பெட்ரோல் டீசல் விலை குறையும் ?
உலக அளவில் நிலவி வரும் கடும் பொருளாதார சரிவினால் பெட்ரோலிய பொருட்களுக்கான உபயோகம் பெருமளவில் குறைந்து விட்டது. இதன் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துகொண்டே வருகிறது.
நியூயார்க் சந்தையில் அக்-27 அன்று அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 2.15 டாலர் குறைந்து 62 டாலராகியது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலையும் 2.35 டாலர் குறைந்து 59.70 டாலராகி விட்டது.
ஆயில் விலை குறைந்துகொண்டே வருவதை அடுத்து கவலை அடைந்த எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் அமைப்பான் ஓபக், நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தது.
அப்போதாவது ஆயில் விலை உயரும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் 147 டாலர் வரை விலை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் இப்போது 62 டாலர் விலைக்கு வந்துவிட்டது.
இந்த அளவுக்கு விலை குறைந்தால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று இந்திய பெட்ரோலிய அமைச்சர் கூறியிருந்தார். மேலும் கடந்த வாரத்தில் இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் எனவும் கூறியிருந்தார்.
விரைவில் விலைக்குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
நன்றி. சிஃப்பி
தெரிந்தது-தெரியாதது,அறிந்தது-அறியாதது,கேட்டது-கேள்விப்பட்டது,சொன்னது-சொல்லப்பட்டது,படித்தது-பதியப்பட்டது என அனைத்தும் கூடும் துறை இந்த கூடுதுறை. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இது சுப்பையா வாத்தியாரின் வகுப்பறை சம்பந்தமான பதிவு நம்மில் பலர் வாத்தியாரின் மாணவர்களாக இருந்து அவரது பாடங்களை படித்து வருகிறேம். சிலச...
-
கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்களாக எழுதி வருகிறா...
-
விண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்...
-
பிகேபி அட்டவணை 3 நம் கணினிக்கு மிகவும் தேவையான சிறு மென்பொருட்கள் கணினியில் இருக்கும் பைல்களின் அளவுகளை படங்களாக காண உடைந்த Rar பைல்களை பார்...
-
இணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமட...
-
பிகேபி அட்டவணை 2 வீட்டு உபயோக மென்பொருட்கள் வீட்டு பட்ஜெட் போடும் எக்ஸல் சீட் ஆன்லைன் விமானம் பயனர் கைடுகள் (User Guides) குழந்தைகளின் பார்...
-
சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா? தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன. அவற்றில் இரண்...
-
ஜாவா அப்ளிகேசன் மொபைல்களில் தமிழில் எழுத என்ன வழி உள்ளது? தற்போது நம் இந்திய திருநாட்டில் வீதிக்கு வீதி கூவி கூவி விற்கப்படும் GPRS மொபைல...
-
அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் அகத்திய மகரிஷி சித்தர் மார்க்கத்தில் பேரொளி நிலையினை பெற விரும்பும் சாதகன் அறிய வேண்டிய அடிப்படை ஞானத்தை...
-
பிகேபி அட்டவணை 4 கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்க...
46 comments:
//விரைவில் விலைக்குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
//
நடந்தாலும் நடக்கும்! ஆனா டீசல், பெட்ரோல் விலையேற்றத்தைக் காரணம் காட்டி ஏறின விலைவாசி குறையாதே!
உதாரணம் : ஆட்டோ கட்டணங்கள்!
(ஓகே ஓகே! நீங்க ஃபீல் பண்ணாதீங்க! நானே இதை டீல் பண்ணுறேன்)
//Blogger நாமக்கல் சிபி said...
//விரைவில் விலைக்குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
//
நடந்தாலும் நடக்கும்! ஆனா டீசல், பெட்ரோல் விலையேற்றத்தைக் காரணம் காட்டி ஏறின விலைவாசி குறையாதே!
உதாரணம் : ஆட்டோ கட்டணங்கள்!//
அதுக்கேல்லாம் சான்ஸே இல்லை...
சரி சரி நீங்களே டீல் பண்ணுங்க ஃபீல் ஒண்ணும் பண்ணல...
இதனால் நல்லெண்ணெய், கடலெண்ணை விலை குறையுமா?
//OpenID pathivu said...
இதனால் நல்லெண்ணெய், கடலெண்ணை விலை குறையுமா?//
அதுதான் குருட்டு எண்ணேய்தான் ஏற்கனவே குறைந்துவிட்டதே... (ஓ க்ருட் எண்ணெய்!)
will they do it..!!!
Thanks ZAIN...
//இதனால் நல்லெண்ணெய், கடலெண்ணை விலை குறையுமா?//
டிரான்ஸ்போர்ட்டேசன் காஸ்ட் குறைந்தால் கொஞ்சம்(கொசுறு மாதிரி) குறைய வாய்ப்பு உண்டு!
ஆனாலும் இதனால் டிரான்ஸ்போர்ட்டேசன் காஸ்ட் குறைந்தது என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!
//Thanks ZAIN...//
கேள்வி கேட்டா பதிலைச் சொல்லாம நன்றியாம்ல!
:)
வாத்தியாரின் தீர்க்கதரிசனம் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்!
//இதன் பலனை உங்கள் பதிவில் அனுபவிப்பீர்கள் என்று நினைக்கிறேன்//
ஐயா, இது தேர்தல் வரும் நேரம்.. கண்டிப்பாக குறைத்து தான் ஆக வேண்டும்..
குறையும்..
//நாமக்கல் சிபி said...
//Thanks ZAIN...//
கேள்வி கேட்டா பதிலைச் சொல்லாம நன்றியாம்ல!//
நமக்கேல்லாம் கேள்விக்குறி போட்டு இருந்தாத்தானே கேள்வி ஆகும்.
நம்ம ஆங்கில அறிவுக்கு ஆங்கில பின்னுட்டத்திற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லிவிட்டோம்ல...
//Blogger நாமக்கல் சிபி said...
வாத்தியாரின் தீர்க்கதரிசனம் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்!
//இதன் பலனை உங்கள் பதிவில் அனுபவிப்பீர்கள் என்று நினைக்கிறேன்//
நன்றி... ஹி..ஹி...
//Blogger உருப்புடாதது_அணிமா said...
ஐயா, இது தேர்தல் வரும் நேரம்.. கண்டிப்பாக குறைத்து தான் ஆக வேண்டும்..
குறையும்..//
எப்படி? டீசலுக்கு ஒரு ரூபாயும், பெட்ரோலுக்கு இரண்டு ரூபாயுமா?
ஏற்றியதைக் குறைக்க மனம் வராது!
நீங்கள் காண்பது பகற் கனவு!
//Blogger SP.VR. SUBBIAH said...
ஏற்றியதைக் குறைக்க மனம் வராது!
நீங்கள் காண்பது பகற் கனவு!//
கொஞ்சம் பாசிட்டிவ்வாகத்தான் பார்ப்போம் ஐயா?
பெட்ரொல் / டீஸல் விலை எங்கு குறையும் எதிர்பார்க்கின்றீர்கள்.. நம்ம ஊர்லயா? உருப்படாதது அணிமா அவர்கள் கூறியது போல் எலெக்ஷன் வருவதால் குறையலாம்.. மற்றபடி ... சான்ஸே இல்லை..
There is no chance to reduce orther rates.
//Anonymous Raghavan said...
பெட்ரொல் / டீஸல் விலை எங்கு குறையும் எதிர்பார்க்கின்றீர்கள்.. நம்ம ஊர்லயா? //
எதிர்பார்ப்பதில் என்ன தவறு? ராகவன்
இது நேற்றைய தகவல் க்ருட் ஆயில் 48 டாலர் வரை குறையும் வாய்ப்பு உள்ளது என்று.
நல்ல விடயம்தான். குறைத்தால் நல்லது.
இங்கே குறையும் என செய்தியும் வெளியிட்டுவிட்டார்கள். எபபோதென தெரியவில்லை.
///கூடுதுறை said...
எப்படி? டீசலுக்கு ஒரு ரூபாயும், பெட்ரோலுக்கு இரண்டு ரூபாயுமா?///
என்னங்க இது கூட தெரியாம இருக்கீங்க..
அது தான் நடக்கும்... பின்ன டீசலுக்கு 5vரூபாயும் பெட்ரோலுக்கு 10 ரூபாயுமா குறையும் ??
//// கூடுதுறை said...
நமக்கேல்லாம் கேள்விக்குறி போட்டு இருந்தாத்தானே கேள்வி ஆகும்.
நம்ம ஆங்கில அறிவுக்கு ஆங்கில பின்னுட்டத்திற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லிவிட்டோம்ல...////////
ஐயோ.. உங்களின் ஆங்கில புலமை கண்டு நான் வயிறு கலங்கி ஆய் போயிட்டேன் ..
என்ன ஒரு புலமை ??
( புலமை பக்கத்தில் கேள்விகுறி போட்டுள்ளேன் , அதனால் அதை கேள்வியாக பாவித்து பதில் சொல்ல வேண்டும் என கையில் அரிவாளுடன் கேட்டு ""கொல்"கிறேன் )
/// pathivu said...
இதனால் நல்லெண்ணெய், கடலெண்ணை விலை குறையுமா?////
ஏன் விளக்கெண்ணையை வுட்டுடீங்க??
அது தானே நம்ம மாதிரி புள்ளைங்களுக்கு முக்கியம் .. ( நான் விளக்கெண்ணை கிடையாது )
///SP.VR. SUBBIAH said...
ஏற்றியதைக் குறைக்க மனம் வராது!
நீங்கள் காண்பது பகற் கனவு!////
இது ஜோசியமா? இல்லை ஹாஸ்யமா??
/// Raghavan said...
பெட்ரொல் / டீஸல் விலை எங்கு குறையும் எதிர்பார்க்கின்றீர்கள்.. நம்ம ஊர்லயா? உருப்படாதது அணிமா அவர்கள் கூறியது போல் எலெக்ஷன் வருவதால் குறையலாம்.. மற்றபடி ... சான்ஸே இல்லை..////
இதோ பார்டா.. நம்ம கருத்தையும் ஒருத்தர் வழிமொழிஞ்சு இருக்காரு ??
அவரு நல்லவரா இல்ல காமெடி கீமெடி பண்றாரா??
நான் தான் 25
நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் வந்தே ஆக வேண்டும்.. இல்லை என்றால் ''அந்த'' குரூப் உங்களை தேடி வரும்..
ஓடி ஒளியலாமா ?/
நானும் எவ்ளோ நேரந்தான் தனியா அடிச்சு ஆடுறது ??
Blogger உருப்புடாதது_அணிமா said...
//// கூடுதுறை said...
நமக்கேல்லாம் கேள்விக்குறி போட்டு இருந்தாத்தானே கேள்வி ஆகும்.
நம்ம ஆங்கில அறிவுக்கு ஆங்கில பின்னுட்டத்திற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லிவிட்டோம்ல...////////
ஐயோ.. உங்களின் ஆங்கில புலமை கண்டு நான் வயிறு கலங்கி ஆய் போயிட்டேன் ..//
அட நம் ஆங்கில அறிவுக்கு இவ்வளவு சக்தியா?
// என்ன ஒரு புலமை ??//
யாருங்க அவரு புலமை புதிய பதிவரா?
// என்ன ஒரு புலமை ??//
யாருங்க அவரு புலமை புதிய பதிவரா?///
ஆமா, அவுர கூடுதுறைன்னு கூட சொல்லுவாங்க..
//Blogger உருப்புடாதது_அணிமா said...
ஓடி ஒளியலாமா ?/
நானும் எவ்ளோ நேரந்தான் தனியா அடிச்சு ஆடுறது ??//
நீங்க போட்ட குத்தாட்டம் தாங்க முடியாம எனது பி.ஸி. தூக்கு மாட்டிக்கொண்டது. (ஹெங்க் என்றால் தூக்கு தானே? நான் கொஞ்சம் ஆங்கிலத்தில் வீக் ல....
///அட நம் ஆங்கில அறிவுக்கு இவ்வளவு சக்தியா?///
பேதி போனா , இதுக்கு பேரு சக்தியா உங்க ஊருல??
///கூடுதுறை said...
நீங்க போட்ட குத்தாட்டம் தாங்க முடியாம எனது பி.ஸி. தூக்கு மாட்டிக்கொண்டது. (ஹெங்க் என்றால் தூக்கு தானே?///
குத்தாட்டம் என்றால் நினைவுக்கு வருவது நமிதாவா? இல்லை ரகசியாவா??
///நான் கொஞ்சம் ஆங்கிலத்தில் வீக் ல....///
நாங்க எல்லாம் அதுல்ல வீக் இல்ல மந்த் (Month)
//Blogger உருப்புடாதது_அணிமா said...
///அட நம் ஆங்கில அறிவுக்கு இவ்வளவு சக்தியா?///
பேதி போனா , இதுக்கு பேரு சக்தியா உங்க ஊருல??//
அட இது கூடத்தெரியதா? பேதி என்பது அணிமா ஆப்பிரிக்க ஓட்டலில் கண்ட ஆப்பிரிக்க பதார்த்தங்களை சாப்பிட்டுவிட்டு நடுராத்திரியில் வயிரு பிடுங்கி டாய்லட்டுக்கு ஓடவைப்பதுதான் பேதி...
ஆய் என்பது ஒருவரது திறமையை பார்த்து பயந்து போய் வருவது...
சே... எதுக்கேல்லாம் விளக்கம் கொடுப்பது?
Blogger உருப்புடாதது_அணிமா said...
///கூடுதுறை said...
குத்தாட்டம் என்றால் நினைவுக்கு வருவது நமிதாவா? இல்லை ரகசியாவா??
ச்...சி... ரொம்ப பழசு...இப்பெல்லாம் நிகிதா தான்... சரோஜா பாக்கலய?
///நான் கொஞ்சம் ஆங்கிலத்தில் வீக் ல....///
நாங்க எல்லாம் அதுல்ல வீக் இல்ல மந்த் (Month)
நிங்க மந்த் என்றால் நான் Year...
///கூடுதுறை said...
அட இது கூடத்தெரியதா? பேதி என்பது அணிமா ஆப்பிரிக்க ஓட்டலில் கண்ட ஆப்பிரிக்க பதார்த்தங்களை சாப்பிட்டுவிட்டு நடுராத்திரியில் வயிரு பிடுங்கி டாய்லட்டுக்கு ஓடவைப்பதுதான் பேதி...////
ஆய் என்பது ஒருவரது திறமையை பார்த்து பயந்து போய் வருவது...
சே... எதுக்கேல்லாம் விளக்கம் கொடுப்பது?/////
உங்கள் விளக்கத்தை கண்டு மீண்டும் உங்களின் புலமையை கண்டு டாய்லட் பக்கம் ஒதுங்குக்கிறேன் ..
////கூடுதுறை said...
ச்...சி... ரொம்ப பழசு...இப்பெல்லாம் நிகிதா தான்... சரோஜா பாக்கலய?////
ஒ.. அந்த பாட்டுல ஆடுறது தான் குத்தாட்டமா?? இவ்ளோ நாளா தெரியாம போச்சே??( ஆனாலும் அந்த பாட்டு நெம்ப நல்லா இருக்கும் )
//உங்கள் விளக்கத்தை கண்டு மீண்டும் உங்களின் புலமையை கண்டு டாய்லட் பக்கம் ஒதுங்குக்கிறேன் ..//
அட இந்த சப்ஜெக்ட விடுங்க தல....எவ்ளோ முக்கியமான நாட்டுக்கு தேவையான பதிவு போட்டு இருக்கிறேன்...
நாலு பெரு வந்து இதைப்படித்தா அவங்களுக்கு நாத்தம் தாங்கமுடியாதல்ல...?
/// கூடுதுறை said...
/// நாங்க எல்லாம் அதுல்ல வீக் இல்ல மந்த் (Month)
நிங்க மந்த் என்றால் நான் Year...///
நீங்க இயர் ( YEAR) என்றால் நான் LEAP YEAR
////கூடுதுறை said...
அட இந்த சப்ஜெக்ட விடுங்க தல....எவ்ளோ முக்கியமான நாட்டுக்கு தேவையான பதிவு போட்டு இருக்கிறேன்...
நாலு பெரு வந்து இதைப்படித்தா அவங்களுக்கு நாத்தம் தாங்கமுடியாதல்ல...?////
மன்னிச்சுடுங்க..
நான் எப்பவுமே இப்படி தான்.. ( மொக்கை பதிவு மட்டும் இல்ல, மொக்க பின்னூட்டமும் போடுவேன் )
சரி இப்போ சொல்லுங்க குறையுமா?? குறைந்தால் எவ்ளோ குறையும் ..
//சரி இப்போ சொல்லுங்க குறையுமா?? குறைந்தால் எவ்ளோ குறையும் ..//
ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று சொல்லியிருக்காங்க.. எப்படியும் சனிக்கிழமைக்குள் சொல்லிவிடுவார்கள்...
உங்களூக்குதான் கவலையில்லை...38 ரூபாய் இருந்த டாலர் 50 ரூபாய் ஆகிவிட்டதே??
ENJOY....
ஏன் நாடு மாறிவிட்டீர்கள்....
தான்சானியாவில் இருப்பீங்க போல ?
///கூடுதுறை said...
ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று சொல்லியிருக்காங்க.. எப்படியும் சனிக்கிழமைக்குள் சொல்லிவிடுவார்கள்...
உங்களூக்குதான் கவலையில்லை...38 ரூபாய் இருந்த டாலர் 50 ரூபாய் ஆகிவிட்டதே??
ENJOY....///
உண்மை தான் நண்பரே..
சென்ற வருடம் 39 என்ற அளவில் தான் இருந்தது.. ஏதோ இந்த வருடம் பரவில்லை..
( நான் இப்போ கூட கொஞ்ச டாலர்ஸ் அனுப்பி இருக்கேன் இந்தியாவிற்கு )
////கூடுதுறை said...
ஏன் நாடு மாறிவிட்டீர்கள்....
தான்சானியாவில் இருப்பீங்க போல ?////
இந்த IP Location தொல்ல தாங்க முடியலப்பா..
எங்க போய் ஒளிஞ்சாலும் கண்டு புடிச்சுடுறாங்க . ..
நீங்கள் தூக்கத்தில் இருந்து சீக்கிரம் எழுவது நல்லது!
அப்துல்கலாம் கனவு காண சொல்லிவிட்டார் என்பதற்காக எப்போது பார்த்தாலும் கனவா
அட வாத்தியாரும் நானும் இங்கே ஒத்து போகிறோமே
அப்படியா இராசா?
Post a Comment