....//
அவர் ஆகலாம், நீங்கள் கூட ஆகலாம்
நானெல்லாம் சும்மா, அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது
வால்பையன்
ஒரு சிலர் 30 வயதானாலும் மனவளர்ச்சி அடையாமல் இருக்கிறார்கள் அதற்கு வேண்டி திருமண வயதை 30 ஆகிவிடலாமா.
வாங்க அனானி இன்னும் எங்கே காணவில்லையே என்றுதான் பார்த்தேன்!!!
லோகநாதன் அவர்களெ தங்களின் கேள்விக்கு எனது தொடர்பதிவில் பதில் உள்ளது சற்று பொருத்திருங்கள்
//உங்களை தமிழச்சி கிட்ட போட்டு கொடுக்கிறேன் வால்பையன்//
எனக்கு இந்த விசயத்தில் தமிழச்சி அக்காவின் கிடைக்கும் என நம்புகிறேன்
தாரளமாக போட்டுக்கொடுங்கள்.
//பெண்களின் திருமண வயதை 15 ஆக மாற்ற வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்....
நீங்க மட்டும் 18 வயசு பொண்ணை திருமணம் செய்துவிட்டு பின் பெண்ணின் திருமண வயதை 21 ஆக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல.. நண்பா...!//
சுக்ரியா 15 ஏன் 12 போததா? வருகிறேன் அடுத்த தொடர்பதிவில்
/
வால்பையன் said...
பதினெட்டு வயதில் மனவளர்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள் என்பது உண்மை தான்
ஆனால் இருபத்தொரு வயதில் அடைந்திருப்பார்கள் என்பது என்ன நிச்சியம்.
/
ரிப்பீட்டேய்
/
கூடுதுறை said...
நான் உள்குத்து பதிவர்கள் இல்லை.அதற்கேல்லாம் பல மூத்தபதிவர்கள் இருக்கிறார்கள்
மங்களூர் சிவா கூட நட்சத்திர பதிவர் ஆகிவிட்டார்.
/
அவ்வ்வ்வ்
இதுல பெரிய உள்குத்து இருக்கும்போல இருக்கே!
/
ஒரு சில வாரங்களில் ஜிம்ஷா நட்சத்திர பதிவர் ஆவார் என கேள்வி....
/
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
எதையோ பெண்கள் சொன்னால் அடிப்பார்கள், உணர்ச்சிவசப்படுவார்கள், கோபப்படுவார்கள் என்று சிலர் சொல்லுகிறார்களே அதெல்லாம் என்ன? சொன்னால் பதில் எழுத வசதியாக இருக்கும். பெண்கள் என்ன உணர்ச்சி பிழம்புகளா? எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு அடிக்கவர? நாங்களும் சிந்தித்தே தான் பதில் எழுதுவோம்
18 வயது என்பதற்கே முக்கியமான காரணம் மன வளர்ச்சியல்ல, உடல் வளர்ச்சி. குழந்தைகளை உடலாலும் மனதாலும் தாங்கவும், பராமரிக்கவும் 18 வயதுக்கு மேல் தான் ஒரு பெண்ணால் முடியும். 40 வயதில் கூட மனவளர்ச்சியடையாத பெண்களும் இருக்கிறார்கள், ஆண்களும் இருக்கிறார்கள். ஏன் நம் தமிழ் நாட்டு மக்களில் அரசியல் முதிர்ச்சி சாகும் வரை கூட வருவதே இல்லை என்பது தேர்தல்களில் தெரிகிறதே???
பெண்களுக்கு 21 வயதில் திருமணம் செய்வதே உகந்தது. ஏனென்றால், திருமணத்துக்கு பிறகு பெண்கள் படிப்பதென்பது பகல் கனவு. குழந்தைகள் பிறந்தாலும் ஏறக்குறைய 90% பராமரிப்பு தாயையே சேர்கிறது, இதில் எங்கிருந்து படிப்பது?
21 வயதில் தான் குறைந்த பட்சம் 1 டிகிரியையாவது பெற முடியும். வெறும் +2 படிப்பில் என்ன கிடைக்கும்?
என்னைப் பொறுத்த வரை பெண்களுக்கு திருமண வயதை இருபத்தி ஒன்றாக்கக் கூடாதுங்க, ஓட்டுரிமயிலிருந்து எல்லாத்திலையும் பதினெட்டு வயதே சரிங்கும்போது இதில் மட்டும் ஏங்க மறுக்கனும்? ரெண்டாவது பதினெட்டு வயசு வரை உள்ளவங்கள நாம சிறுவர்கள்னு நம்ம நாட்டுல வகுத்து வெச்சிருக்கோம், அது பல வகையிலும் நன்மை செய்யுது. அடிப்படை பள்ளிக் கல்வி உட்பட பல விஷயங்களில் தேர்ச்சி பெற உதவியா இருக்கு. ஆனா பதினெட்டு வயசுக்கப்புறம் கல்வி தேவைனா அதை தன் விருப்பத்தின் பொருட்டு ஒரு பெண் தொடரலாமேயன்றி (தொந்தரவிருக்கும்போதும் துணிஞ்சு வற்புறுத்தி அந்தப் பெண் பெற வழிவகை என்னன்னு பார்க்கலாம்), இன்னொரு சட்டம் போட்டு அவங்களை ஒரு கூட்டிற்குள் அடைச்சு வெக்கக் கூடாது. பல சமயங்களில் பெற்றோர் அல்லது காடியன்களே பெண்ணிற்கு பிரச்சினையாக இருக்கிற காலக் கட்டத்தில், நாம் போடும் இந்த சட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கும். இன்னொரு விஷயம் இதை(திருமண வயதை இருபத்தொரு என ஆக்கும் சட்டம்) நீங்க குடும்ப கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகை விழிப்புணர்வோட ஒப்பிடலாம். குறிப்பிட்ட எந்த கடுமையான சட்டமும் இல்லாமலே, அதன் சாதகங்களை எடுத்துரைத்து பிரச்சாரம் செய்ததன் மூலமே தமிழகத்தில் எவ்வளவு நல்ல பயன் கிட்டியுள்ளது பாருங்கள். அதுப் போலவே பெண்கல்வியின் மகத்துவத்தை உணர்த்துவதன் மூலமும், பல விதமாக அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஊக்கத்தொகயோ இல்லை வேறொரு வகையிலோ உற்சாகப்படுத்த வேண்டும். மாறாக பதினெட்டு வயதிற்கு மேல் நீங்கள் படிப்பது கட்டாயம் என்று ஆக்குவது கட்டாய ராணுவ சேவையை போன்றதுதானேங்க, ஏன்னா ரெண்டுமே நல்ல விஷயம்தான், சமூக அக்கறை உள்ள விஷயங்கள்தான், ஆனா அதே சமயம் தனி மனித சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது போன்றதாகும் என்பது என் கருத்துங்க. பதினெட்டு வயது சட்டம் சரியானது காரணம் அதுவரை நம் நாட்டில் இரு பாலினருமே சிறுவர்கள், அதன் பிறகு அவர்களின் முதிர்ச்சி அவரவர் வாழ்க்கை சூழலை பொறுத்தது.
கடைசியா ஒன்னு சொல்றேன், பொதுவா ஏன் தெரியுமா வயதில் தன்னைவிட சிறிய பெண்ணை ஒரு ஆண் மணக்கிறான், இல்லை தன்னை விட வயதில் பெரிய ஆணை ஒரு பெண் மணக்கிறாள், ஆணிற்கு அந்த வயதில் உள்ள முதிர்ச்சியும், அறிவும் பெண்ணிற்கு அவனை விட சிறிய வயதிலேயே வந்துவிடுகிறது என்பதால்தான் :):):)
நான் மேல் சொன்ன சில பிரச்சினைகளுக்கு எப்படி திருமணமானாலே சரியாகிவிடும் என்று கூறுவது தீர்வாகிவிடாதோ, அதுப் போலவே இந்த சட்டத்தை போடுவதன் மூலம் ஒரு பயனும் இருக்காது. தனிப்பட்ட எந்த பாலினருக்கும் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமையை பதினெட்டு வயதில் அளித்தால் நன்று என்பது என் கருத்து.
கயல்விழி அக்காவிற்கு நன்றிகள் பலபல...
//பதினெட்டு வயதில் மனவளர்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள் என்பது உண்மை தான்
ஆனால் இருபத்தொரு வயதில் அடைந்திருப்பார்கள் என்பது என்ன நிச்சியம்.//
வால்பையன் சொன்னதும், அதையே ரிப்பீட்டு செய்த மங்களூர் சிவாவுக்கும் நன்றி!
இதனால் நான் சொன்னது போல 15 வயதில் திருமணம் செய்தாலும் தப்பில்லை என்பதே உண்மை!
ராசா,
மனவளர்ச்சி, விழிப்புணர்வு எல்லாம் இருக்கட்டும்.
திருமனத்திற்கு பின் தான் பாலுறவு என்ற நிலையில் இருக்கும் 99% பெண்களும் ஆண்களும் இருக்கும் கலாச்சார சிறையில், இதெல்லாம் பாலுணர்வு சார்ந்த தேடல்களுக்கு இன்னும் கடினமான பாதையை தான் உருவாக்கும் என்று சொன்னால் , நீங்கள் என்ன பதில் சொல்ல போகுறீர்கள், அன்பரே ?
வருகைக்கு நன்றி, களப்பிரரே
நீங்கள் சொல்லும் விசயத்தை யாரும் கட்டுப்படுத்த இயலாது. இருவரும் இசைந்துவிட்டால் யார் தடுத்தாலும் எந்த வயதானாலும் நிற்கமாட்டார்கள்....
நான் கேட்பது அதன்பின் என்ன என்பதினை பற்றித்தான்... எந்த வயதில் திருமணம் நடந்தால் ஒரு பெண்ணால் சமாளிக்கமுடியும் என்பதைத்தான்
rapp அவர்களே தங்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி...
தாங்களின் கருத்துக்களை அடுத்த தொடர்பதிவில் ஆலோசிப்போம்
நன்றி
//நீங்கள் சொல்லும் விசயத்தை யாரும் கட்டுப்படுத்த இயலாது. இருவரும் இசைந்துவிட்டால் யார் தடுத்தாலும் எந்த வயதானாலும் நிற்கமாட்டார்கள்....//
ஆகா என்னவொரு கண்டுபிடிப்பு...
//ஆகா என்னவொரு கண்டுபிடிப்பு.//
நன்றி அனானி! பெயர் போட்டால் கோபித்துக்கொள்ளமாட்டேன்
NOT ONLY WOMENS, GENTS ALSO TO BE CHANGE TO 25
Post a Comment