Saturday, October 18, 2008

சீன வானொலியின் இணையப்பக்கம் - தமிழில்

சீன வானொலியின் இணையப்பக்கம் தமிழில்

இன்று எதோ ஒன்றை கூகுலில் தேடிக்கொண்டிருந்த போது (எப்போதுமே அது தானே வேலை) ஒரு தமிழ் இணையப்பக்கம் கிடைத்தது...

அது சீன வானோலியின் தமிழ்மொழி இணையப்பக்கம். அதில் அவர்கள் வெறும் வானோலி விசயங்களை மட்டும் தரவில்லை. சீனாவின் செய்திகள், வெளிநாட்டுச்செய்திகள் மற்றும் செய்தி தொகுப்பு ஆகியவைகளை முகப்பில் கொண்டுள்ளது.

இதன் மூலம் சீனப்பார்வையில் உலகத்தினை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டும் வருகிறது.

மற்றும் வானோலியின் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவாக இணைப்பாக கொண்டுள்ளது. ஆனால் என்ன கஷ்டம் அது rm பைல் பார்மட்டில் உள்ளது. ரியல் பிளேயர் இருந்தால் இயக்கிக்கொள்ளலாம். இல்லையேல் ரியல் பிளேயர் கோல்டுற்க்கான பதிவிறக்க இணைப்பு கொடுக்கபட்டுள்ளது அதில் இறக்கிக்கொள்ளலாம்.

தமிழ் திரைப்பாடல்களின் தொகுப்பும் அதில் உள்ளது. அவற்றையும் தளமிறக்கிக்கொள்ளலாம்.

மேலும் ஒரு முக்கியமான விசயம் சீன மொழியை கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களூக்கு தமிழ் மூலமாக கற்றுக்கொள்ள அதில் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பாடங்கள் ஒலிப்பதிவாகவும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்பபயணக்கட்டுரைகள், பண்பாடும் கதையும்,சமுக வாழ்வு,அறிவியல் உலகம், சீன தேசிய இன குடும்பம், நல வாழ்வு பாதுகாப்பு, விளையாட்டுச்செய்திகள் எனவும் மற்றும் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றிய விசயங்களையும் உள்ளடக்கி ஒரு முழு போர்டலாகவே இயங்கி வருகிறது.

உண்மையில் சீனத்தைப்பற்றி அறிந்து கொள்ள முழுக்க முழுக்க தமிழிலேயே அமைந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

இதோ அதற்கான லின்க் இங்கே.

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பின்னுட்டமிடுங்கள்

14 comments:

பழமைபேசி said...

உபயோகமான தகவலுக்கு நாம எப்பவும் போடுவோம் சபாசு!

கூடுதுறை said...

சபாசு மட்டும் போதாது தமிழிசில் ஒரு குத்தும் பின்னுட்டமும் தேவை...

சபாசுக்கு நன்றி பாஸ்

ஜோதிபாரதி said...

பயனுள்ள தகவலை தமிழ் நல்லுலகுக்குத் தந்த கூடுதுறைக்கு நன்றி!
குறிப்பாக தமிழ் மூலம் சீனம்(மாண்டரின்) கற்றல், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

siva sinnapodi said...

இந்த இணையத் தளம் பலவருடங்களாக செயற்பாட்டில் உள்ளது நண்பரே நீங்கள்http://www.tamilnaatham.com/என்ற இணையத்தளத்துக்கு சென்றால் அனேகமான அனைத்து தமிழ் இணையங்களின் தொடுப்புகளையும் பெறலாம்
http://sivasinnapodi1955.blogspot.com

கூடுதுறை said...

//Blogger ஜோதிபாரதி said...
பயனுள்ள தகவலை தமிழ் நல்லுலகுக்குத் தந்த கூடுதுறைக்கு நன்றி!
குறிப்பாக தமிழ் மூலம் சீனம்(மாண்டரின்) கற்றல், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.//

ஆஹா நிஜமாகவே பயன்பெற்றால் மகிழ்ச்சிதான் ஜோதிபாரதி அவர்களே...

கூடுதுறை said...

//Blogger siva sinnapodi said...
இந்த இணையத் தளம் பலவருடங்களாக செயற்பாட்டில் உள்ளது நண்பரே //

நன்றி சிவா சின்னபொடி...குடத்தில் இட்ட விளக்காக இருந்தால் என்ன பயன்?

அதை குன்றில் ஏற்றும் சிறு முயற்சிதான் என்னுடையது...

உங்களுக்கு முன்னால் பின்னுட்டமிட்ட ஜோதிபாரதி கூறியுள்ளதை சற்று கவனியுங்கள்

Subash said...

அருமையான தகவல்களை தந்திருக்கிறார்கள்
குறிப்பாக அறிவியல் தகவல் சூப்பர். நான் அதில் துருவப்பகுதி ஒளி பற்றிய தொடரைவாசிக்க துவங்கிவிட்டேன்.
செம சுவாரசியமாக இருக்கிறது

இத்தளத்தை அறியத்தந்ததற்கு மிக்க மிக்க நன்றி

Subash said...

அட படங்கள் மட்டுமே தந்திருக்கிறார்கள்

அந்த வெளிச்சங்கள் பற்றிய விபரங்களை அறிய ஆர்வமாக இருக்கிறது

கூடுதுறை said...

//இத்தளத்தை அறியத்தந்ததற்கு மிக்க மிக்க நன்றி//

இவ்வளவு நன்றி எதற்கு சுபாஷ்...யாம் பெற்ற இன்பம் இவ்வுலகம் பெறட்டும் அவ்வளவே..

முடிந்தால் கொஞ்சம் கும்மி போட்டு சூடாக்குங்கள்

நசரேயன் said...

நல்ல தகவல் கூடுதுறை..மனமார்ந்த பாராட்டுக்கள்

கூடுதுறை said...

//Blogger நசரேயன் said...
நல்ல தகவல் கூடுதுறை..மனமார்ந்த பாராட்டுக்கள்//

நன்றி நசரேயன் அவர்களே...தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்

வால்பையன் said...

ரொம்ப தான் சிரமபட்ட்ருகிங்க போல

பழமைபேசி said...

//
கூடுதுறை said...
சபாசு மட்டும் போதாது தமிழிசில் ஒரு குத்தும் பின்னுட்டமும் தேவை...
//

அதெல்லாம் மொத ஆளா...

கிரி said...

இதை தான் கூறினீர்களா !

நல்லா இருக்கு

{உங்கள் பின்னூட்ட பெட்டி திறக்க நேரமெடுக்கிறது :-( }

வணக்கம்

எனது பதிவுகளை படிக்க வந்திருக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். தங்களின் கருத்துகளை பின்னுடமிடுங்கள். அதுவே எனக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும். நன்றி

google

Popular Posts

இங்கே உங்கள் கோப்புகளை அப்லோடு செய்து பத்திரப்படுத்துங்கள்

Get 4Shared Premium!

Total Pageviews