1. பார்த்த மனிதர்களையே திரும்பத்திரும்பப் பார்ப்பதால்
2. செய்யும் பணியிலே எந்தவிதமான மாறுதலும் இல்லாததால்
3. மிகுதியான ஓய்வுநேரம் - அந்த ஓய்வு நேரத்தை நல்ல பணியிலே செலவு செய்வதில் ஆர்வமின்மை.
4. சோம்பேறித்தனம் - இது இருப்பவர்கள் நிச்சயம் போரடிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள்
5. பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இல்லாமல் - தனியே- இருப்பவர்களுக்கு மட்டும்தான் போரடிக்குமா? இல்லை. ஒரு குழுவாக - கூட்டமாக - இருப்பவர்களுக்கும்கூட பல நேரங்களில் போரடிக்கிறதே!
6. காதலுக்காக - காதலி(லன்) வருகைக்காக காத்திருப்பவர்களுக்கும் போரடிக்கிறது
7. போர்க்களத்தில் உயிரைப் பணயம் வைத்து சண்டை போடும் மாவீரனுக்கும்கூட போர் முடிந்தபிறகு வரும் அமைதியைக்கண்டால் போர்தான்.
8. அமைதியை விரும்பி வனம் சென்று தவம் செய்யும் முனிவர்களுக்குப் போரடித்ததால்தானே குட்டிக்குட்டிக் கதைகளாக பஞ்சபாண்டவர்களுக்குச் சொன்னார்கள்.
9. செய்வதற்கு 1000 வேலைகள் இருந்தும், எந்த வேலையும் செய்யத்தோணாமல் மோட்டுவளையைப் பாதுகாப்பவருக்கு மட்டும்தான் போரடிப்பதன் அருமை புரியும்.
10. பரீட்சைத்தாள் விடை திருத்துபவனுக்குப் போரடித்தால் என்ன செய்வான்? "படித்துப் பாராமலேயே - குத்துமதிப்பாக மதிப்பெண் போடுவான்". நன்றாகப் படித்து அருமையாக எழுதிய அறிவழகனுக்கும் 65 சதவீதம்தான். ஒன்றுமே படிக்காமல், ஏனோதானோ என்றெழுதிய ஏகாம்பரத்துக்கும் 65 சதவீதம்தான்.
11. போரடிப்பதிலிருந்து தப்பிப்பதற்காக சுற்றுலாப்பயணம் செய்கிறான் சுரேசு. ஆனால் அவனுக்குப் பேருந்துப்பயணம் போரடிக்கிறது. அவனால் அவனுடைய இருக்கையிலே சும்மா இருக்க முடியவில்லை. முன்பக்கத்திலே கண்டதையும் கிறுக்குகிறான்.
12. அழகான மனைவி - அருமையான வேலை - அறிவான குழந்தை(கள்) - கண்ணெதிரே கடற்கரை - காதை வருடும் மெல்லிசை - மேனியைத் தழுவிச்செல்லும் மெல்லிய தென்றல் - இவையெல்லாம் இருந்தும் அதை அனுபவிக்காதவனுக்கு அடிக்கிறது போர். இவனுமேகூட சில நேரங்களில் 'என்ன வாழ்க்கை என்று' சலித்துக்க்கொள்கிறான்.
13. கோவிலுக்குச் சென்றால் மனநிம்மதி கிடைக்கும் என்று ஆலயதரிசனம் செய்யக்கிளம்புகிறாள் கோகிலா. அவளது நிம்மதி ஆலயத்தின் வாசலிலேயே தொலைகிறது. பிச்சைக்காரர்களின் தொந்தரவால். அவளும் இன்முகத்துடன் சில்லறைகளை அவர்களிடம் தருகிறாள்.திடீரென்று அவள் மனதில் மின்னல் வெட்டு - பிச்சையெடுப்போனின் கிழிந்த உடைகளைக் காண்கிறாள். "தான் அடுத்த சென்மத்திலே இப்படி ஒரு பிச்சைக்காரியாக(காரனாக) - பிறந்துவிடுவோமோ?" எனக் கவலை கொள்கிறாள். இன்று இருக்கும் இனிமையை அனுபவிப்பது மறந்து அடுத்த சென்மத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துக் கவலைப்படுகிறாள். இப்போது சாமிதரிசனமே கோகிலாவுக்கு பெரும் போரடிக்க ஆரம்பிக்கிறது.
14. கைதேர்ந்த மென்பொருளாளன் கணேஷ். அவன் வளைக்கிற வளைப்புக்கு 'கூகுளும்' வளைகிறது. புராஜக்டும் முடிகிறது. பெஞ்சில் இருக்கிறான். அப்போது அவனுக்கும் அடிக்கிறது மிஸ்டர். அன்ட் மிஸ்ஸஸ் போர்.
15. அரசியல்வாதிக்கோ லஞ்சம் வாங்கிவாங்கிப் போரடித்துப்போகி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாமே என்று யோசிக்கிறான். என்ன பலன் அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடுகிறது.
16. ஐந்தாம் வகுப்புக்கான அறிவியலை - 15 வருடமாகத் திரும்பத்திரும்பப் பாடமெடுக்கிறார் ஆசிரியர் 'ஆடியபாதம்'. அவருக்கு அறிவியல் போரடித்தால் என்ன செய்யமுடியும். விதியைத்தான் நொந்துகொள்ள முடியும். ஏன் என்றால் அறிவியல் பாடத்தில்தான் மிதப்பு விதி, நியூட்டன் விதி, பொருண்மை அழியா விதி - எனப் பலப்பல விதிகள் உள்ளன.
17. அது மெதுவாக ஓடிவரும் போட்டி. யார் கடைசியாக மெதுவாக ஓடி வருகிறாரோ அவர்களுக்கே பரிசு கொடுப்பார்கள். நம்ம 'தலை'க்கோ திடீரென்று போரடிக்க ஆரம்பிக்கிறது. என்ன செய்தார்? மடமடவென்று வேகமாக ஓடி முதலில் வந்துவிட்டார்.
18. இராணுவத்தில் இருப்பவனுக்கு துப்பாக்கி சுடாமல் சும்மா இருப்பதென்றால் போர். அவன் என்ன செய்தான்? "தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டான்".
19. கண்டிப்பாக இதைப்படித்த உங்களுக்கும் போரடித்து இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனது போரடித்தல் வியாதியை உங்களுக்குப் பரப்பிவிட்டுவிட்டேன்.
20. இதையும் மீறி உங்களுக்குப் போரடிக்கும்போதெல்லாம் - இந்தக்கட்டுரையை யாருக்காவது ஈ-மெயில் அனுப்பிக்கொண்டே இருங்கள்.
100% சுத்தமான அக்மார்க் மொக்கைப் பதிவு இதுவென ஐ எஸ் ஓ 9002 வாங்குவதற்காகவே எழுதியுள்ளேன். மொக்கைப்பதிவுகளுக்கு என தனியாக விருது வழங்குபவர்கள் இதைப் பரிசீலனை செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப்பதிவு சுத்தமான கலப்படமில்லாத காப்பி பதிவு, கணினி ஞானி திரு தமிழ்நெஞ்சம் அவர்கள் போன வருடப்பதிவில் வந்துள்ளது... நான் படிக்காதது.. என்னைப்போல் பலரும் படிக்காமல் இருப்பார்கள் என்பதால் அவரது அனுமதியின்று வெளியடப்படுகிறது.
எனக்கு எதாவது ஐ.எஸ் ஓ 4501 வது தருவார்களா?
78 comments:
அட போங்கப்பா
ரொம்ப தான் போரடிக்கிரிங்க
//Blogger வால்பையன் said...
அட போங்கப்பா ரொம்ப தான் போரடிக்கிரிங்க//
அதுக்குத்தான் இந்த யோசனையை கொடுத்து இருக்கோம்ல...
இதையும் மீறி உங்களுக்குப் போரடிக்கும்போதெல்லாம் - இந்தக்கட்டுரையை யாருக்காவது ஈ-மெயில் அனுப்பிக்கொண்டே இருங்கள்.
சரி பட்டம் எப்படி? கணினி ஞானி தமிழ்நெஞ்சம்...
Enna Kodumai Sir idhu?
கணினி ஞானி
By
மொக்கை சாணி
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தமிழ்மணத்தில் டேஷ்[ணி]ப் பதிவுகள் வந்தன. இப்போது வேண்டாமே?
//கணினி ஞானி
By
மொக்கை சாணி//
இது தப்பு...
இப்படி வேண்டுமானல் வைத்துக்கொள்ளலாம்....மொக்கை சாணி by கணினி ஞானி...
சரியா?
//Blogger தமிழ்நெஞ்சம் said...
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தமிழ்மணத்தில் டேஷ்[ணி]ப் பதிவுகள் வந்தன. இப்போது வேண்டாமே?//
நீங்க என்ன சொல்றிங்கனு புரியல... நான் சின்னப்பையன்... இருங்க வால்பையன் கிட்ட கேட்கிறேன்...
ஆமாம். ரொம்ப போரடிக்கிறது. தமிழ்மணம் படிப்பதை நிறுத்தி விடலாமா என்று மோட்டு வளையை பார்க்கிறேன்.
ஆஹா.. இது bore உடனான போர்.. :)
ஆஹா.. இது bore உடனான போர்.. :)
நேரத்தை திரும்பப் பெறமுடியாது. திட்டமிட்டு நேரத்தைச் சரியாக உபயோகிப்பவனுக்கு இந்தப் பிரச்சினையே இருக்காது!
எப்படி ,,,,,இப்படிஎல்லாம் மேட்டர் சிக்குது உங்களுக்கு ?
//Blogger யோசிப்பவர் said...
ஆமாம். ரொம்ப போரடிக்கிறது. தமிழ்மணம் படிப்பதை நிறுத்தி விடலாமா என்று மோட்டு வளையை பார்க்கிறேன்.//
இதுவும் நல்ல யோசனைதான்...
//Blogger ஆ.கோகுலன் said...
ஆஹா.. இது bore உடனான போர்.. :)//
ஆம் யார் வெற்றி பெறுவார்கள் என பார்ப்போம்
//Blogger SP.VR. SUBBIAH said...
நேரத்தை திரும்பப் பெறமுடியாது. திட்டமிட்டு நேரத்தைச் சரியாக உபயோகிப்பவனுக்கு இந்தப் பிரச்சினையே இருக்காது!//
வருகைக்கு நன்றி ஐயா...
//Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...
எப்படி ,,,,,இப்படிஎல்லாம் மேட்டர் சிக்குது உங்களுக்கு ?//
ரொம்பத்தான் நல்லாயீருக்கு....நானே மேட்டர் கிடைக்கமே தமிழ்நெஞ்சம் அவர்களிடம் கடன் வாங்கி போட்டுள்ளேன்
ஒரு மனிதனுக்கு எதனால் போரடிக்கிறது? /////
என்னுடைய ( அல்லது உங்களுடைய )பதிவுகள் படிக்குறதனால இருக்குமோ???
//// பார்த்த மனிதர்களையே திரும்பத்திரும்பப் பார்ப்பதால் ///
படிச்ச பதிவுகளையே படிக்கும் போதும் ( இந்த பதிவு மாதிரி)) கோச்சுக்காதீங்க
//மிகுதியான ஓய்வுநேரம் - அந்த ஓய்வு நேரத்தை நல்ல பணியிலே செலவு செய்வதில் ஆர்வமின்மை. ////
நல்ல பணியா ??
அப்படின்னா என்ன????
///சோம்பேறித்தனம் -///
என்ன பத்தி சொல்லலையே ???
/////இது இருப்பவர்கள் நிச்சயம் போரடிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள் /////
அவ்வ்வ்வ்வ்வ்வ் ..
ஏன் இப்படி என் மானத்த வாங்குகிறீர்கள்
பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இல்லாமல் - தனியே- இருப்பவர்களுக்கு மட்டும்தான் போரடிக்குமா?/////
அப்படியா??? சொல்லவே இல்ல
ஒரு குழுவாக - கூட்டமாக - இருப்பவர்களுக்கும்கூட பல நேரங்களில் போரடிக்கிறதே! //////
சரி இப்போ என்ன சொல்ல வரீங்க.. தனியா இருக்கனுமா? இல்ல கூட்டத்தோட கோவிந்தா போடனுமா???
காதலுக்காக - காதலி(லன்) வருகைக்காக காத்திருப்பவர்களுக்கும் போரடிக்கிறது //////////
என்ன அனுபவமா??? வீட்ல சொல்லட்டுமா???
போர்க்களத்தில் உயிரைப் பணயம் வைத்து சண்டை போடும் மாவீரனுக்கும்கூட போர் முடிந்தபிறகு வரும் அமைதியைக்கண்டால் போர்தான். ////
போர் முடிந்தால் போர் தான்... என்ன பொருத்தம்..
ஆமாம், போர் முடிந்தால் சந்தோசம் தானே வரணும்?? எப்படி அது போர் அடிக்கும்???
இது தவறு?? வண்மையாக கண்டிக்கிறேன்..
/////அமைதியை விரும்பி வனம் சென்று தவம் செய்யும் முனிவர்களுக்குப் போரடித்ததால்தானே//////
அவர்கள் தான் அமைதியை தேடி போனவர்கள் தானே, அப்புறம் எப்படி அது போராகும்??
என்னவோ போங்க? இது எல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு நமக்கு ஒன்னிம் இல்ல..
செய்வதற்கு 1000 வேலைகள் இருந்தும், எந்த வேலையும் செய்யத்தோணாமல் மோட்டுவளையைப் பாதுகாப்பவருக்கு மட்டும்தான் போரடிப்பதன் அருமை புரியும்..////
இது நூறு சதவீதம் நான் தான் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்...
படித்துப் பாராமலேயே - குத்துமதிப்பாக மதிப்பெண் போடுவான்". நன்றாகப் படித்து அருமையாக எழுதிய அறிவழகனுக்கும் 65 சதவீதம்தான். ஒன்றுமே படிக்காமல், ஏனோதானோ என்றெழுதிய ஏகாம்பரத்துக்கும் 65 சதவீதம்தான்.////////
ஆனால் எனக்கு மட்டும் எப்படி 85சதவீதம்
இருக்கையிலே சும்மா இருக்க முடியவில்லை. முன்பக்கத்திலே கண்டதையும் கிறுக்குகிறான்.//////
ஒ.. அது நீங்க தானா? நான் அந்த பஸ்ல நீங்க கிறுக்குனத படிச்சேன்
அழகான மனைவி - அருமையான வேலை - அறிவான குழந்தை(கள்) - கண்ணெதிரே கடற்கரை - காதை வருடும் மெல்லிசை - மேனியைத் தழுவிச்செல்லும் மெல்லிய தென்றல்/////
இங்க எனக்கு எல்லாம் கல்யாணம் அப்படின்னு ஒன்னு நடக்குமான்னே தெரில, இதுல இது வேறயா???
கோவிலுக்குச் சென்றால் மனநிம்மதி கிடைக்கும் என்று ஆலயதரிசனம் செய்யக்கிளம்புகிறாள் கோகிலா. ///////
எத்தன பெரியார் வந்தாலும் இவங்கள திருத்த முடியாது போல இருக்கே??
மூட நம்பிக்கை
இங்க தனி ஆளா தாக்குதல் நடத்திகுட்டு இருக்கேன்.. யாருமே இல்லியா??
பழைய தமிழகத்துல யானைக் கட்டி போரடிச்சாங்க.
இப்ப பதிவு போட்டு போரடிக்கிறாங்க. நல்ல முன்னேற்றம்! :-))
//Blogger உருப்புடாதது_அணிமா said...
இங்க தனி ஆளா தாக்குதல் நடத்திகுட்டு இருக்கேன்.. யாருமே இல்லியா??//
தனியாகவே இவ்வளவு கும்மி போட்ட அணிமாவிற்கு கும்மிதிலகம் என்ற பட்டம் கொடுத்து கவுரவிக்கிறேன்
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
கும்மிதிலகம் அணிமா வாழ்க
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல !!!!!!!!
ஃஃஒரு மனிதனுக்கு எதனால் போரடிக்கிறது? ஃஃ
எப்ப போரடிக்குதுனு நினைக்கிறானோ, அப்பதா போரடிக்க ஆரம்பிக்குது!!!
ஹிஹி
ஃஃபார்த்த மனிதர்களையே திரும்பத்திரும்பப் பார்ப்பதால் ஃஃ
சார்,
வகுப்பில பொண்ணுங்கள பாக்கறது இதுல விதிவிலக்கு!!!!!!!!
ஃஃ செய்யும் பணியிலே எந்தவிதமான மாறுதலும் இல்லாததால் ஃஃ
ரோபோ மாதிரினு சொல்ல வரீங்க.
ஆனா இப்ப எல்லாருமே ரோபோவதா ஆவலோட எதிர்பாக்கிறாங்களே!!!!!!!
ஃஃ மிகுதியான ஓய்வுநேரம் - அந்த ஓய்வு நேரத்தை நல்ல பணியிலே செலவு செய்வதில் ஆர்வமின்மை. ஃஃ
ஹாஹா
அது வேற ஒண்ணுமில்ல.
ஓய்வு நேரத்தை என்ன நல்ல பணியில் செலவிடுவதென பிசியாக ஜோசிப்பதை ஓய்வு என சொல்றீங்க
ஃஃசோம்பேறித்தனம் - இது இருப்பவர்கள் நிச்சயம் போரடிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள் ஃஃ
ஆஹா
போரடிக்கறதும் ஒரு வேலைனுதானே நினச்சிட்டிருந்தேன்!!!!!!!!1
ஃஃகாதலுக்காக - காதலி(லன்) வருகைக்காக காத்திருப்பவர்களுக்கும் போரடிக்கிறது ஃஃ
ஆஹா
அது சுகமான வலிங்கறாங்களே!!!!!!!!
வருகைக்கு நன்றி சுபாஸ்...
தனியாக கும்மியா?
ஃஃஅமைதியை விரும்பி வனம் சென்று தவம் செய்யும் முனிவர்களுக்குப் போரடித்ததால்தானே குட்டிக்குட்டிக் கதைகளாக பஞ்சபாண்டவர்களுக்குச் சொன்னார்கள். ஃஃ
ம்ம்ம்மம்
போரடிக்கற ஆசிரயர்களும் இப்படித்தா இந்த கதைகளேல்லா நமக்கு சொல்லி அறுக்கறாங்க.
ம்ம் இப்பதா புரிஞ்சுது எங்க ஆரம்பிச்சிருக்குனு
இதோ எனது புதிய பதிவு இதில் உங்களை ஆசிரியர் ஆக்க விரும்புகிறேன்.... இணைகிறீர்களா?
http://paakeypa.blogspot.com/2008/10/blog-post_3287.html
ஃஃசெய்வதற்கு 1000 வேலைகள் இருந்தும், எந்த வேலையும் செய்யத்தோணாமல் மோட்டுவளையைப் பாதுகாப்பவருக்கு மட்டும்தான் போரடிப்பதன் அருமை புரியும். ஃஃஃ
அனுபவம் எப்படி பேசுது பாருங்க!!!!!!!
இப்பொது இங்கு மின்வெட்டு ஏற்படும் வருகிறேன்...
நன்றி...
ஃஃபரீட்சைத்தாள் விடை திருத்துபவனுக்குப் போரடித்தால் என்ன செய்வான்? "படித்துப் பாராமலேயே - குத்துமதிப்பாக மதிப்பெண் போடுவான்". ஃஃ
ஆஹா.
இப்படித்தானே நம்ம வண்டி ஓடுது
ஃஃஆனால் அவனுக்குப் பேருந்துப்பயணம் போரடிக்கிறது. அவனால் அவனுடைய இருக்கையிலே சும்மா இருக்க முடியவில்லை. முன்பக்கத்திலே கண்டதையும் கிறுக்குகிறான். ஃஃஃ
சின்னப்பையனா இருநற்தா அப்படித்தா
ஃஃபுராஜக்டும் முடிகிறது. பெஞ்சில் இருக்கிறான். ஃஃஃ
இந்த டைமில எனக்கு அடிக்கும் மிஸ்டர் அன்ட் மிஸஸ் கேஷ் செக்
ஃஃஅரசியல்வாதிக்கோ லஞ்சம் வாங்கிவாங்கிப் போரடித்துப்போகி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாமே என்று யோசிக்கிறான். என்ன பலன் அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடுகிறது. ஃஃ
ஹிஹிஹி
ஃஃ"தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டான்".ஃஃ
ம்ம்ம்
தோசை, ரொட்டி இப்படி ஏதாவது சுட்டிருக்கலாம்
ஃஃஎனக்கு எதாவது ஐ.எஸ் ஓ 4501 வது தருவார்களா?ஃஃ
ஆஹா
தந்தாப்போச்சு!!!
நானும்ட ரெகமன்ட் பண்றேன் தல!!!
மீ த 55
2 நாளில் 1000 வாசகர்களுக்கு மேல் ஹிட் அடித்துவிட்ட அண்ணன், கூடுதுறைக்கு பாராட்டு விழா..
அனைவரும் வருக..
///கண்டிப்பாக இதைப்படித்த உங்களுக்கும் போரடித்து இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.///
தெரிஞ்சுமா இந்த கொலை வெறி...
தம்பி ( சுபாஷ் ) உடையான் மறுமொழிக்கு அஞ்சான் ...
இதையும் மீறி உங்களுக்குப் போரடிக்கும்போதெல்லாம் - இந்தக்கட்டுரையை யாருக்காவது ஈ-மெயில் அனுப்பிக்கொண்டே இருங்கள். ////
இத அனுப்புறதுக்கே போர் அடிக்குது, என்ன பண்ணலாம் , அதையும் நீங்களே சொல்லிடுங்க..
///////
கும்மிதிலகம் அணிமா வாழ்க////////
என்னது இது?? யாராவது அரசியல் கட்சி ஆரம்பிச்சுட்டாங்களா ??
//////கூடுதுறை said...
இதோ எனது புதிய பதிவு இதில் உங்களை ஆசிரியர் ஆக்க விரும்புகிறேன்.... இணைகிறீர்களா?////
ஆசிரியர் கூடுதுறைக்கும்,
ஆசிரியர் வால்பையனுக்கும் வாழ்த்துக்கள்...
///Subash said...
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல !!!!!!!!///
அது எப்படிப்பா, நான் எங்க போனாலும் வந்து பதில் தாக்குதல் நடத்துற??
///Subash said...
ஃஃபார்த்த மனிதர்களையே திரும்பத்திரும்பப் பார்ப்பதால் ஃஃ
சார்,
வகுப்பில பொண்ணுங்கள பாக்கறது இதுல விதிவிலக்கு!!!!!!!////
இதே நினைப்புல இரு,,..
நல்லா மார்க் கிடைக்கும்..
போய் படிக்கிற வழிய பாருப்பா
///என்னைப்போல் பலரும் படிக்காமல் இருப்பார்கள் என்பதால் அவரது அனுமதியின்று வெளியடப்படுகிறது.///
அவரு ரொம்ப நல்லவரா இருப்பாரு போல??
ஏதும் கேசு கீசு போடலையா??
// SP.VR. SUBBIAH said...
நேரத்தை திரும்பப் பெறமுடியாது. திட்டமிட்டு நேரத்தைச் சரியாக உபயோகிப்பவனுக்கு இந்தப் பிரச்சினையே இருக்காது!//
சீரியஸாக யோசிச்சா இப்படித்தான்!!!!!!!!
ஃஃ
நல்ல பணியா ??
அப்படின்னா என்ன????ஃஃ
அது சரி!!!
ஃஃபேச்சுத்துணைக்குக்கூட ஆள் இல்லாமல் - தனியே- இருப்பவர்களுக்கு மட்டும்தான் போரடிக்குமா?/////ஃஃ
இதெல்லா தனிமைல இனிமை காண தெரியாதவனுக்குதா!!!
ஹாஹா
//வீரசுந்தர் said...
பழைய தமிழகத்துல யானைக் கட்டி போரடிச்சாங்க.
இப்ப பதிவு போட்டு போரடிக்கிறாங்க. நல்ல முன்னேற்றம்! :-))//
ஆஹா கிளம்பிட்டாங்கயா!!!!!!
ஃஃதனியாகவே இவ்வளவு கும்மி போட்ட அணிமாவிற்கு கும்மிதிலகம் என்ற பட்டம் கொடுத்து கவுரவிக்கிறேன்ஃஃ
வழிமொளிகிறேன்
/இப்பொது இங்கு மின்வெட்டு ஏற்படும் வருகிறேன்...
நன்றி...//
ஆஹா கிறேட் எஸ்கேப்பு!!!!!!!
நண்பர் அடலேறு(http://adaleru.wordpress.com) சொல்லி இருப்பது என்னவென்றால்:
தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..
தமிழ் ஸ்டுடியோ…
நிகழ்ச்சி பற்றி:
குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…
தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு
மேலும் விபரங்களுக்கு:
9444484868, 9894422268, ௯௮௪0௬௯௮௨௩௬
உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….
அடலேறு
நீங்களும் இதை உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
தனியாக கும்மி போட்டு போரடித்த சுபாஸ் வாழ்க...
வாத்தியார் வருகைக்கு நன்றி
//கூடுதுறை said...
தனியாக கும்மி போட்டு போரடித்த சுபாஸ் வாழ்க...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )
அப்ப்ரைசல் இருப்பதால்,
மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..
( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )
உங்களின் அனுமதியில்லாமல் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
கலந்துகொள்வீர்களெனும் நம்பிக்கையில்!!!
தகவல்களுக்கு
http://hisubash.wordpress.com
நன்றி
Post a Comment